(Reading time: 10 - 20 minutes)

01. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

Avalukku oru manam

றைவா உனது படைப்பின் ஒவ்வொரு

உயிர்க்கும் காரணம் காரியம் உள்ளதென்றால்

எனது வாழ்வின் காரணம் என்னவோ

கும்பகோணம்

இது கோவில்களின் நகரம். கும்பகோணத்திலிருந்து எந்த திசை சென்றாலும் கண்டிப்பா ஒரு பிரசித்திபெற்ற கோவில் இருக்கும்.

இங்க தாங்க நம்ப கதையோட நாயகிய அறிமுக படுத்த போறேன். அமைதியான பசுமையான அந்த இடத்தில் அழகாக இருந்தது அந்த வீடு. பழங்கால கட்டிடகலையோடு இக்கால கட்டிட கலையும் இணைந்து இருந்தது.

மார்கழி மாதம் அதன் குளிரோடு அந்த வைகறை பொழுதும் விடிந்துக்கொண்டிருந்தது.

அந்த வீட்டில் மாடியில் உள்ள அந்த அறையின் முன்பு காபியுடன் நின்றுக்கொண்டிருந்தார் கனகம்.

“ஏய்..,கதவ திறடி..”என்று அந்த கதவை தட்டிகொண்டிருந்தார் கனகம்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

“அய்யோ..,இந்த அம்மா வேற மிட்நைட்ல எழுப்புறாங்க,கவி.., ஏய்..,அந்த கதவை  திறடி...”என்று அருகில் கையை தடவிப் பார்த்த அனன்யா.   கண்ணை கசக்கிக்கொண்டு எழுந்தாள். குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம்கேட்க கவி குளிக்கிறாள் என்று புரிந்துக்கொண்டவள்,எழுந்து சென்று கதவை திறந்தாள்.

கதவை திறந்தவள் ,அங்கு அவளது அன்னை கனகம் காபி ட்ரேயுடன் நின்றுக்கொண்டிருந்தார்.

அவரை பார்த்தவள் நடுவுல கொஞ்சம் பக்கம் விஜய்சேதுபதி மாதிரி ”அப்ப....யாருட இந்த பொண்ணு..”என்று தன் தாயைப் பார்த்துக் கூறினாள்.

“என்னமா..,காலையிலே இவ்வளவு  மேக்கப் போட்டுட்டு பேய் மாதிரி வந்து பயமுறுத்துற என்றுக் கேட்டவளின் காதை திருகினார் கனகம்.

“ஆ.....”என்று அனன்யா கத்த அந்த நேரம் பார்த்து குளித்துவிட்டு வெளியில் வந்தாள் கவி.

அவளைப் பார்த்தவர், அனன்யாவின் காதை விட்டுவிட்டு  கவியை நோக்கிச் சென்றார்.

“கவிம்மா..,இந்தாட காபி...”என்று குளித்து வெளியே வந்தவளுக்கு காபி கோப்பையை எடுத்துக்கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்ட கவி “தேங்க்ஸ்மா..” என்றுக் கூறிக்கொண்டு அதை சுவைக்க தொடங்கினாள். (காபிக்கு பேர்போனா கும்பகோணத்துல இருக்கும் போது கனகம்மா கொடுத்த காபியைப் பற்றி சொல்லவா வேணும்.....)

அதைப் பார்த்த அனன்யா அவர்க் கையில் இருந்த இன்னொரு கோப்பையை எடுத்து குடிக்க தொடங்கினாள். அதை பார்த்த கனகம்

“ஏய்..,காலையில பல்ல கூட வெளக்காம...” என்று அவர் பேசி முடிப்பதற்குள்

“ஆ.....” வென்று கடிகாரத்தைப் பார்த்துக் கத்தினாள் அனன்யா.

“ஏய்..,எதுக்குடி கத்துற..”என்ற கனகத்திடம்

“ஏ..மா, ஒரு பச்சைக் குழந்தைய காலையில 4.40கே எழுப்பி விட்டுட்ட, இவ என்னான குளிச்சிட்டு வந்துருக்கா, நீ என்னான அதுக்கு மேலபோய் மேக்கப்லாம் போட்டுட்டு வந்துருக்க...,என்னமா நடக்குது...,நீங்க ரெண்டு பேரும் நல்லாதான  இருக்கீங்க....ஒரு வேல..”

“ஏய்..”என்று கனகம் ஆரமிப்பதற்க்குள்

“அம்மா நீங்க போங்க...”என்று அவரை அனுப்பி வைத்த கவி,அனன்யாவிடம்

வந்தவள்

“போய் குளிச்சிட்டு வா அனு”

“எதுக்குடி இந்த காலையில இல்ல இல்ல மிட்நைட்ல குளிக்க சொல்லுற..”

“ஏய் நேத்து அப்பா என்ன சொன்னங்கனு ஞாபகம் இருக்கா...” என்ன சொன்னாரு என்று கவிக் கேட்க்க அதை யோசிக்க தொடங்கிய அனன்யாவை பார்த்த கவி தலையில் அடித்துக்கொண்டு

“அப்பா இன்னைக்கு கோவிலுக்கு போகணும் அபிஷேகம் பண்ணனும் சொன்னாங்க...,ஞாபகம் இருக்கா இல்லையா..” என்று கவி முடிப்பதற்குள் அனன்யா அங்கு இல்லை. குளிக்க சென்றுவிட்டாள்.அதைபார்த்த கவி சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

கரெக்ட்டாகா 5.00 மணிக்கு அனன்யாவும்,கவியும் கீழே ஆஜராகிவிட்டார்கள். மார்கழி மாதம் என்றாலே அபிஷேகமும்,பஜனைகள் தான் ஞாபகம் வரும். (காலையில அந்த கோவில் ப்ராசாதம் தருவாங்க பாருங்க...அதுதான நமக்கு முக்கியம்)

அனன்யாவின் குடும்பமும் கிளம்பிவிட்டது கோவிலுக்கு.ஒரு வழியாக அபிஷேகம் கொடுத்து வீட்டுக்கு வந்தனர்.

கனகம் அவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான புடவை எடுத்திருந்தார், அதைதான் அவர்கள் இருவரும் கட்டி இருந்தனர்.காலை உணவை முடித்துவிட்டு அனைவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர்.

அப்பொழுது அனன்யாவின் சித்தி பையன் அபினவ் அனன்யாவிடம் வந்து

“அனு நீ இன்னைக்கு ஊருக்கு போறியா...”

“ஆமாடா செல்லக்குட்டி...” என்றாள் அனன்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.