(Reading time: 18 - 35 minutes)

சோர்வு எதனால்??? உடல் தளர்ந்து போனதாலா??? மனம் தளர்ந்து போனதாலா??? ஏதோ யோசனையுடன் சோபாவில் சாய்ந்து கண் மூடி இருந்த அம்மாவையே பார்த்திருந்தான் விஷ்வா.

'என்னமா ரொம்ப வலிக்குதா???' ஒரு முறை கேட்கவில்லை விஷ்வா. கேட்பது என்ன??? அவருடன் பேசும், ஏன் வீட்டில் இருக்கும் சந்தர்ப்பங்களை நிறையவே குறைந்திருந்தான் அவன்.

அன்று போனில் பரத்திடம் பேசி பிறகு அம்மாவிடம் கொஞ்சம் கொஞ்சம் மாற்றங்கள் தென்படுவதை உணராமல் இல்லை அவன். அறுபதாம் கல்யாணத்திற்கு இன்னும் மூன்றே நாட்கள்.

'நடந்து விடுமா??? நான் நினைத்தபடி எல்லாம் நடந்துவிடுமா??? அவன் யோசித்துக்கொண்டிருக்க  அப்போது வந்தது அந்த அழைப்பு அம்மாவின் கைப்பேசிக்கு,

'ஐயோ... எப்போ.???' அதிர்வலைகளுடன் ஒலித்தது அம்மாவின் குரல். 'சரி நாங்க உடனே வரோம்..' அம்மாவின் குரலில் நடுக்கம்.

அந்த தொலைப்பேசியில் வந்த செய்தி அம்மாவின் தோழியின் திடீர் மரணம் பற்றியது!!! அம்மாவின் கண்களில் கண்ணீர் கட்டிக்கொண்டிருந்தது.

'அம்மா அங்கே போக வேண்டும். கட்டாயம் போக வேண்டும். போய்விட்டு வரட்டும்..' கண்களை மூடிக்கொண்டு பேசாமல் அமர்ந்திருந்தான் விஷ்வா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

தோழியின் வீட்டில் தோழியின் உடலருகே இருந்த அம்மாவுக்குள்ளே கத்தி முனையாய் இறங்கிக்கொண்டிருந்தன அங்கே நடந்துக்கொண்டிருந்த ஒவ்வொரு நிகழ்வுகளும்!!! அங்கே ஒலித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு வார்த்தைகளும்!!!

'நானும் இன்னும் சில நாட்களில் இந்த நிலைக்கு சென்று விடுவேனோ???' அந்த எண்ணமே அவர் உயிர் வரை நடுக்கங்களை பரவ செய்தது.

'பாவம் கடைசி கொஞ்ச நாள் வலியிலே ரொம்ப கஷ்டப்பட்டாங்க..' ஏதோ ஒரு குரல் ஆதங்கத்துடன் சொன்னது. 'யாருக்கு ஆண்டவன் என்ன கணக்கு வெச்சிருக்கானோ நமக்கு எங்கே புரியுது???' பேசியவரையே பார்த்திருந்தார் அம்மா. தலைக்குள்ளே வலி மெல்ல மெல்ல புறப்படும் உணர்வு அவருக்கு.

'எனக்கு என்ன கணக்கு வைத்திருக்கிறானோ அந்த இறைவன்!!!'

தோழியின் அருகே அமர்ந்து கதறிக்கொண்டிருந்தான் அவர் மகன். அவன் அவருடைய சொந்த மகன் இல்லை. வளர்ப்பு மகன் என நன்றாகவே தெரியும் அம்மாவுக்கு.

'கடைசியிலே பையன் மடியிலேதான் உயிர் போச்சு...' யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள் அங்கே.

சுவாசிக்க கூட தோன்றவில்லை அம்மாவுக்கு. அந்த இடத்தில் பரத் இருப்பதை போலவே தோன்றியது அம்மாவுக்கு.

'என் கடைசி நேரத்தில் என் மகன் என்னுடன் இருப்பானா???' எப்படி இருப்பான்??? விஷ்வாவும் என்னை வெறுத்துவிட்டான். விஷ்வாவும் வர மாட்டான்!!! பரத்தும் வர மாட்டான்!!!' கீறி விளையாடிக்கொண்டிருந்தது மனசாட்சி.

இழந்துவிட்டேன் நான். எல்லார் அன்பையும் இழந்து விட்டேன் நான்...' கண்கள் கண்ணீரை தாரளமாக சுரந்துக்கொண்டிருந்தன. தலை விண்விண்ணென தெறித்தது.

'அய்யோ.. ரொம்ப வலிக்குதாமா???' அன்று பரிவுடன் கேட்டானே பரத். 'வருவான். நான் அழைத்தால் பரத் கண்டிப்பாக வருவான். ஒரே ஒரு முறை அவனை அழைத்து விடுகிறேன். நான் செய்தது எல்லாம் தவறு என சொல்லி விடுகிறேன். அதன் பிறகு நடப்பது நடக்கட்டும் எனக்கு.' கண் முன்னே படுத்துக்கிடக்கும் தோழியையே பார்த்தபடி அழுதுக்கொண்டிருந்தார் அம்மா. தோழிக்காகவும், தான் செய்த தவறுகளுக்காகவும்!!!

சில மணி நேரங்கள் கழித்து அவர் வீடு வந்து சேர்ந்த நேரத்திலும் வீட்டிலேயே இருந்தான் விஷ்வா. அழுது அழுது வீங்கிப்போன முகத்துடன் உள்ளே வந்த அம்மா நேராக விஷ்வாவிடம் வந்தார்.

உடல் ரொம்பவே தளர்ந்து போயிருந்தது அவருக்கு. தலை சுற்ற ஆரம்பித்திருந்தது. சுவாசம் அழுந்தியது.

'விஷ்வா...' என்றார் மெல்ல.

'மா... என்னமா செய்யுது..' அருகில் ஓடி வந்தான் மகன்.

'எனக்கு பரத்கிட்டே பேசணும்டா... என்றபடியே மயங்கி விஷ்வாவின் கைகளில் சரிந்தார் அம்மா.

அடுத்த ஒரு மணி நேரத்தில் மெல்ல கண் விழித்தார் அம்மா. கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க வீட்டில் கட்டிலிலேயே படுத்திருந்தார் அவர். அருகில் அமர்ந்திருந்தான் விஷ்வா.

சற்றே தெளிவு பிறந்ததும் அவர் சொன்ன முதல் வார்த்தை 'எனக்கு பரத்கிட்டே பேசணும்டா..'

எதுவுமே பேசாமல் கைப்பேசியில் பரத்தின் எண்ணை அழுத்தி விட்டு அம்மாவிடம் கொடுத்திருந்தான் விஷ்வா.

'சொல்லு விஷ்வா. டாக்டர் சார் ரொம்ப பிஸியா...ரெண்டு நாள் ஆச்சு பேசி...' மறுமுனையில் விஷ்வா இருப்பதாகவே நினைத்துக்கொண்டு கேட்டான் பரத்.

.........................................

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.