(Reading time: 7 - 14 minutes)

33. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

ல யுகங்களுக்கு முன்பு….

பசுமை நிற சோலைகளின் மத்தியில் சலசலத்தபடி ஓடிக்கொண்டிருந்தாள் நதி தேவதை…

அவளின் ஓசைக் கேட்டு, வானில் மெல்ல உதயமானான் ஆதவன்… அவனின் செந்நிறக்கதிர்களானது அவளின் மேல் பட்டதும், துள்ளிக்குதித்து தனது வரவேற்பை அவள் தெரிவிக்க, அவனும் அவள் மேனி முழுதும் படர்ந்து, அவளை பொலிவுக்குள்ளாக்க, அவள் முகமோ அந்த கதிரவனின் செயலால் குங்குமமாக சிவந்து போக, அவள் செல்லும் இடமெல்லாம் பின் சென்று, அவளை ஆரத்தழுவி, தன் நாளை இனிதே தொடங்கினான் அவனும்…

அதைக் கண்ட தாமரை மலர்கள் அனைத்தும் தான் இருந்த குளத்தினுள் வெட்கம் கொண்டு மெல்ல தலையை கவிழ்ந்து கொள்ள, நதி தேவதையோ நாணி சிரித்தாள் அழகாய்…

பார்க்க பார்க்க தெவிட்டாத இக்காட்சியை குளக்கரையின் அருகே நின்று பார்த்தபடி ரசித்துக்கொண்டிருந்த இரு கண்களும், அழகிய இரு மலர்கள் போல் இருக்க,

மெல்ல குனிந்து குளத்தினுள் வந்த கரங்களை ஒருமுறையேனும் தொட்டுப்பார்த்திட, மீன்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒன்றோடொன்று மோதிக்கொள்ள,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

நீரில் தெரிந்த பிம்பத்திலாவது சேர்ந்திட முடியுமா என்றெண்ணியபடி, காற்றில் அலைபாய்ந்து வந்த பூக்கள் நிரம்பி அங்கே கூடிட,

தன்னைத் தேடி வந்த பூக்களை அவள் தனது இருகரங்களினாலும் அள்ளி எடுத்த வேளையே, தங்களது ஜென்ம சாபல்யம் தீர்ந்தது போல, ஏக்கம் தணித்துக்கொண்டன, மலர்ந்து விரிந்திருந்த தாமரைகள் அனைத்தும்….

மலர்கள் இருகரங்களிலும் நிரம்பி வழிய, சட்டென்று எதிரே இருந்த மரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த பறவைகள் எழுப்பிய கானத்தில், விழிகள் அங்கே நிலைக்க, இரண்டு மென்மையான தாமரை இதழ்கள் போன்ற அதரங்கள் விரிந்த வேளையே அதற்காய் காத்திருந்தது போல், பறவைகள் கூக்குரல் எழுப்பி அங்கேயே பறந்து கொண்டிருக்க,

பார்வை தானாகவே வானத்தில் பதிய, அப்படியே அது நகர்ந்து நகர்ந்து அந்த ஓங்கி உயர்ந்த மலையின் மீது விழுந்தது…

மலையின் உச்சியில், பனி படர்ந்து எங்கும் தன் வெண்மையை பறைசாற்றிக்கொண்டிருந்த நேரம், அங்கிருந்த பனித்திடலில், அமர்ந்தபடி, ஒற்றைக்காலை நிலத்தில் ஊன்றியும், மறுகாலை நிலத்தில் பதித்திருந்த காலின் மீது போட்டும், ஆள்காட்டிவிரலை மடக்கி, அதனின் மீது கட்டை விரலை வைத்து, கைகள் இரண்டையும் இரண்டு தொடையிலும் வைத்து, எண்ணம் யாவையும், தனது நெற்றிப்பொட்டில் கொண்டு வந்து தியானத்தில் அமர்ந்திருந்தான் அவன்…

அவனின் கரத்தில் அணிந்திருந்த மாலையில் வீற்றியிருந்த ருத்திராட்சமானது சட்டென மாலையிலிருந்து விடுபட்டு நழுவ,

அது அப்படியே பனித்திடலின் கீழ் ஓடிக்கொண்டிருந்த நதியில் விழ, நதியின் போக்குக்கு ஏற்ப, அதுவும் கீழ் நோக்கி வந்தது மலையின் உச்சியிலிருந்து அதன் அடிவாரத்தை நோக்கியபடி…

மேலிருந்து கீழே வந்த நதியானது சந்தோஷத்தில் துள்ளிக்குதித்திட, நீரில் பயணித்துக்கொண்டிருந்த ருத்திராட்சமும் மெல்ல மேலே எழும்பி, நதியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு பகுதியான, தாமரைக் குளத்தில் விழுந்தது…

மலர்களின் நறுமணமும், அதன் கோலமும் கண்ணைக் கவர, மனமே இல்லாது அதனை மீண்டும் குளத்திலேயே விட்டுவிட, கைகள் தன்னையும் அறியாமல் நீரினை அளைய, அவளது உள்ளங்கைகளில் வந்து குடிகொண்டது ருத்திராட்சம்…

அந்த நேரம், ஆலயத்தின் மணி ஓசையும், இறைவனது மங்கல நாணமும் செவிகளில் கேட்க, இதழ்கள் விரிந்து தான் போனது அவளுக்கு,…

ஆம்,,, பார்த்ததும், கவர்ந்திழுக்கும் அழகிய கண்கள், அதில் மலர்கள் போன்ற இரு கருவிழிகள்… தாமரை போன்ற இதழ்கள்… அலை அலையாய் பரந்து விரிந்திருந்த கூந்தல், அதற்கு பெருமை சேர்ப்பது போல் சூடியிருந்த பூக்கள்… அழகே முகமா என்றெண்ண வைக்கும் அளவிற்கு, அப்படி ஒரு பொலிவு அந்த மாசுமருவற்ற முகத்தில்…

ஆம் தனது வதனத்தில் ஒட்டுமொத்த எழிலையும் ஒருங்கே கொண்டிருந்தாள் அந்த இளவரசி…

“அக்கா…………” என்ற அந்த இளவரசியின் இனிய குரல் கேட்டு குளத்தின் பக்கம் வந்தனர் பெண்கள் நால்வர்…

அவர்கள் அனைவரும் அவளின் உடன்பிறந்த சகோதரிகள்…

“இங்கே பாருங்கள்…” என தன் உள்ளங்கையை அவள் விரித்துக்காட்டியதும், அதிர்ந்து போயினர் பெண்கள் நால்வரும்…

தனது தமக்கைகள் நால்வரையும் அவள் சற்றே மிரட்சியுடன் பார்த்தபடி,

“என்னாயிற்று அக்கா… தங்கள் முகம் ஏன் அதிர்ச்சியை பிரதிபலிக்கிறது?...” எனக் கேட்டதும்,

அவளை ஏறெடுத்துப்பார்த்தனர் நால்வரும்…

“சதி… உன் கைகளில் இருப்பதனை முதலில் தூர எறிந்துவிடு…”

நால்வரில் முதலானவள் கூற, அவளோ மறுத்தாள்..

“ஹ்ம்… ஹூம்… இது எனக்கு கிடைத்த்து… நான் இதை எறிய மாட்டேன்… என்னுடனே வைத்துக்கொள்வேன்…”

சொல்லியபடி அவள் தனது உள்ளங்கையினை இறுக மூடிக்கொள்ள,

“பிடிவாதம் பிடிக்காதே சதி… இது நமது எதிரியினுடையது….” என்றாள் இரண்டாமவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.