(Reading time: 10 - 20 minutes)

பிறகு அவன் கவியைப் பார்த்து,”கவி  நீ வாங்கி வந்த கிப்ட் எல்லாம் நல்லா இருக்கு, நான் போன்ல சொன்னது எல்லாம் வாங்கிட்டு வந்துருக்க ரொம்ப தேங்க்ஸ்..”என்றுக் கூறி அவளது கன்னத்தில் முத்தமிட்டது அந்தக் குழந்தை. கவியும் அவனது கன்னத்தில் முத்தமிட்டு, அவனை மடிமீது உட்கார  வைத்துக் கொண்டாள் கவி.

அவர்கள் இருவரும் மதியம் 1மணிக்கே,சென்னை செல்ல இருப்பதாக கூறி இருந்ததாள்,கனகம் உணவு தயாரித்துக்கொண்டு இருந்தார்.

ஒரு வழியாக அவர்கள் கிளம்பும் நேரமும் வர மதிய உணவை முடித்துவிட்டு அவர்கள் தந்த அட்வைஸ்...இன்னும் பல இத்யாதிகளை வாங்கிக் கொண்டு கிளம்ப ரெடி ஆனார்கள்.

“அனு ஒரு பாமிலி போட்டோ எடுக்கலாமா..”என்று கவி கேட்க

“ம்...”என்றுக் கூறிவிட்டு அனைவரையும் அழைத்து போட்டோ எடுக்க ரெடி செய்தாள் அனன்யா.

கவி போட்டோ எடுப்பதற்காக காமெராவை எடுத்துக்கொண்டு இருந்தாள். அவளின் அருகில் வந்த அனு,”வாடி, போய்  நிக்கலாம் மருது அண்ணாகிட்ட எப்படி எடுக்கறதுனு சொன்னா அவர் எடுத்துடுவாறு..”என்று அவளின் கையைப் பிடித்த அனன்யா அவள் நகராமல் இருப்பதை பார்த்து அவளை நிமிர்ந்து பார்த்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

“அனு நான் பாமிலி போடோனு சொன்னேன்..”

“தெரியும் கவி..”என்று அவளை எரிப்பதுப் போல பார்த்தாள் அனன்யா

“ப்ளீஸ் அனன்யா எதுவும் சொல்லாம நில்லு..”என்று அவள் கூற அமைதியாக போய் நின்றாள் அனன்யா, போட்டோவை கிளிக் செய்தாள் கவி.

அனைவரிடமும் அவள் விடை பெற்றுக் கொண்டு அவர்கள் கிளம்பினர்.

“கவிம்மா நீ இந்த வீட்டுக்கு வந்து பலவருஷம் ஆச்சுடா,வருஷம் வருஷம் வாடா..”என்று கூறிய கனகாம்மாவிடமும் விடை பெற்றுக் கிளம்பினர் அனன்யாவும்,கவிமலரும்.

ஒரு வழியாக பேருந்து நிலையத்துக்கு வந்து அவர்கள் ரிசர்வ் செய்த பேருந்தில் அவர்கள் இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர்.

கவி அப்படி கூறியதிலிருந்து அவளிடம் பேசாமல் இருந்தாள் அனன்யா. அவளை பற்றி அறிந்ததால் எதுவும் பேசாமல் இருந்தாள் கவி.

அவர்கள் வந்து அமர்ந்த சிறிது நேரத்திலே அனன்யாவின்  மொபைல் சிணுங்க ஆரம்பித்து விட்டது. அதன் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள் அனன்யா.

சென்னை:

எம்.எம் சாப்ட்வேர் சொலுயுஷன்.

அந்த நிறுவனத்தின் காண்டீனில் ஒரு ஐந்து பேர் கொண்ட கூட்டணி அமர்ந்திருந்தது

“டேய் அமர் என்னடா சாப்பிடலாம்..”என்று ஆரம்பித்தாள் மித்ரா.

“இப்பதானடி மீட்டிங்ல என்னோட கேக்,ஜூஸ்யையும் நீ தானடி சாப்பிட்ட அதுக்குள்ள பசியா..”என்றுக் கேட்ட யாமினியை முறைத்தாள் மித்ரா.

“அவள எதுக்கு மிது முறைக்குற மினி கரெக்ட்டாதான சொல்லுற..”என்றான் அர்னவ்.

“ நான் உன்கிட்ட ஒன்னும் கேக்கல அர்னவ்..,நான் அமர்கிட்ட தான் கேட்டேன்..” என்று அவனை மித்ரா பார்க்க,அவன் கிழிந்துபோன பர்ஸை அவளிடம் காட்டினான். அதை பார்த்து அனைவரும் சிரிக்க,மித்ராவிற்கு கோபம் கிலோ கணக்கில் ஏறிக்கொண்டே போனது.

“பாருமா என்னோட ப்ரண்டோட பர்ஸ் இப்பவே கிழிஞ்சிடுச்சு ..”என்று அர்னவ் மேலும் அவளை வம்பிழுக்க

“ மிது குட்டிய இப்படி கலாய்காதிங்கடா..”என்று அவளுக்கு சப்போர்டுக்கு வந்தான் சுதாகர்.

“தேங்க்ஸ் அண்ணா” என்றுக் கூறி விட்டு அமரை முறைக்க பார்த்தாள் மித்ரா.

அவளிடமிருந்து தப்பிபதற்காக அவன் கவி,அனு பேச்சை ஆரம்பித்தான் அமர்.

“மினி கவிக்கு போன் பண்ணியா...”

“இல்ல அமர்...”

“சரி நான் கால் பண்றேன்..”என்றுக் கூறி தனது மொபைலில் இருந்து அனன்யாவிற்கு அழைத்தான் அமர்.

  “சொல்லு அமர்..”என்றதுமே அந்தபக்கம் அமருக்கு பெரிய இடி தலையில் விழுந்ததுபோல் இருந்தது. இவ இப்படி மரியாதையா கூப்பிட்டா எதோ ப்ராப்ளம்  இருக்குனு அர்த்தம். டேய் அமர் இன்னைக்கு உனக்கு செம கச்சேரிடா...என்று நினைத்தான் அமர்.

“போன் பண்ணா பேச மாட்ட..”என்று அவனிடம் பாய்ந்தாள் அனன்யா.

“இல்லடா அனு செல்லம் மாமா உன்னோட முகத்த பார்த்து ரெண்டு நாள் ஆச்சுல..”

“சுரேஷ் கூட சொன்னான் உன்கிட்ட எதோ பேசணும்னு ...”

அடிப்பாவி எப்படி கோத்துவிட பாக்குற என்று மனதில் நினைத்தவன்

“ அனும்மா நான் உன்னோட மாமாகிட்ட பேசணும்னு சொல்லலியே..,கிளம்பிடிங்கள..”என்று பேச்சை ஆரம்பித்தான்

“ம்...”

“கவி என்ன பண்றா,சாப்டிங்களா...”

“இங்க பாரு அமர், என்ன பத்தி மட்டும் பேசு, வேற யார பத்தியும் என்கிட்ட கேட்காத, அவங்களுக்குனு  ஒரு நம்பர் இருக்குல, அதுக்கு கால் பண்ணு..”என்றுக் கூறிக்கொண்டே அவனின் அழைப்பை துண்டித்துவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.