(Reading time: 12 - 23 minutes)

பாப்பா, இங்க வாங்க..”என்று தனது தாத்தாவின் பக்கத்தில் இருந்தவர் அழைக்கவும் ,தனது அன்னையை திரும்பி பார்த்தது அந்த மழலை,தனது அன்னை உறங்குகிறாள் என்று நினைத்து, தனது தாத்தாவிடம் “தாத்தா நான் அவர் கிட்ட போட்டா...” என்று கேட்டாள் அந்த மழலை.

“ம்ம்..” என்று அவர் கூறியதும் அந்த புதியவரிடம் சென்றாள்.

“ தாத்தா ,உனக்கு யாரு..”என்று கேட்டவளிடம் “அப்பா”என்றான் புதியவன்.

“ஒ..,உன்னோட அப்பா உன்கூட இருக்காரா..,என் அப்பா வருவாரு...,இன்னும் ஒன்னு ..”என்று கைவிட்டு எண்ணி மூன்று விரல்களை காட்டி” நான்கு மாசத்துல ...”என்றுக் கூறினாள்.அந்த நேரத்தில் அனைவரும் நாராயணனிடம் பேசி அவளது இறுதி காரியங்களை ஆரம்பித்திருந்தனர்.

“ஆமா..,நீ..,உன்ன நான் எப்படி கூப்பிடறது,உன் பேர் என்ன..”என்று கேட்டாள் கவி.

“என் பேர் நடராஜன் குட்டிம்மா,உங்க மாமா..”

“ஐ..,நடராஜன் மாமாவா..”.என்று தனது பிஞ்சு கரத்தை தட்டினாள் கவி.

அதன் பின் அவள் செய்ய வேண்டிய காரியங்களை அவளது மாமா சொல்ல சொல்ல அந்த மழலை செய்துக் கொண்டிருந்தாள்.

தனது அன்னையை தூக்கி செல்லும் போதுக் கூட “அம்மா, ஊருக்கு போறாங்களா மாமா..”என்று கேட்டவளிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் முழித்தார் நடராஜன். எல்லாமும் ,முடிந்து அவளிடம் வந்த நாராயணன்

“என் செல்லக்குட்டி பேரு என்ன.” என்று கேட்க

“கவி...மலர்..”என கூறினாள் கவி.

“தாத்தா கூட வரிங்களா..”என்று கேட்க “வரேன்” என்று கூறினாள் அந்த மழலை.

“அப்பா இது ஒத்து வருமா,எல்லாரும் ஒத்துக்குவங்களா ,ஆகாஷ் வேற கவிய எதாவது செஞ்சுடா..”என்று மேல பேச போனா தனது மகனை கைகளை காட்டி அமைதி பாடுத்தினார்.

“பார்த்துக்கலாம்..”என்று அவரது ஒரு சொல்லிலே அவரும் அமைதியாகிட அதற்கு மேல் கவி அவர்களுடன் அவர்களது வீட்டிற்கு சென்றாள்.

அவளுக்கு அமைதியையே தராத அந்த வீட்டை நோக்கி..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

னது பழைய நினைவுகளின் தாக்கத்தில் இருந்தவளை தூக்கம் தழுவி இருந்தது. தன்னை யாரோ உலுக்க எழுந்தாள் கவி.அனன்யா தான் அவளை உலுக்கி கொண்டு இருந்தாள். அவர்களது பேருந்து கோயம்பேடு சென்றிருந்தது.

“கவி சீக்கிரம் எழுந்திரி பஸ் கோயம்பேடு வந்துடிச்சு...”என்று கூறிய அனு அவர்களின் உடைமைகளை எடுத்துக்கொண்டிருந்தாள்.

அனன்யாவிற்கு சொந்தமான பிளாட்டில் தங்கியிருந்தனர் இருவரும்.ஒரு வழியாக அவர்களது பிளாட்டை அடைந்து இரவு உணவை முடித்து விட்டு இருவரும் உறங்கிவிட்டனர்.

காலை மணி 6.00யை தொட்டுக்கொண்டு இருந்தது. தனது மொபைலில் இருந்த அலாரத்தை ஆப் செய்துவிட்டு..,இன்னும் ஒரு பத்து நிமிடம் தூங்கிவிட்டு எழலாம் என்று நினைத்து மீண்டும் படுத்துவிட்டாள் கவிமலர்.(அலாரம் வச்சு கரெக்ட் டைம்க்கு நாமெல்லாம் எழுந்துவிட்டாலும்)

மீண்டும் அவள் எழுந்தபொழுது மணி 7.00யை தாண்டிக் கொண்டிருந்தது.

கட கடவென எழுந்தவள் தனது தோழி அனன்யாவையும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு குளிக்கச் சென்றாள்.

குளித்துவிட்டு வந்தவள் தனது தோழியை ஒரு வழியாக குளிக்க அனுப்பிவிட்டு காலை உணவை தயாரிக்க சமையலறைக்கு சென்றாள். ரெண்டு பேருக்கும் தோசை வார்த்தாள்.ஒரு வழியாக சாப்பிட்டு விட்டு இருவரும் தங்கள் அலுவலகத்தை அடைந்தனர்.

ம்.எம் சாப்ட்வேர் சொலுயுஷன்.

தனது காரை பார்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு வந்த அர்னவுடன் இணைந்துகொண்டான் சுதாகர்.

அவர்கள் அலுவலகத்தில் நுழைந்தவுடன் அவர்களை எதிர்க்கொண்டு வந்தாள் அவர்களது பழைய டீம்லீட் மீனா.அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டே அவர்களை எதிர்க்கொண்டாள்.

“என்ன மீனா பயங்கரமா சிரிக்கிரிங்க...” என்றுக் கேட்டான் அர்னவ்.

“உங்க குரூப்கிட்டே இருந்து தப்பிச்ச சந்தோசம்தான் ” என்றாள் மீனா.

“ரொம்ப சந்தோஷ படாதிங்க, திரும்ப உங்ககிட்டையே வந்துவிடபோறோம்” என்றான் சுதாகர்.

“வரது இருக்கட்டும், உங்க குரூப் என்ன கூத்து பண்ணிக்கிட்டு இருக்குனு போய் காண்டீன்ல பாரு.” என்றாள் மீனா.

அப்படி என்ன நடக்குது அங்க என்று இருவரும் காண்டீன் நோக்கி சென்றனர்.

அவர்கள் கண் முன் பார்த்த காட்சியில் வயிறு குலுங்க குலுங்க சிரித்தனர்.கவி,அனு,யாமினியும் அங்கு நாற்காலியில் உட்கார்ந்திருக்க அவர்கள் முன்னிலையில் இருந்த டேபிளில் அனுவின் அம்மா குடுத்து அனுப்பின தின்பண்டங்கள் கடைபரப்பி வைக்க பட்டிருந்தது.

அதை ஏக்கத்துடன் பார்த்தபடி மித்ராவும்,அவளை பார்த்தபடி அமரும் அமர்திருந்தனர்.

இவர்களது சிரிப்பை கேட்டு அனைவரும் அவர்களை நோக்கி திரும்பினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.