(Reading time: 28 - 55 minutes)

சித்து”

“சொல்லுங்க மாமா”

“அபியை பத்திரமா பார்த்துக்குவியா”

“கண்டிப்பா மாமா. உங்களுக்குத் தெரியாதா”

“எனக்கு தெரியும் சித்து. அவளுக்கு டான்ஸ்னா அவ்ளோ பிரியம். அவ கண்டிப்பா இந்த டான்ஸ் காம்படிஷன்ல வின் பண்ணனும். ஒரு வேளை என்னால அதுக்குள்ள திரும்ப வர முடியலைன்னாலும் என் இடத்தில் அவ கூட  நீ இருக்கணும். செய்வியா சித்து” அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு விஜயகுமார் கூறினார்.

“எனக்கு புரியுது மாமா. நீங்க போகும் ஜாப்ல டைம் சொல்ல முடியாது. இருந்தாலும் அபி  கிட்ட சொல்ல வேண்டாம் மாமா”

“எனக்கு எப்போவும் நிலா பத்தின கவலை இருந்ததே இல்லை. அபியும் நீயும் அவளுக்கு இருக்கீங்க. என் கவலை எல்லாம் அபி பத்தி தான்”

“அபிக்கு நீங்களும் நானும் இருக்கோம் மாமா” சித்தார்த் உறுதி அளிக்க நிம்மதியாக விடை பெற்றார் விஜயகுமார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

சித்து அந்த அலாரிப்பு ப்ளே பண்ணு. தாளம் சரியா இருக்கான்னு ஒழுங்கா பார்த்து சொல்லு” அலுக்காமல் ப்ராக்டீஸ் செய்தாள் அபூர்வா.

“சித்து அண்ணா இந்த அக்காவுக்குத் தான் கால் வலிக்கவே வலிக்காது. உனக்கும் கண்ணு வலிக்கவே வலிக்காதா. எவ்ளோ நேரம் தான் அவ ஆடுறதை பார்த்துட்டே இருப்ப. அங்க அவுட் ஆப் சிலபஸ்ல டெஸ்ட் வச்சா என்ன செய்வீங்க” நிலா தான் பாவம் அலுத்துக் கொண்டாள். அவளை வேறு வலுக்கட்டயமாக ஆடியன்ஸ் ஆக்கி வைத்திருத்தாள் அபூர்வா.

“என் நிலா பேபி சமத்து...பேபி சொல்றதும் சரி தான் பில்லி. நீ இதெல்லாம் ப்ராக்டீஸ் செய்து ஒரு யூஸும் இல்லை. அவங்க ஆன் தி ஸ்பாட் கான்செப்ட் குடுத்து தீம் மியுசிக் குடுப்பாங்க. அரை மணி நேரம் டைம்ல நீ கான்செப்ட் செட் செய்து அந்த மியுசிக்கு சரியா டான்ஸ் கம்போஸ் செய்து ஆடணும்” சித்தார்த் போட்டியின் விதிகளை அபூர்வாவிற்கு ஞாபகப் படுத்தினான்.

“அப்போ ஒன்னு செய்யலாம். நீங்க ரெண்டு பேரும் கான்செப்ட்ஸ் சொல்லுங்க. நான் இது வரை கேக்காத மியுசிக் தேடி பிடிங்க. ப்ராக்டீஸ் செய்யலாம்” அபூர்வா புது வழி தேட ஆளை விடு சாமி என்று நிலா ஓடியே விட்டாள்.

“பில்லி கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ் பண்ணுடா”

“சித்து இன்னும் த்ரீ டேஸ் தானே இருக்கு. டாடி இன்னும் வரலியே”

அபூர்வா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு பதட்டத்துடன் கிருஷ்ணமூர்த்தி வந்தார். அபூர்வா அங்கிருந்ததைப் பார்த்தவர் அவள் அறியாமல் சித்தார்த்திடம் சைகை செய்து அறைக்குள் சென்று விட்டார்.

“ஒகே பில்லி. நீ வீட்டுக்கு போ. நான் மியுசிக் எல்லாம் தேடி எடுத்துட்டு வரேன்” அவளை அனுப்பி வைத்து விட்டு சித்தார்த் தந்தையை நாடிச் சென்றான்.

“என்னாச்சுப்பா”

“தாஸ் போன் பண்ணிருந்தார் சித்து. விஜயகுமார் போன ஏர் கிராப்ட் மிஸ்ஸிங்ன்னு சொன்னார்”

“அப்பா என்னப்பா சொல்றீங்க”

“ஏதோ முக்கியமான ஆபரேஷன்ல போயிருந்தாராம். எனக்கு டெக்னிகல் டீடைல்ஸ் தெரில சித்து. விமானம் மிஸ்ஸிங். அது நல்ல விஷயம் இல்லைன்னு சொன்னார். நீ அபி கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். சீக்கிரமே விஜயகுமார் கிட்டே இருந்து தகவல் வந்திரும்”

“நான் தாஸ் அங்கிளை போய் பார்த்துட்டு வரேன்ப்பா”

“அவர் இங்க இல்ல சித்து. கஷ்மீர்ல இருக்காராம். அவரே  கான்டாக்ட் செய்வார்”

கிருஷ்ணமூர்த்தி சொன்ன செய்தியில் வெகுவாக கலங்கிப் போனாலும் அது நாள் வரை படித்த யோகா, தியானம்  மூலம் மனதினை ஒருநிலை படுத்தி நிதானமாக செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்தான் சித்தார்த்.

“என்ன சித்து நாளைக்குப் போட்டி. டாடி இன்னும் வரல. போன் கூட செய்யல. அரங்கேற்றம் போது முதல் நாள் ஈவினிங் வந்த மாதிரி வந்திடுவாங்க தானே”

“அபி என்ன இது. ஏன் இவ்வளவு சஞ்சலப் படுற. நாளைக்கு காம்படிஷன். நீ ரிலாக்ஸா இருக்க வேணாமா” மகளை அதட்டினார் ரத்னாவதி.

“தெரில மா. என்னவோ மனசே சரியில்ல”

அந்நேரம் யேசுதாஸ் மற்றும் விமானப்படை உடை அணிந்த இரண்டு அதிகாரிகள் அங்கு வருகை தந்தனர்.

விஜயகுமார் சென்ற விமானப் படை விமானம் எல்லைப்பகுதி தாண்டி ஓர் குன்றின் மீது மோதி நொறுங்கி எரிந்து போனது என்றும் சிதைந்த பகுதிகளை மீட்க இயலாத இடத்தில் விமானம் நொறுங்கியது என்றும் பேரிடியாய் இறக்கிய செய்தி கேட்டு நிலை குலைந்து போயினர் அனைவரும்.

சிறிது நேரத்திலே தன்னை சமன்படுத்திக் கொண்டு ஒரு ராணுவ வீரரின் மனைவியாக தைரியத்தோடு மன உறுதியை வெளிக்காட்டினார் ரத்னாவதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.