(Reading time: 21 - 41 minutes)

ங்கா அப்படி சொல்லியதற்கு வாணி அவளை முறைத்தார்... முதலில் அதிர்ந்த இளங்கோவோ அந்த அதிர்ச்சியை உள்வாங்கிக் கொண்டான்...

"உங்களுக்கு கல்யாணமா...?? என்ன திடிர்னு...?? பொண்ணு பேரென்ன..?? என்ன பண்றாங்க..??" என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்...

"அது திடிர்னு தான் முடிவாச்சு இளங்கோ... அம்மா தான் ஏற்பாடு பண்ணாங்க... நீ கேட்ட கேள்விக்கான விவரமெல்லாம் எனக்கே தெரியாது...

நான் அவசரமா டெல்லிக்கு கிளம்பும்போது தான் அம்மா கல்யாண விஷயத்தை சொன்னாங்க... நான் வந்துப் பேசிக்கிறதா அவங்கக்கிட்ட சொல்லிட்டேன்... இப்போ நேரா டெல்லில இருந்து இங்க தான் வந்தேன்... இனிமே தான் வீட்டுக்குப் போகனும்... அம்மாக்கிட்ட பேசனும்.." என்று சொல்லிக் கொண்டிருந்த போதே...

"நீங்க இன்னும் வீட்டுக்குப் போகலயா..?? இந்த நேரத்துல உங்க வீட்ல உங்களை எதிர்பார்ப்பாங்கன்னு தெரியாதா..??" என்று கங்கா கோபப்பட்டாள்...

"வாணி அக்காக்கு வாங்கினத, அவங்கக்கிட்ட கொடுக்கலாம்னு வந்தேன் கங்கா.."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

"இப்போ இதை கொடுக்கறது தான் ரொம்ப முக்கியமா...?? நேரா முதல்ல நீங்க உங்க அம்மாவை பார்த்திருக்க வேண்டாமா..?? " என்று எரிந்து விழுந்தாள்...

இதைவிட அவள் கோபமாக பேசியபோதே அவன் அமைதியை தான் கடைப்பிடிப்பான்... இந்த கோபமெல்லாம் அவனை என்ன செய்திட முடியும்... "இதை கொடுத்துட்டு நான் வீட்டுக்கு தானே போகப் போறேன் கங்கா... அப்புறம் அங்கேயே தான இருக்கப் போறேன்... அப்புறம் நீ ஏன் இப்படி டென்ஷன் ஆகுற... நான் இப்போ இங்க வந்ததால தான் இளங்கோவை பார்க்க முடிஞ்சது... நான் இப்போ கிளம்பிடுவேன் போதுமா..??" என்றான்... அவளும் அமைதியாகிவிட்டாள்...

"அப்புறம் இளங்கோ... உன்னோட பதிப்பகம் எப்படி போய்ட்ருக்கு...??"

"அதெல்லாம் நல்லா தான் நடக்குது... என்ன நீங்க தான் அங்க வந்து ரொம்ப நாளாச்சு..."

"கொஞ்சம் ஆஃபிஸ்ல நிறைய வேலை இளங்கோ... அதான் பதிப்பகம் ஆண்டு விழா வரப் போகுதில்ல... அப்போ வந்துட்டாப் போச்சு..." என்றான்...

"நானே அதை மறந்தாலும்... நீங்களும், கங்காவும் அதை ஞாபகம் வச்சிக்கிட்டு இருப்பதை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு துஷ்யந்த்.." என்று அவன் நெகிழ்ச்சியாக பேசினான்...

"என்னோட தம்பியோட வளர்ச்சியை பார்த்து நான் கண்டுக்காம விட்டுவிடுவேனா...?? அப்படித்தான் இதுவும்... சரி பதிப்பகம் ஆரம்பிச்சு 3 வருஷம் முடியப் போகுது... இன்னும் அந்த சகுந்தலா யாருன்னு தெரியலையே... நானும் அவங்க வாசகர்களில் ஒருத்தன் ப்பா... எப்போ அவங்களை பத்தி சொல்லப்போற...??" என்று கேட்டதும்... கங்கா அதிர்ந்தாள்..

"கவலைப்படாதீங்க துஷ்யந்த்... அடுத்த ஆண்டு விழா வர்றதுக்குள்ள சொல்ல வச்சுடலாம்..." என்று கங்காவை பார்த்துக் கொண்டே சொன்னான் இளங்கோ...

"சரி அப்போ நான் கிளம்பறேன்... வர்றேன் வாணிக்கா.. வர்றேன் கங்கா..." என்று அவர்களிடம் விடைப்பெற்றவன்,

"எப்போ பதிப்பகத்துல பூஜைன்னு போன் பண்ணிச் சொல்லு..." என்று இளங்கோவிடம் சொல்லிவிட்டு அவன் கிளம்ப... அவன் போகும்வரை வாசலையே பார்த்துக் கொண்டிருந்த இளங்கோ, பின் கங்காவிடம் திரும்ப, அவள் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

"இளங்கோ... துஷ்யந்த் எதுக்கு சகுந்தலாவை பத்தி கேக்கறாரு...??"

"துஷ்யந்த் தானே சகுந்தலாவை பத்தி கேக்கனும்..."

"என்ன ஜோக்கா... அவருக்கு சகுந்தலா யாருன்னு தெரியும் போல இருக்கே..."

"ஹே அப்படியா... எப்போ அவர்க்கிட்ட உண்மையை சொன்ன..??"

"விளையாடாத இளங்கோ... நான் என்ன சொல்லியிருக்கேன்... சகுந்தலாங்கிற பேர்ல நான் எழுதுறது, உனக்கும் வாணிம்மாவுக்கும் மட்டும் தான் தெரியும்... வேற யாருக்கும் சொல்லக் கூடாதுன்னு உன்கிட்ட சொல்லியிருக்கேன்... துஷ்யந்த் பேசறத பார்த்தா.. நீ அவர்கிட்ட சொல்லியிருப்ப போல..??"

"ஹே அப்படியெல்லாம் இல்ல... நர்மதா, யமுனா, இன்னும் மத்த வாசகர்களைப் போல தான் துஷ்யந்தும் கேக்கறாரு... அவர் வாயால அந்தப் பேரை கேக்கும்போது, உனக்கு அப்படி தோனுதுன்னு நினைக்கிறேன்... அப்படின்னா நீ அந்தப் பேர்ல எழுதியிருக்கவே கூடாது..." என்றதும் அவனை திரும்ப அவள் முறைத்தாள்...

"இங்கப்பாரு இளங்கோ... இந்த விஷயம் உன்மூலமா துஷ்யந்த்க்கு தெரியவந்ததா நான் கேள்விப்பட்டேன்னா... அப்புறம் தான் உனக்கு இருக்கு...'

"நான் சொல்லமாட்டேன்னு தான் உன்கிட்ட சொல்லியிருக்கேனே... நான் சொல்லமாட்டேன் போதுமா..?? இப்போ அது பெரிய விஷயமில்ல... அதைவிடு...

நான் ஒருவாரமா ஊர்ல இல்லாதப்ப என்ன நடந்துச்சு... திடிர்னு துஷ்யந்த் கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டிய கட்டாயம் என்ன..??"

"நல்லா கேளு இளங்கோ... துஷ்யந்த் தம்பியோட அம்மா வந்து ஏதோ பேசினாங்க... அதனால இவ தம்பிக்கிட்ட என்ன பேசினான்னு தெரியல... தம்பியும் கல்யாணத்துக்கு சம்மதிச்சிடுச்சு.. என்ன பேசியிருப்பா..?? ஏதாவது மிரட்டியிருப்பா..?? அதான் தம்பி கல்யாணத்துக்கு ஒத்துக்குச்சு... நீயாவது புத்தி சொல்லு இளங்கோ.."

"நான் இப்போ என்ன பண்ணிட்டேன்னு நீங்க இப்படியெல்லாம் பேசறீங்க... துஷ்யந்த் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டது நல்ல விஷயம்.. அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க வாணிம்மா..."

"நல்ல விஷயமா..?? என்ன பேசற கங்கா... கல்யாணம்னா பொண்ணு மாதிரி வெட்கப்பட வேண்டாம்... ஆனா முகம் மலர்ச்சியாகவாவது இருக்கனும் இல்ல...

ஆனா துஷ்யந்த் முகத்தை பார்த்தீயா..?? இதுல அவருக்கு துளி கூட சந்தோஷம் இருக்க மாதிரி தெரியல..."

"என்ன இளங்கோ... நீ புரிஞ்சு தான் பேசறீயா..?? துஷ்யந்த் கடைசி வரைக்கும் இப்படியே தான் இருக்கனுமா..?? அவர் வாழ்க்கையில கல்யாணம், குடும்பம், குழந்தைன்னு எல்லாம் நல்லதா நடக்க வேண்டாமா..?? அதுக்காக தானே நான் துஷ்யந்த்க்கிட்ட பேசினேன்... அதை ஏன் நீங்க ரெண்டுப்பேரும் புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க...??"

"ஏன் துஷ்யந்த் வாழ்க்கையில நடக்க போற நல்லது உன்மூலமா நடக்கக் கூடாதா..?? துஷ்யந்த் உன்னை எவ்வளவு அளவுக்கு நேசிக்கிறாருன்னு உனக்கு தெரியலயா கங்கா..?? நீ அவரை ஏத்துக்கிட்டா தான் அவருக்கு சந்தோஷமே.. அதை ஏன் நீ புரிஞ்சிக்க மாட்டேங்கற.."

"அது நடக்காத விஷயம் இளங்கோ... அதுக்காக துஷ்யந்த் காத்திருக்கிறது வேஸ்ட்... இப்போ அவர் எடுத்திருக்க முடிவு தான் நல்லது... அதை நீங்க ரெண்டுப்பேரும் புரிஞ்சுக்கோங்க...

நீங்க என்னையும், துஷ்யந்தையும் பத்தி மட்டும் தான் யோசிக்கிறீங்க... நான் துஷ்யந்தோட அம்மா பத்தி யோசிக்கிறேன்... அவங்க பையனோட வாழ்க்கையில் குடும்பம், குழந்தைன்னு சந்தோஷமா அமையனும்னு அவங்க எதிர்பார்க்கிறது நியாயம் தானே... அந்த தாயோட அந்த நியாயமான ஆசையை துஷ்யந்த் நிறைவேத்த வேண்டாமா... அதை ஏன் நீங்க யோசிக்க மாட்டேங்கறீங்க...

என்னை விட துஷ்யந்த் மேல அன்பும், அக்கறையும் உங்க ரெண்டுப்பேருக்கும் அதிகமா இருக்குன்னு நினைக்கிறேன்... அது உண்மைன்னா நீங்க துஷ்யந்தோட இந்த முடிவுக்கு ஒத்துக்கோங்க... இதுக்கு மேல இதைப்பத்தி நான் பேச விரும்பல...

நான் லைப்ரரி வரைக்கும் போலாம்னு இருக்கேன் இளங்கோ... வாணிம்மா ஏதாவது டிஃபன் செய்வாங்க.. சாப்பிட்டு கிளம்பு.." என்று இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்...

தனதறைக்கு சென்று கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்... இப்படி இவர்களுக்குள் வாக்குவாதம் நடந்தாலும், அதைப் பெரிது படுத்தாமல்... "வா உன்னை நான் ட்ராப் பண்றேன்..." என்று இளங்கோவே அழைத்துச் செல்வான்... ஆனால் இந்த முறை கங்காவின் பேச்சில் அவனுக்கு உடன்பாடில்லை என்பதால் அமைதியாக உட்கார்ந்திருந்தான்..

ஆனால் கங்கா அதற்கெல்லாம் கவலைப்படவில்லை... அவள் எடுத்த முடிவே உறுதியானதென்ற முடிவோடு வெளியே சென்றுவிட்டாள்... வாணியோ கங்காவை பார்த்தப்படி கவலையாக நின்றிருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.