(Reading time: 18 - 35 minutes)

'விஷ்வா... சொல்லுடா...'

'நான் விஷ்வா இல்லை. அம்மா பேசறேன்பா...' மறுமுனை தயங்கி தயங்கி சொல்ல... இது என்ன???.இது என்ன??? திடீரென ஒரு புது சந்தோஷம்??? பரபரத்தது பரத்தின் இதயம்.

'நீங்களா.. நான்.... எனக்கு தெரியலை... நான் விஷ்வான்னு நினைச்சிட்டேன்...  சொல்லுங்க என்றான் குரலில் ஏறிய சந்தோஷம் குறையாமல். 'இப்போ தலை வலி எல்லாம் பரவாயில்லையா???'

அவன் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லும் மனநிலையில் இல்லை அவர்.

'எனக்கு உன்னை பார்க்கணும் போலே இருக்கு வர முடியுமா பரத் உன்னாலே???' நேரடியாய் கேட்டே விட்டார் அம்மா.

'வர முடியுமா என்ன??? ஓடி வரேன். எப்போ வரணும் சொல்லுங்க...' கொஞ்சம் கூட கோபமே இல்லாத குரலில் சொல்லும் மகனின் குரல் அம்மாவின் கண்களில் கண்ணீரை கொண்டு வர தவறவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

'நீ... நீ வந்து... இன்னும் ரெண்டு நாளிலே அப்பாவோட அறுபதாம் கல்யாணம் வருது. அதுக்கு வரியா??? வரியா பரத் நீ??? விஷ்வா முதல்லேயே சொன்னான் நீதான் மூத்த பையன்னு... நான்தான் அப்போ என்னனமோ சொன்னேன்...இப்போ... நான்... நீ வருவியா பரத்..எனக்கு உன்கிட்டே நிறைய பேசணும் .' பேச பேச மூச்சு முட்டியது அம்மாவுக்கு.

அம்மாவை விட்டு விழி அகற்றவில்லை விஷ்வா. சின்னதாக ஒரு வெற்றிப்புன்னகை அவன் இதழ்களில்.!!!

'நீங்க ஏன் இவ்வளவு படபடன்னு பேசறீங்க. நான் கண்டிப்பா வரேன். நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க...'

'நீ வருவேதானே அது போதும். அது போதும் எனக்கு... இப்போ இப்போ நான் விஷ்வா கிட்டே கொடுத்திடறேன்...' கைப்பேசியை அவனிடம் நீட்டினார் அம்மா.

'என்னடா விஷ்வா...' என்றான் பரத். 'என்னாச்சு அம்மாக்கு???'

'ம்??? சொல்றேன். நீ நேரிலே வா சொல்றேன்...' என்றான் விஷ்வா நிதானமாக.

அம்மாவுடன் பேசி விட்டானே தவிர அதன் பிறகு பரத்தின் மனதிற்குள் ஆயிரம் குழப்பங்கள். மகிழ்ச்சிக்கும், சலனங்களுக்கும் இடையில் அலைப்பாய்ந்து கிடந்தது மனது. இரண்டு நாட்களாக சரியான உறக்கம் கூட இல்லை.

அன்று அதிகாலை நான்கு மணி!!!!

சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினான் பரத். பல முறை வந்து சென்ற இடம்தான் என்றாலும் இன்று ஏனோ எல்லாம் புதிது போலவே இருந்தது. இங்குமங்கும் ஊஞ்சலாடும் மனதுடன் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தான் பரத்.

முதலில் ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு சென்று தயாராகிக்கொண்டு வீட்டுக்கு செல்லலாம் என்று தோன்றியது. அந்த எண்ணத்துடன் அவன் இரண்டடி எடுத்து வைக்க பின்னாலிருந்து குரல் கேட்டது

'குட் மார்னிங் ப்ரதர்...' அவன் சுழன்று திரும்ப அங்கே சந்தோஷ சிரிப்புடன் நின்றிருந்தான் விஷ்வா.

மெல்ல புன்னகைத்தான் பரத்.

'வாடா... வீட்டுக்கு போலாம்...' அணைத்துக்கொண்டான் அண்ணனை.

'இல்லடா ஏதாவது ஹோட்டல் போயிட்டு ரெடி ஆயிட்டு..அப்புறம்..' பரத்தின் குரல் தயக்கத்தில் மூழ்கி ஒலித்தது.

'தெரியும் நீ இப்படி ஏதாவது யோசிப்பேன்னு... அதான் நான் ஏர்போர்ட் வந்தேன். என்கிட்டே அடி வாங்கி இருக்கியா நீ??? பின்னிடுவேன்... மரியாதையா வாடா வீட்டுக்கு...'

'இல்ல விஷ்வா..'

'பச் ...' அவன் கையை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு நடந்தான் விஷ்வா.

அதிகாலை ஐந்து மணி

வீட்டு வாசலுக்கு சென்று நின்றது அவர்கள் கார். வாசலில் மாக்கோலமும், வாழை மரங்களும் வரவேற்றன அவனை. 

பலநூறு தயக்கங்கள் அழுத்த இறங்கினான் பரத். என்னதான் இருந்தாலும் வீட்டு வாசலில் வந்து நின்றதும் சிறு குழந்தையாய் கண்கள் அம்மாவை தேடி பரபரத்தது நிஜம். அம்மா கண்ணில் படவில்லை.

'எல்லாரும் வந்திருக்காங்களா விஷ்வா???

'யார் வந்தா என்னடா??? நீ இந்த வீட்டு மூத்த பிள்ளை சும்மா ஜம்முன்னு உள்ளே வா..' என்றபடி அவன் தோள் அணைத்துக்கொண்டான் விஷ்வா.

அன்று முழுவதும் பலப்பல கலவையான உணர்வுகளை அவன் சந்திக்க போவதை அப்போது உணரவில்லை பரத்.

அன்று மாலை ஐந்து மணி!!!!

அபர்ணாவின் கை அவன் கைகளுக்குள் இருக்க, தேம்பி தேம்பி அழுதுக்கொண்டிருந்தாள் அவள். அவளது ஒவ்வொரு துளி கண்ணீரும் அவனுக்குள் நெருப்பு துண்டங்களாக இறங்கிக்கொண்டிருக்க, அந்த நொடியில், சரியாக அந்த நொடியில் முடிவு செய்துக்கொண்டான் பரத்

'அருண் இனிமேல் அவள் வாழ்வில் வரப்போவதில்லை என!!!!'

Episode # 13

Episode # 15

{kunena_discuss:982}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.