(Reading time: 12 - 23 minutes)

டேய் நீங்க எதுக்கு சிரிகிரிங்கனு தெரியும்.என்ன பாத்துதானு தெரியும்.உங்களுக்கு வைட் பண்ண சொன்னானு சாப்பிடாம இருக்குறது என்னோட தப்பு..”என்று கூறிகொண்டே அவைகளை பிரிக்க ஆரம்பித்தால் மித்ரா.

அனுவின் அம்மா கொடுத்த அனைத்து அயிட்டங்களையும் சுவைத்த பின்பு தான் அர்னவ் உணர்ந்தான் கவி அவனிடம் பேசவில்லை என்று.

“கவி..”என்று அவளை அழைத்தான் அர்னவ்.

ஆனால், அவனை அவள் கண்டுகொள்ளவில்லை.சற்றுநேரம் யோசித்தவன்

“இளவரசி அவர்களுக்கு அடியேன் மேல் என் இந்த கோபம் என்று அறிந்துகொள்ளலாமா ” என்று கேட்க சிரிப்பை கட்டுபடுத்த முடியாமல் அதைமறைக்க தனது கைப்பையிலிருந்து மொபைலை எடுத்து ஒரு பாடலை ஓடவிட்டாள் கவி.

நண்பா என்ன மறந்திடீயா,தோழா என்ன மறந்திடீயா

மச்சி என்ன மறந்திடீயா, மாமு என்ன மறந்திடீயா

தோழா உந்தன் தோளில் சாய்ந்தாள் போதும் போதும்

தாய்மடியில் சாய்ந்தது போல் ஆகும் ஆகும்

பாடல் கேட்ட உடனே அர்னவ் யோசிக்க ஆரம்பித்தான், அப்படி நம்ப என்னத்த மறந்தோம். இவ ஊருக்கு போனப்ப கூட போன் பண்ணி பேசிக்கிட்டுதானே இருந்தேன். என்னத்த மறந்தேன் என அர்னவ் மட்டும் இல்லாமல் அவர்களது குருப்பே யோசித்துக் கொண்டு இருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

அர்னவ் கவியிடம் பேச ஆரம்பித்த உடனே அனைவரும் அவர்களை கவனிக்க ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் யாருக்கும் என்ன என்று தெரியவில்லை.ஆனால் சாப்பிடுவதற்கேன்றே ஒரு ஜீவன் இருக்கே அதுக்கு புரிந்தது.

அது வேற யாருமில்லை நம்ப மித்ராதான். அவதான் இப்ப நம்ப அர்னவுக்கு ஆபத்தாண்டவரா இருக்கபோறா.

சுத்தி சுத்தி பார்த்து யோசித்தவன், மித்ராவின் சைகையில் புரிந்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.அப்படி எங்கதான் போறான்.

கவியின் முன் மூன்று ஐஸ்கிரீம் கப் கொண்டுவந்து வைத்தான் அர்னவ். இது அர்னவுக்கும்,கவிக்கும் இருக்கும் ஒரு ஒப்பந்தம் மாதிரி.தினமும் காலையில் அர்னவ் கவிக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கி தந்துவிடுவான். அதைதான் அவன் இன்று மறந்துவிட்டான், அதற்குதான் கவி அவனிடம் பேசாமல் இருந்தாள்.

“தேங்க்ஸ் அர்னவ்” என்று அதை சுவைக்க ஆரம்பித்தாள் கவி. மித்ரா அதில் இருந்து ஒன்று எடுக்க கை நீட்ட அவள் கை தட்டிவிட்டு அவளே மூன்றையும் சாப்பிடுவேன் என்று எடுத்து வைத்துக்கொண்டாள். உடனே மித்ரா அர்னவை பார்த்து நான் தான உனக்கு ஞாபகம் படுத்தினேன் எனக்கு ஒழுங்கா வாங்கி தா இல்ல நான் தான் ஞாபக படுத்தினேனு சொல்லிடுவேன் என்று சைகையால் மிரட்டினாள் மித்ரா. அதனால் அனைவருக்கும் ஐஸ்கிரீம் வாங்கி வந்து தந்தான் அர்னவ்.

அனைவரும் காண்டீனில் இருந்து தங்களது கேபின் நோக்கி சென்றனர். அர்னவின் அருகே சென்ற கவி “டேய் டுயுப் லைட்டு, மிது தான் உனக்கு ஞாபகப் படித்திருப்பானு எனக்கு தெரியும் எதுக்கு வேஸ்ட்டா இப்படி காச கரியாக்குற ” என்று அவன் காதில் சொல்லிவிட்டு அவன் நிதானிப்பதற்க்குள் ஓடிபோய்விட்டாள் கவி.

அதை இரண்டு கண்கள் ரசனையாக ரசித்துக்கொண்டு இருந்தது. அந்த கண்களில் ஏக்கம் மட்டுமே இருந்தது.கோவம் இல்லை,குரோதம் இல்லை.

“ என்னவளே உன் தொலை தூர

தரிசனமே போதும் என் வாழ்விற்கு

உன் குரும்புகளின் ஞாபகங்கள்

போதும் என் உதடுகளில்

சிரிப்பு வாழ்வதற்கு...”

இவர்களோட எம்.டி அமெரிக்கா சென்று உள்ளதால்,இப்போது வரும் ஆகாஷ் அவர்களது டீம் லீட் ஆக மட்டும் இல்லாமல்,அந்த கம்பெனியின் தற்காலிக எம்.டி யாகவும் இருந்தான் ஆகாஷ்.

அனைவரும் தங்களது கேபினில் வந்து அமர்திருந்தனர், அவர்களது ப்ராஜெக்ட் போன வீக்கோடா முடிந்து விட்டது. அதனால் அவர்களுக்கு பெரிய வொர்க் ஒன்றும் இல்லை.

அவர்கள் ஆகாஷின் அழைப்பிற்காக காத்துக்கொண்டிருந்தர்கள்.

அவங்க போய் எம்.டியப் பார்க்கறதுக் குள்ள இவங்களப்பதி சொல்லிடுறேன்.என்ன ஒரு எபிசோடு முடுஞ்சியும் இவங்கள உங்களுக்கு இன்ட்ரோ பண்ணலைனா என்ன ஒரு வழி பண்ணிடுவாங்க.அதனால நம்ப உளவுதுறை என்ன சொல்லிருக்குனு பார்போம்.

மர்-ஒரு எது நடந்தாலும் கேர் பண்ணிக்க மாட்டான்.மித்ரா கிட்ட மாட்டிகிட்டு பல நேரங்களுள்ள முழிப்பான்.இவங்களுக்கிடையில லவ் ஸ்டோரி ஓடுறதுக்கு சான்ஸ் இருக்குறதா உளவு துறை ரிப்போர்ட் பார்க்கலாம்.

அர்னவ்-இவனப் பத்தி சொல்ல ஒன்னும் இல்ல.நல்ல பையன்,ரொம்ப ஈஸியா எல்லாரையும் புரிஞ்சிக்குவான்.அதுதான் இவனோட ஸ்பெஷல்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.