(Reading time: 28 - 55 minutes)

13. மார்பில் ஊறும் உயிரே!!! - மது

தத்தளிக்கும் அலைகளில் நங்கூரம் நீ!!!

Marbil oorum uyire

பில்லி, இன்டர்நேஷனல் டான்ஸ் பெஸ்டிவல் நம்ம ஊர்ல நடக்க போகுது. நீ கண்டிப்பா பார்டிசிபேட் பண்ற” கல்லூரியில் முதல் ஆண்டின் இறுதியில் இருந்தனர் அபூர்வா சித்தார்த் இருவரும்.

“எங்க காலேஜ் கல்சுரல் மீட்ல அனௌன்ஸ் பண்ணாங்க. உங்க காலேஜ்ல அப்படி எல்லாம் எதுவும் அனௌன்ஸ் செய்யலையா”

“இல்லையே எனக்கு தெரியலையே. எப்படி அப்ளை செய்யணும்” அபூர்வா ஆர்வமாக சித்தார்த்திடம் கேட்டாள்.

“அதெல்லாம் நான் தெரிஞ்சுட்டு வரேன்” சொன்னவன் விரைவில் அதற்கான விதிமுறைகளை அறிந்து கொண்டு அபூர்வாவை  விண்ணபிக்க செய்தான்.

“பூக்குட்டி இந்த டான்ஸ் பெஸ்டிவல்ல நீ தான் கண்டிப்பா பெஸ்ட் பர்போர்மன்ஸ் அவார்ட் வாங்கணும்” விஜயகுமார் மகளை அணைத்து முத்தமிட்டு வாழ்த்து சொன்னார்.

“டாடி சொல்லிடீங்கள்ல. டன்”

ஆரம்ப கட்ட சுற்றுகளில் எல்லாம் மிக எளிதாக தேர்ச்சி பெற்றிருந்தாள் அபூர்வா. ஒவ்வொரு நாளும் பயிற்சிகள் மேற்கொண்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அப்போது தான் அறிவியல் கண்காட்சியில் சித்தார்த்தும் பங்கெடுத்து இருந்தான். இவளின் நடனத்தை தினம் தினம் பார்த்துக் கொண்டிருந்தவன் எண்ணத்தில் உதித்தது தான் “நவரசா டால்”.

“அபி பைனல்ஸ்ல செலெக்ட் ஆகிட்டா” இரு குடும்பமும் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர்.

“பைனல்ஸ்க்கு கூட போக ஒருத்தர்க்கு மட்டும் தான் பாஸ் குடுத்திருக்காங்க” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அபூர்வா சொல்லவும் அவளோடு யார் உடன் செல்வது என்ற விவாதம் நடந்தது.

“சுசி கூட போனா தான் சரியா இருக்கும்” ரத்னாவதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அபூர்வாவின்  முகம் சுருங்கியதை சித்தார்த் பார்த்துவிட்டான்.

“பைனல்ஸ்ல அவங்களே கான்செப்ட் எல்லாம் தருவாங்க. அம்மா கூட போனாலும் ஆடியன்ஸா தான் இருக்கணும்” சித்தார்த் அபூர்வாவை பார்த்த படியே கூறவும் அவள் கண்கள் பளிச்சிட்டன.

“மாமா கூட போனா தான் சரியா இருக்கும். எப்படியும் வீட்ல இருந்தே அவ சலங்கை கட்டிட்டு போக முடியாது. மாமா சலங்கை கட்டி விட்டா தானே பில்லிக்கு ஆடவே வரும்” சித்தார்த் நகைச்சுவையாய் சொல்வது போல தீர்வு சொல்லவும் அபூர்வா அகமகிழ்ந்து போனாள்.

நடுவில் அறிவியல் கண்காட்சியில் சித்தார்த் வெற்றி பெறவும் அங்கு மேடையில் சித்தார்த் அபூர்வாவை உடன் ஏற்றி பரிசு பெற்ற நிகழ்வு விஜயகுமார் மனதை நெகிழ்த்தியது.

“நான் இல்லைனாலும் சித்து பூக்குட்டி கூடவே இருப்பான் எப்போவும்” அவரின் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டது.

சில மாதங்களுக்கு முன் சித்தார்த் டி கோட் செய்திருந்தது எல்லைப் பகுதியில் மிக பலம் வாய்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்றின் முக்கிய முகாமின் இருப்பிடம் பற்றிய தகவல்.

ஷக்தி வாய்ந்த ரேடார் கண்ணிலும் மண் தூவி லாவகமாக தாக்கக் கூடிய திறமையானவர் பட்டியலில் க்ரூப் கேப்டன் விஜயகுமார் பெயர் தான் முதலில் இருந்தது.

“விஜய் இஸ் தி பெஸ்ட் சாய்ஸ்” மிக முக்கியமான உயர்மட்ட பாதுகாப்பு மீட்டிங்கில் ஒருமனதாக அனைவரும் முடிவு செய்தனர்.

“யெஸ் விஜய் டிட் எ பன்டாஸ்டிக் ஜாப் இன் ஆபரேஷன் விஜய். ஒன் கான்ட் பர்கெட் இட்”

(ஆபரேஷன் விஜய் கார்கில் போரின் போது வகுக்கப்பட்ட வியூகத்தின் பெயர்)

விஜயகுமார்க்கு இந்த பணி பற்றிய தகவல் சொல்லப்பட்டதும் மிகுந்த பெருமிதம் அடைந்தார். ஒரு ராணுவ வீரருக்கு நாட்டை காக்கும் முக்கிய பொறுப்பு ஒன்று கிட்டுவது பேரானந்தம் அல்லவா.

ஆனால் ஏனோ அவருக்கு மனதின் ஓரத்தில் ஓர் சிறு சஞ்சலம் தோன்றிக் கொண்டே இருந்தது.

“பூக்குட்டி பைனல்ஸ்குள்ள இந்த ஆபரேஷன் முடிஞ்சிடும். வந்திரலாம்” என்று மனதில் சொல்லிக் கொண்டாலும் தான் வரப் போவதில்லை என்று அவரின் ஆழ்மனதிற்குத் தெரிந்து போனதோ என்னவோ.

“பூக்குட்டி நல்லா ப்ராக்டீஸ் செய்யணும். நீ ஆடும் போது உன் சலங்கை ஒலி காற்றில் மிதந்து வந்து டாடி காதுக்கு கேக்கும். டாடி சீக்கிரம் வந்திருவேன் டா” மகளை அணைத்து தந்தை சொல்லவும்

“கண்டிப்பா டாடி, நான் நல்லா ப்ராக்டீஸ் செய்வேன். நீங்க சீக்கிரமா வந்திருவீங்க தானே டாடி”

ஒரு போதும் அபூர்வா “வந்திருவீங்க தானே” என்று ஒரு சந்தேகத்தோடு கேட்டதே இல்லை. ஏனோ அவளுக்கு இம்முறை அப்படி கேட்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது.

முதன்முறையாக எப்போதும் இல்லாமல் ரத்னாவதியிடம் அபியை சித்து பார்த்துப்பான் என்று  விஜயகுமார் சொல்லவும் ரத்னாவதி சற்று கலங்கித் தான் போனார். இருப்பினும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தைரியமாக  வழியனுப்பி வைத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.