(Reading time: 28 - 55 minutes)

யார் அவங்கன்னு உனக்கு தெரியுமா” என்று அந்த இன்னொரு நபர் சமீரின் தந்தையிடம் கேட்டார்.

“யார் என்ன என்று எனக்கு முழுசா தெரியாது. எனக்கு என் போனில் தகவல் வரும். அதை நான் செய்து முடித்தா பணம் என்னை தேடி வரும். இந்த இடம் கூட அவங்க தான் முடிவு செய்தாங்க. என்னை மரத்தில் வீடு ஒன்னு கட்ட சொல்லி கட்டளை வந்துச்சு. இன்னும் ரெண்டு வாரத்தில் சம்பலுக்கு பொருள் எல்லாம் வரும். அதை எல்லாம் வாங்கி இங்கே கொண்டு வந்து பத்திரமா வைக்கணும். அவங்க ரெண்டு மாசம் கழித்து வருவாங்க போல. உதவிக்கு நம்பகமான நம்ப கிராமத்து ஆள் நானே வைத்துக்கலாம்னு சொல்லிருந்தாங்க. அதான் உன்னை சேர்த்துகிட்டேன்”

இந்த உரையாடலை கேட்ட விஜயகுமார்க்கு ஏதோ மிகப் பெரிய சதித் திட்டம் ஒன்றின் கைப்பாவைகளாக சமீரின் தந்தையும் அவரின் நண்பரும் செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம் வந்தது. அது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். அடிப்பட்ட காலுக்கும் ஓய்வு வேண்டும். எனவே மயங்கி சரிந்ததைப் போல நடித்தார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

விஜயகுமார் அந்த மரங்கள் அடர்ந்த பள்ளத்தாக்கில் அமைந்த சிறு வீட்டினில் தனிமையில் இருந்த நிலையில் மூன்று வாரங்களின் முடிவில் சமீரின் தந்தை மற்றும் அவரின் நண்பர் கோவேரி கழுதைகளில் இரு பெரிய அட்டைப் பெட்டிகளைக் கொண்டு வந்தனர். அதைப்   பிரித்து அடுக்குமாறு விஜயகுமரைப் பணித்தனர்.

அந்த பெட்டிகளைப் பிரித்தவர் அதனுள் இருந்த சாதனங்களையும் கருவிகளையும்  பார்த்து உள்ளுக்குள் அதிர்ந்தார். மிகுந்த திறமையான நுட்பத்துடன் மிகப் பெரிய தீவிரவாத செயல் ஏதோ நடைபெற போகிறது என்று அவரது அனுபவம் அவருக்கு உணர்த்தியது.

“இந்த இடமும் எங்கே இருக்கிறது என்று எனக்கு சரியாக தெரியவில்லை. இந்த பள்ளத்தாக்கைப் பார்க்கும் போது எனக்கு ஆக்சிடன்ட் ஆன இடத்திற்கு அருகாமையில் தான் இருக்கணும். இந்த தகவலையும் சித்துவிற்கு எப்படியாவது தெரிவிக்கணுமே. பூக்குட்டி நீ தான் டா என் ஒரே நம்பிக்கை” மனதில் கூறியவர் சமீரின் தந்தை மற்றும் அவரது நண்பர் வெளியில் சென்றதும் சட்டைப் பையில் இருந்த சலங்கைகளை எடுத்து இசைக்கத் தொடங்கினார்.

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1080}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.