(Reading time: 18 - 35 minutes)

'னக்கு ரொம்ப கோபம் வருது அபர்ணா. நான் என்ன செய்ய.. எனக்கு நான் சொன்னது யாரவது கேட்கலைன்னா நான் நினைச்சது நடக்கலைன்னா ரொம்ப கோபம் வருது .நான்  கண்டிப்பா என் கோபத்தை குறைச்சுக்கறேன். ப்ளீஸ்.. வருத்தப்படாதே.. அவள் கையை பற்றிக்கொண்டான் அருண்..

'தேங்க்ஸ்...' என்றாள் புன்னகையுடன்

'நான் ஒண்ணும் பெரிய வில்லன் இல்லைமா... நீயாவது என்னை புரிஞ்சுக்கோ ...' சொன்னான் கெஞ்சலான குரலில்

'எனக்கு தெரியும் சிரித்தாள் அவள்' அவன் இப்படி பேசிய தருணங்கள் மிகக்குறைவு என்றே தோன்றியது அவளுக்கு. சில நிமிடங்கள் இதமான பேச்சுக்களுடன் கரைய ... வந்தது அவனது அடுத்த கேள்வி...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்..

'ஆமாம் நீ ஏன் வேலையை ரிசைன் பண்ணே???..'

'அதுதான் அன்னைக்கே ப்ரியா உங்ககிட்டே சொன்னாளே அருண். எனக்கு பிடிக்கலை. அமெரிக்கா போக சுத்தமா பிடிக்கலை..'

'ஏன் பிடிக்கலை. அதெல்லாம் போனா பழகிடும்.. நல்ல சான்ஸ் மிஸ் பண்ணாதே அபர்ணா... என செல்லமில்ல நீ..'

'இல்ல அருண். இந்த விஷயத்திலே என்னை கட்டாய படுத்தாதீங்க ப்ளீஸ்... என்னாலே முடியாது..' அவள் குரல் தவிப்புடன் வந்தது.

'அதெல்லாம் முடியும். கல்யாணம் முடிஞ்சதும் என் பொண்டாட்டியா நீ யூ எஸ் கிளம்பறே. நான் எச். ஆர். கிட்டே பேசி உன் ரெசிக்னேஷனை ஹோல்ட் பண்ணி வெச்சிருக்கேன்...'

இல்லையென தலை அசைத்தாள் அபர்ணா. 'நோ அருண். இது... நான் மாட்டேன்...'

'செய்வே. எனக்காக செய்வே எனக்கு தெரியும். ஒரு வாரம் டைம் உனக்கு. அதுவரைக்கும் நீ ஆபீஸ் வரவேண்டாம். நான் அங்கே பேசிக்கறேன். அதுக்குள்ளே மனசை ரெடி பண்ணிட்டு எனக்கு நல்ல பதிலை சொல்லு..' அவள் கன்னம் கிள்ளி காற்றில் சில முத்தங்களை பறக்க விட்டு விட்டு விறுவிறுவென படி இறங்கி நகர்ந்தான் அவன்.

'என்னால் முடியாது!!! முடியவே முடியாது கூவியது அவள் மனம்.

யோசித்தபடியே கீழிறங்கி வந்தாள் அவள். அதற்குள் கீழே எல்லாரும்  இயல்பான நிலைக்கு வந்திருந்தனர். புன்னகையுடன் அவனது அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தான் அருண்.

அவள் வந்தவுடன் 'அங்கிள்..' அவள் அப்பாவை பார்த்து 'இந்த மாசமே கல்யாணம் நடந்தா எனக்கு சந்தோஷம். உங்க பொண்ணை கேளுங்க. அவளுக்கு ஏதாவது கஷ்டம்ன்னா தள்ளி போடலாம்..' என்றான் அருண் அவள் முகம் பார்த்தபடியே.

'தள்ளிப்போடுங்கள் என்று அவள் சொல்ல மாட்டாள் என்ற நம்பிக்கை அவனுக்கு நிறையவே இருந்தது. அந்த நம்பிக்கையும் பலித்தது.

'சரி' என தான் தலை அசைத்தாள் அபர்ணா.

மகளின் நிறைவான தலை அசைப்பே அவள் அப்பாவுக்கு போதுமானதாக இருந்தது. இந்த வெளிநாடு செல்லும் விஷயத்தில் திருமணதிற்கு பிறகு அவனை எப்படியாவது சமாதானம் செய்துவிடாலம் என்று ஒரு நம்பிக்கை. அவளுக்கு.

'ஏன் அவசரம்??? எங்களுக்கு ஏற்பாடு எல்லாம் பண்றதுக்கு கொஞ்சம் டைம் கொடுங்களேன்...' இது அபர்ணாவின் அம்மா. இன்னமும் இந்த சம்மந்தத்தை அவர் மனம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லையே!!!

'என்ன பெரிய ஏற்பாடு??? உங்க பொண்ணு ஜாதகத்திலும் கல்யாண நேரம் இப்போதான். இதை தள்ளி போடாதீங்க. எங்களுக்கு பெருசா வேறே எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. கல்யாணம் நல்ல படியா நடந்தா சரி...மண்டபம் கூட என் ஃப்ரெண்ட் மண்டபம் இருக்கு. நான் பேசி வாங்கித்தரேன் நீங்க தைரிய்மா இருங்க' முடித்துவிட்டார் அவன் அப்பா. 

அன்றிலிருந்து சரியாக இருபது நாட்களில் திருமண நாள் குறிக்க பட்டிருந்தது. இந்துவின் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த விஷ்வாவின் காதுக்கு இந்த விஷயம் வர திகைத்து போயிருந்தான் அவன்.

'இந்த விஷயம் பரத்துக்கு தெரியுமா??? தெரிந்தால் இதை எப்படி எதிர்க்கொள்வான் அவன்??? அவனிடம் இதை பற்றி கேட்கும் தைரியம் கூட இல்லை விஷ்வாவுக்கு.

டும் ஓட்டத்தில் ஒரு வாரம் கடந்திருந்தது. இந்துவின் உடல் நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்க அவளை வீட்டுக்கு அனுப்பி இருந்தான் விஷ்வா.

சின்ன சின்ன புன்னகை பரிமாற்றங்களையும், தைரியம் கொடுக்கும் ஒரு சில வார்த்தைகளையும் தவிர பெரிதாக வேறெதையும் அவளிடம் பரிமாறிக்கொள்ளவில்லை விஷ்வா.

'நேரம் வரட்டும். எல்லாவற்றக்கும் நல்ல நேரம் வரட்டும்..'

இங்கே பெங்களூரில் வேலைகளில் தன்னை மூழ்கடித்து எல்லாவற்றையும் மறக்க முயன்றுக்கொண்டிருந்தான் பரத்.  அத்தனை சீக்கிரம் மறக்க கூடிய நினைவுகளா அவை???

ன்று காலையில் தனது வீட்டில் அமர்ந்து தினசரியை புரட்டிகொண்டிருந்தான் விஷ்வா. அவன் எதிரில் அவன் அம்மா!!!

எப்போதும் அவர் அணியும் பளபள புடைவைகள், மின்னும் நகைகள் எதுவமே இல்லை அவரிடம். நிறையவே சோர்வு மட்டுமே அங்கே!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.