(Reading time: 12 - 23 minutes)

02. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

Avalukku oru manam

லகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம்

நினைவுகள் பல சுமக்கும்,நிஜத்தினில் எது நடக்கும்

விரல் நீட்டும் திசையில்,ஓடாது நதிகள்

நதி போகும் திசையில் நீ ஓடு

உன்னை வாட்டி எடுக்கும், துன்பம் நூறு

இருக்கும்,தடை நூறு கடந்து போராடு(உலகினில்...)

கடலினில் கலந்திடும் துளியே,கவலை எதுக்கு

அலையுடன் கலந்து நீ ஆடு,வாழ்க்கை உனக்கு

உறவுகள் உனக்கு இனி உனக்கெதுக்கு,உலகம் இருக்கு

வலிகளை தாங்கிடும் கல்லில்,சிலைகள் இருக்கு

அலைகள் அலைகழிக்கும் ஓடம் தான்,கடலை

தாண்டி வந்து கரையேறும்,ஊசி துளைக்கும் துணி

மட்டும் தான் உடுத்தும் ஆடை என்று உருவாகும்

இருளில் இருந்தே வெளிச்சம் பிறக்கும் எப்போதும்(உலகினில்...)

கனவுகள் சுமந்திடும் மனமே,உறக்கம் எதற்கு

இருக்குது உனக்கொரு பாதை,நடக்க தொடங்கு

தயக்கங்கள் இனி உனக்கெதுக்கு,துணிந்தபிறகு

நடப்பது நடக்கட்டும் வாழ்வில,கடக்க பழகு

இடிகள் இடிக்கும் அந்த வானம் தான் உடைந்து

உடைந்து விழுவதில்லை எப்போதும்

அடியை தாங்கி கொல்லும் நெஞ்சம் தான்

அடுத்த அடியை வைத்து முன்னேறும்

நினைப்பின் படியே எதுவும்,நடக்கும் எப்போதும்(உலகினில்...)

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதலும் நட்பும் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

ழைய நினைவுகளின் தாக்கத்தில் கண்களை மூடி சீட்டின் பின்னே சாய்ந்தாள் கவி. அவளின் மனதை புரிந்தவள் போல அமைதியாக வந்தாள் அனன்யா.

அவளின் கண்முன்னே அந்த நாட்கள் நிகழ்காலம் போல் விரிந்தது.

அவள் இவ்வுலகம் பற்றி அறியும் முன்னரே இவள் வாழ்கைகுள் நுழைந்தவர்.அவளால் மறுக்க முடியாத ஒரு உண்மை, இன்று அவள் இப்படி ஒரு கல்வி அறிவு கிடைத்து இந்த நிலையில் இருக்க அவரே காரணம்.

இல்லையேல், அவள் ஒரு அனாதை விடுதியில் இருப்பாளோ அல்லது இவ்வுலகில் இருந்திருப்பாளோ யாருக்கு தெரியும்..

அவளுக்கு தானாகவே எண்ணங்கள் அவளது ஐந்து வயதை நோக்கி சென்றது.

தாய் இறந்தது கூட தெரியாமல் தனது தாயின் மேல படுத்திருந்தாள் கவி. அவளை பொறுத்தவரை அவளது தாய் உறங்கிக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு அப்பொழுது தெரியவில்லை அவளது தாய் இனி தன்னிடம் வர மாட்டார் என்று. அனைவரும் அவளை பார்த்து அழுதுக்கொண்டு இருந்தனர்.அவர்கள் எதுக்கு அழுகிறார்கள் என்றுகூட அவளுக்கு தெரியவில்லை.

அவளது சாந்தி அத்தை அவளை கட்டிக்கொண்டு அழுதபோது அவர்களது கண்ணை துடைத்துவிட்டு அழகூடாது குண்டு அத்தை என்று அவள் கூறியதும் மேலும் வெடித்து அழுதாள் அந்த பெண்மணி.தனது தாயின் மரணத்தை கூட அறியாமல் இருக்கும் அந்த சிறுபெண்ணை பார்த்து.

அந்த தெருவில் இருக்கும் அனைவரின் செல்லபிள்ளை அவள்.அவளது மழலை மொழிக்கு அனைவரும் அடிமை.அந்த வயது குழந்தைகளுக்கு இருக்கும் துடுக்கு தனத்தை விட அவளிடம் அதிக துடுக்குதனம் இருக்கும்.

அதுவே அவளை அனைவருக்கும் பிடிக்க காரணம்.அதனுடன் சேர்ந்த ஒன்று அவளது ஞாபகசக்தி.அவளது தாய் கவியரசி அப்படிபட்டவள்,அனைவரிடமும் அன்பாக பேசும் குணமுடையவள்.அனைவரும் அழுதுக் கொண்டிருந்தனர் அவளை தவிர.

அப்பொழுது ஐம்பது வயது மதிக்க தக்க பெரியவர் ஒருவர் உள்ளே வந்தார். அவரை அங்கிருந்த யாருக்கு அடையாளம் தெரிந்ததோ இல்லையோ அவளுக்கு தெரிந்தது. அவள் அன்னை அடிக்கடி அவரது புகைப்படத்தை காட்டி அவர் அவளது தாத்தா என்றும்,அவரை மிகவும் மதிக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

அவரை பார்த்ததும் “தாத்தா “ என்று கூறிக்கொண்டு அவரை நோக்கி ஓடினாள். அவரது கால்களை கட்டிக் கொண்டாள். அவளது தலையை வாஞ்சையுடன் கோதி விட்டார் அந்த பெரியவர்.அவரும் அழுது இருந்தார். அவரிடம் இருந்து ஓடி தனது அன்னையின் உடலிடம் வந்தவள் அவளது அம்மாவை எழுப்பினாள். ”அம்மா.தாத்தா வந்து....ருகாங்க எழுந்திரு அம்மா..”என்று அவள் கூற அங்கு இருந்த அனைவரும் அழுதனர்.

நேராக தனது தாத்தாவிடம் வந்தவள், ”தாத்தா, அம்மா தூங்கு...அதனால நாம அப்புறம் வரலாம், வாங்க நாம விளையாடலாம்...”என்று தனது பிஞ்சு கரத்தால் அவரது கரத்தை பற்றினாள் கவி.அந்த சின்ன குழந்தையிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் அவர் பார்க்க, அவளுக்கு அடுத்து அறிமுகமானவர் நடராஜன் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.