(Reading time: 28 - 55 minutes)

சித்தார்த் விடைபெற்று சென்றுவிட ரத்னாவதியும் நிலாவோடு பெங்களூர் பயணித்தார். அபூர்வா எய்ம்ஸ் ஹாஸ்டலில் தங்கிவிட்டிருந்தாள்.

ய்ம்ஸில் மருத்துவம் படித்து முடித்தபின் ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் ‘மாலிகுலார் & செல்லுலர் பையாலஜி’யில் மேற்படிப்பு படிக்க அபூர்வாவும் யூ எஸ் பறந்தாள். பட்டம் பெற்று அங்கேயே பி.ஹெச்.டியும் சேர்ந்துவிட்டிருந்தாள்.

சித்தார்த்க்கு அங்கேயே வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்க அதை பயன்படுத்திக் கொண்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

இருவரும் ஒரே தேசத்தில் இருந்தாலும் வெவ்வேறு மாகாணங்களில் இருந்ததால் ஒருவரை ஒருவர் நேரில் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அமையாமல் போனது.

மிக ஷக்தி வாய்ந்த அணுகுண்டுகள் ஹிரோஷிமா நாகசாகியை தாக்கிய போது கரப்பான்பூச்சிகள் மட்டும் எந்த வித சேதமின்றி பிழைத்திருந்தது அதிசயமாகப் பேசப்பட்டது. சிறுவயதில் ஒரு தொலைக்காட்சி அறிவியல் நிகழ்ச்சியில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த அபூர்வா மனதில் அன்றே  விதை விழுந்து விட்டது.

கரப்பான் போலவே இன்ன பிற ஜீவ ராசிகள், பாக்டீரியாக்கள் இயற்கையிலேயே கதிர்வீச்சு எதிர்ப்பு தன்மை பெற்றுள்ளன (RADIORESISTANT ORGANISMS RRO)

அந்த நுண்ணுயிர்களில் இருக்கும் இந்த அரிய கதிர்வீச்சு எதிர்ப்பு தன்மை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தனது பி.ஹெச்.டியில் இதை பற்றிய ஆராய்ச்சிக்  கட்டுரையை  சமர்பித்திருந்தாள் அபூர்வா.

மேற்கொண்டு இதில் ஆராய்ச்சி செய்ய இந்தியாவிலேயே அதற்கான வாய்ப்புகளை தேடித் பிடித்து சென்ட்ரல் இன்ஸ்ட்டியுட் ஆப் சைன்டிபிக் ரிசர்ச்சில் (CISR) என்ரோல் செய்து எய்ம்ஸ் மற்றும் ஜவர்ஹர்லால் யுனிவர்சிடியில் தனது ஆராய்சிகளை மேற்கொள்ள நாடு திரும்பினாள்.

அந்த கதிர்வீச்சு எதிர்ப்பு தன்மையை பிரித்தறிந்து மனித உடலுக்கு அந்த தன்மையை புகுத்தும் நுட்பம்  பற்றிய ஆராய்ச்சியே தற்போது அபூர்வா மேற்கொண்டிருந்தாள்.  

ஜெனீவாவில் நடக்கவிருக்கும் அணுசக்தி பற்றிய உலக மாநாட்டில் தனது ஆராய்ச்சியை சமர்ப்பிக்க ஆயத்தங்கள் மேற்கொண்டு வருகிறாள்.

இது மட்டும் அங்கீகாரம் பெற்றால் அணுஆயுதங்களால் ஏற்படும் நீண்டகால மோசமான பின்விளைவுகளான கதிர்வீச்சு புற்று நோய்கள், கதிர்வீச்சால் குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பு போன்ற பலவற்றுக்குத்  தீர்வாக அமையும்.

சித்தார்த்தும் சொந்தமாக நண்பர்களோடு சாப்ட்வர் நிறுவனம் ஒன்றை நிர்மாணித்து வெற்றிகரமாக நடத்தி வந்தான்.

கிரீன் பார்க்கில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டி அதில் குடிபெயர்ந்தனர். சந்தோஷ் தான் அதைக் கட்டும் பொறுப்பை ஏற்றிருந்தான் எனினும் கிரகப்ரவேசம் போது அவனால் கலந்து கொள்ள முடியாமல் போனது. அதனால் தான் அவனுக்கு நிலா தான் இஷா என்று தெரியமால் போனது.

பத்மா குடும்பம் சென்னை திரும்பி வந்துவிட லலிதாம்பிகை சென்னையிலேயே தங்கி விட்டார். குடும்பத்தில் அனைவரும அடிக்கடி சென்னை சென்று வந்த போதும் அபூர்வாவினால் தனது ஆராய்ச்சியை விட்டுவிட்டு போக முடியவில்லை.

“அவ ரிசர்ச்ன்னு உயிரை விடுறா. எதிலுமே கலந்துக்க மாட்டேன்னா எப்படி சித்து” ரத்னாவதி வருத்தப்பட்டார்.

அவனுக்கு மட்டும் தான் தெரியும் வெளியுலக தொடர்பில் இருந்து தன்னை அவள் வெகுவாக தனிமைப்படுத்திக் கொண்டு கூட்டினுள் சுருண்டு விட்டிருந்ததன் காரணம்.

“டான்ஸ் ஆடிட்டே இருப்பேன் சித்து. சலங்கை சத்தம் டாடி காதுக்கு கேக்கணும்ல” நம்பிக்கை மாறாமல் உறுதியாக இருந்தாள்.

டையில் யேசுதாஸ்ஸிற்கு மறைவில் இருந்து உதவி செய்து கொண்டிருத்த போது சித்தார்த் விஜயகுமாரின் விமான விபத்தைப் பற்றி ஆராய்ந்தான்.

ஆராய்ந்தவன் அதில் அவர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தான். இருப்பினும் அபூர்வாவிடம் அதைப் பற்றி சொல்லவில்லை.

இத்தனை வருடங்களாக இல்லாமல் திடீரென அபூர்வா டாடி என்று அழுவதும் அவர் நினைவில் அரற்றுவதுமாக இருந்தது ஒரு புறம் இருக்க சித்தார்த் மனமும் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்தது.

ரத்னாவதியும் அவரின் கனவைப் பற்றி சொல்லவே சித்தார்த் சிந்தனை வசமானான்.

“இது பற்றி யேசுதாஸ் அங்கிள் கிட்ட பேசணும் . மோகன் ராய் சார் சொன்னதையும் இன்னும் பார்க்கவே இல்லையே” தனக்குள் சொல்லிக் கொண்டவன் மோகன் ராய் கொடுத்த அந்த பைலைப் பிரித்துப் பார்த்தான்.

அந்த என்க்ரிப்டட் கோட்ஸ் அவனைப் பார்த்து சவால் விட்டது.

மேலி கிராமம் பள்ளத்தாக்கு

“என்ன சத்தம்” சமீரின் தந்தையும் அவருடன் பேசிக் கொண்டிருந்த அந்த இன்னொரு மனிதரும் கதவைத் திறந்து பார்க்க அங்கு விஜயகுமார் மயங்கி தரையில் சரிந்திருந்தார்.

“பாபா பாபா” சமீரின் தந்தை அவரை அடையாளம் கண்டு கொண்டு மயக்கம் தெளிவிக்க முயன்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.