(Reading time: 28 - 55 minutes)

ற்ற பார்மாலிடீஸ் எல்லாம் நான் பார்த்துக்குறேன்” கிருஷ்ணமூர்த்தி சொல்லவும் அவரிடம் ஆவணங்களை ஒப்படைத்தனர்.

நிலா ஒரு புறம் உடைந்து அழ ஆரம்பிக்க சலனமே இல்லாமல் அமர்ந்திருந்தாள் அபூர்வா. சுசீலாவோ தன்னை கட்டுப்படுத்த முடியாமல் விசும்பிக் கொண்டிருந்தார்.

“நிலா பாப்பா அழக்கூடாது. டாடிக்கு ஒன்னும் ஆகல. சீக்கிரமே வந்திருவாங்க. காணாம தானே போயிருக்காங்க” தங்கையை தேற்றிக் கொண்டிருந்தாள் அபூர்வா.

ராணுவத்தில் நன்றாக உறுதி செய்த பிறகு தான் குடும்பத்தாருக்கு செய்தி தருவார்கள்  என்று பதினான்கு வயது நிலாவிற்குப் புரியமால் இல்லை. இருந்தாலும் அக்கா சொன்னால் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அபூர்வாவை நிமிர்ந்து பார்த்தாள்.

அபூர்வா முகம் நிர்மலமாக இருந்தது. சோகத்தின் சுவடோ வேதனையோ துளி கூட அதில் இல்லை.

தங்கையை அழைத்துக் கொண்டு அன்னையிடம் சென்றாள் அபூர்வா.

“அம்மா ஊர்ல யாருக்கும் சொல்ல வேண்டாம் எதுவும் செய்ய வேண்டாம்” சடங்கு சம்பிரதாயம் எதுவும் வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டாள் மகள். ஏனோ அவள் ஆழ்மனது தந்தை இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

அது சரியான ஒன்றா என்று அப்போது யாரும் விவாதிக்க விரும்பவில்லை. இப்போதைக்கு எதையும் தெரிவிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்தனர்.

அபூர்வா நிலாவை உறங்க வைத்துக் கொண்டிருக்க ரத்னாவதியையும் சுசீலாவையும் தனியே அழைத்தான் சித்தார்த்.

“நாளைக்கு அவ காம்படிஷன்ல ஆடணும். மாமாவோட ஆசை அது தான்”

“சித்து அவ நிலாவுக்காக, எனக்காக தைரியமா வெளில காட்டிட்டு இருக்கா. உண்மையில் அவ உடைஞ்சு போயிருக்கா சித்து. அவ எப்படி ஆடுவா” மகளை நினைத்து தான் பெரிதும் கலங்கிப் போனார் ரத்னாவதி.

“அத்தை நான் பார்த்துக்குறேன். உங்களுக்கு ஒகே தானே”

இறுதியாக விஜயகுமார் சொல்லிச் சென்றது ரத்னாவதியின் காதில் ஒலித்தது.

“அபிய நீ பத்திரமா பார்த்துக்கோ சித்து. அவ இந்த டான்ஸ்ல வின் பண்ணனும்னு அவர் தான் ரொம்ப ஆசைப்பட்டார் .அவர் ஆசையை நிறைவேத்தி வை” சித்தார்த் கைகளைப் பிடித்து ரத்னாவதி சொல்லவும் அவரை தேற்றிவிட்டு அபூர்வாவிடம் சென்றான்.

“நீயும் சீக்கிரம் தூங்கு அபி. நாம காலையில் சீக்கிரமே கிளம்பனும்” வெகு சாதரணமாக சொன்னான் சித்தார்த்.

அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள் அபூர்வா.

“எங்கே போகணும்” மெல்லிய குரலில் கேட்டாள்.

“நாளைக்கு பைனல்ஸ் ஞாபகம் இருக்கா இல்லையா” அவன் கேட்டதும் மேலும் திகைத்தாள்.

“நான் இனிமே..” அவள் சொல்ல வரும் முன் சட்டென்று அவள் வாய் பொத்தினான்.

அவள் கைப்பிடித்து உள்ளறைக்கு அவளை அழைத்துச் சென்றவன் அங்கே மேஜை மேல் இருந்த சலங்கைகளை கையில் எடுத்து அவளது கரத்தில் வைத்தான்.

“மாமா என்ன சொல்லிட்டுப் போனார். ஞாபகம் இருக்கா இல்லையா. உன் சலங்கை ஒலி காற்றில் கலந்து அவர் காதில் கேட்டுகிட்டே இருக்கும்னு சொன்னாரா இல்லையா”

“சித்து”

“அபி” ஆழ்ந்த குரலில் அவளை அழைத்தான் சித்தார்த்.

கையில் வைத்திருந்த சலங்கைகளை முகத்தோடு அணைத்து “டாடி” என்று அழைத்து குலுங்கி அழுதவளை தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டான்.

“நிலாக்கு நீ சொன்னதை தான் நான் உனக்கு திரும்பவும் சொல்றேன்”

“விமானம் கிராஷ் ஆனது மட்டும் தான் இவங்களால கன்பார்ம் செய்ய முடிஞ்சது. அதுல மாமா கண்டிப்பா இருந்தாருன்னு என்ன ஆதாரம். என்ன நிச்சயம். சிதைந்த பகுதிகள் மீட்க முடியாத இடத்தில விழுந்ததுன்னு சொல்றாங்க. அப்போ இவங்க சொல்றதும் யூகத்தின் அடிப்படையில தானே. ஒரு வேளை மாமா ஆக்சிடன்ட் முன்னே தப்பிசிருந்தா”

சித்தார்த் சொல்லவும் சட்டென நிமிர்ந்து பார்த்தாள் அபூர்வா. அவள் கைகள் சலங்கைகளை இறுகப் படித்தபடியே இருந்தன.

அவள் கண்களில் நம்பிக்கை ஒளி மின்னியது.

“சித்து”

“நாம ஏன் நெகட்டிவா யோசிக்கணும்டா. இப்படி பாசிட்டிவா நினைக்கலாம் தானே”

“டாடி வந்திருவாங்கல்ல சித்து”

“மாமா வரணும்னா நீ ஆடணும். உன் சலங்கை ஒலி, உன் சந்தோஷமும் நம்பிக்கையும் தான் மாமாவுக்கு உயிர் கொடுக்கும். உன்னோட பாசிட்டிவ் போர்ஸ் தான் மாமாவுக்கு ஷக்தி கொடுக்கும்”

“ஏன்னா மாமா மார்பில் ஊறும் உயிர் நீ தானே ”

அவன் வார்த்தைகளில் ஐயமற்ற முழு நம்பிக்கையை வைத்தாள் அபூர்வா.

“நம்பிக்கை” வாழ்வின் ஆதாரமே நம்பிக்கை தானே. அடுத்த நிமிடம் என்ன நடைபெற போகிறது என்று தெரியாத நிலையற்ற வாழ்வினில் இந்த நம்பிக்கை தான் ஒவ்வொரு மனிதனையும் தனக்கான பாதையில் முன்னேறி  செல்ல துணை செய்கிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.