(Reading time: 10 - 20 minutes)

ன்னடா இது இதுங்களுகுள்ள என்ன பிரச்சனை அப்படின்னு அமர் யோசிக்க யாமினி கவிக்கு அழைத்தாள்.

“சொல்லு யாமி..”

“என்னடா பிரச்சனை..”

“ஒன்னும் இல்ல...”

“ஒன்னோட குரங்கு புத்திய காமிச்சிட்டியா..” இது வரைக்கும் அமைதியாக ஒட்டு கேட்டிருந்த அனன்யா, கவியிடம் இருந்து மொபைலை வாங்கியவள்

“ஆமா மினி,இவ ஓவரா சீன் போடற,இன்னைக்கு என்ன பண்ணா தெரியுமா ...”என்று நடந்ததை அவளிடம் கூறினால் அனன்யா. அதை அங்கிருந்த அனைவரும் கேட்டுக்கொண்டுதான் இருந்தனர்.

“சரி விடு அனு,அவளை பத்தி தான் நமக்கு தெரியும்ல..”அப்படி என்று யாமினி கூறினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

“ம்ம்..”

“சரி ஸ்பீக்கர்ல போடு, நம்ப புது பாஸ பத்தி சொல்லுறேன்...”

“ம்ம்...” என்றுக் கூறி ஸ்பீக்கர் ஆன் செய்தாள் அனன்யா.

“கவி,அனு..,நம்ப பாஸ் எவ்வளவு handsome guy தெரியுமா...”என்று ஆரம்பித்து வைத்தாள் மித்ரா. அவளை முறைத்த அமர்

“அவளை விடு கவி,அவர் நம்பல நல்லா தெரிஞ்சு வச்சிருக்காரு தெரியுமா..” என்று கூறினான்.

“அவரு ஒன்னும் சும்மா தெரிஞ்சு வச்சிருக்குல,அவர் தான் நமக்கு இனிமே டீம் லீட், புது ப்ராஜெக்ட் அவருதான் கைடு பண்ண போறாரு..”என்றான் அர்னவ்.

“ஆமா அனு,நீங்க வந்த பிறகு பேசுறன்னு சொல்லிருக்காரு ஆகாஷ்..”என்றாள் மித்ரா.

“யாரு மிது ஆகாஷ்..”என்றுக் கேட்டாள் அனன்யா.

“நம்ப பாஸ் தான் சரி, நாளைக்கு காலையில சீக்கிரம் வந்துடுங்க, அம்மா குடுத்து விட்டதலாம் ரெண்டுபேரும் மட்டும் திங்காதிங்க...”என்றாள் மித்ரா.

“பாய்...”என்றுக் கோரசாக கத்திமுடித்தனர்.

அழைப்பை துண்டித்துவிட்டு மொபைலை கவியை பார்க்காமல் நீட்டினாள் அனன்யா. கவி வாங்காமல் இருக்கவே அவளை திரும்பிப்பார்த்தால்,கவியோ சீட்டில் கண்ணை மூடி சாய்ந்துக் கொண்டிருந்தாள்.அவள் முகத்தில் தெரிந்த எதோ ஒன்று அனன்யாவை தாக்க அமைதியாக இருந்தால் அனன்யா.

அனன்யா பேசி முடித்ததும் யாமினியைப் பார்த்த சுதாகர்

“மினி எதுக்கு கவி இப்படி இருக்கா,உனக்கும் அனுவுக்கும் கூடவா தெரியல..”

“ஆமா அண்ணா,நாங்க அவக் கூட இல்லாத அந்த நாலு வருஷத்துல அவ மொத்தமா மாறிட்டா,அதுக்கு முன்னாடி இந்த பிரச்சனை இருந்தது அவளுக்கு,ஆனா அவ இப்படி இல்ல..”என்று பெருமூச்சி விட்டாள் யாமினி.

“கண்டிப்பா..,சரியாகும்..”என்றாள் மித்ரா.

“ஓகே..,டைம் ஆகிடுச்சு போகலாம்..”என்று அர்னவ் கூற அனைவரும் எழுந்து அவங்களது வேலையை பார்க்க சென்றனர்.

பேருந்திலோ கவியின் நினைவுகள் தறிகெட்டு ஓடிகொண்டிருந்தது.

காலையில் நடந்த நிகழ்வுகளோ அல்லது அந்த ஆகாஷ் என்ற பெயரோ அவளுக்கு புதைந்து போனா நினைவுகளை அவளின் நினைவலைகளில் கொண்டு வந்தது.

என்னதான் அனன்யாவின் அம்மா,அப்பாவை அம்மா,அப்பா என்றுக் கூப்பிட்டாலும்,அவர்கள் அவளது தாய் தந்தை ஆகிவிடுவார்களா....    அவளது கண் முன் அவளது உறவுகளின் முகம் வந்து சென்றது,அதனுடன் தேவை இல்லாத நினைவுகளும் அவளது மனதில் தோன்றிதான் சென்றது.

உறவுகள்  தொடர்கதை உணர்வுகள் சிறுகதை

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்                                                   

ஆம்,உறவுகள் என்றும் தொடர்கதை மட்டும் அல்ல,விடுகதை கூட.ஒரு உறவு நம்மை எப்பொழுதும் மகிழ்ச்சியில் வைத்திருப்பதில்லை. மனவேதனையை தராத எந்த உறவும் இந்த உலகில் இல்லை.எப்பொழுதும் நமது வாழ்க்கை புரியாத புதிர்தான்.

ஆகாஷ் அந்த பெயர் இது வரை அவளது வாழ்க்கையில் பிரிக்க முடியாத, இனிமேலும் பிரிக்க முடியாத பெயர்....

உனது  பெயரை நான் கேட்கும்

சமயத்தில் அது என்னுள்

சிலிர்ப்பை ஏற்படுத்தாமல்

கோபத்தை ஏற்படுத்துவது ஏனடா

என் உயிரோடு சேர்ந்த உன்

பெயர் என்னை சந்தோசபடுத்தாமால்

என் மனதை வதைப்பது ஏன்....

யார் இவள்,இவளது பிரச்சனை தான் என்ன...,மித்ரா சொன்னது போல் இது சரியாகிவிடுமா...  

நான் அவகூட பயணம் செய்ய போறேன், நீங்களும்  என்கூட துணைக்கு வரிங்களா..,கவலை படாதிங்க உங்களுக்கும் நானே சேர்த்து டிக்கெட் எடுத்துடேன்.                                                     

ஓகே வா,எல்லாரும் என்னோட மறக்காம பயணம் செய்ய வாங்க. எனக்கு  ரூட் சரியா தெரியாது,அதனால என்ன கரெக்டா கைடு பண்ணுங்க...

hi frds, thank u chillzee. இது என்னோட முதல் கதை.உங்களோட ஆதரவும்,கமெண்ட்ஸ்ம் எனக்கு வேணும்.கதையை பற்றிய கருத்துகளை கண்டிப்பா சொல்லுங்க.அது எனக்கு ரொம்ப ஹெல்பா இருக்கும்.

தொடரும்

Episode # 02

{kunena_discuss:1099}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.