(Reading time: 28 - 55 minutes)

ரிசை பெற்றுக் கொள்ளும் போது அவளிடம் மைக் கொடுக்கப் பட “டாடி உங்க ஆசையை நான் நிறைவேத்திட்டேன். ஜெய் ஹிந்த்” எனவும் சித்தார்த் அவள் மேடையில் இருந்து இறங்கி வர காத்திருந்தான்.

அடுத்த நிகழ்ச்சிகள் எதிலும் பங்கெடுக்காமல் அவனோடு புறப்பட்டு விட்டிருந்தாள் அபூர்வா.

“பில்லி ப்ளீஸ் அழுதிடு” சித்தார்த் சொல்ல அசையாமலே அமர்ந்திருந்தாள்.

“உன்னை பற்றி தான் அத்தை ரொம்ப கவலை படுறாங்க” அவன் சொல்லவும் அவனை திரும்பிப் பார்த்தவள் இனி தான் செய்ய வேண்டியது என்ன என்று மனதில் முடிவு செய்து கொண்டாள்.

சிறுவயதில் இருந்தே சற்று அமைதியாக இருக்கும் அபூர்வா குடும்பத்தினர் அனைவரிடத்திலும் கலகலவென பேசுவதுமாய் துள்ளலோடு உற்சாகமாக இருக்க ஆரம்பித்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

இது அவள் மற்றவருக்காக அணியும் முகமூடி என்று தெரிந்தும் சித்தார்த் பார்த்துக் கொள்வான் என்ற தைரியத்தில் ரத்னாவதியும் அவள் போக்கிலேயே விட்டுவிட்டார்.

“மாமா டாடியோட சேவிங்க்ஸ் போதும் எங்களுக்கு. நீங்க நிலா ஸ்கூல் முடியும் வரை இந்த குவாட்டர்ஸ்ல தங்கிக்கலாம்னு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிக் கொடுத்ததே போதும் மாமா” கிருஷ்ணமூர்த்தி செய்ய முன் வந்த பண உதவிகளை மறுத்து விட்டிருந்தாள்.

சித்தார்த் டியுஷன் எடுத்தும் அபூர்வா நடனம் கற்பித்தும் பணம் சேர்த்து வைத்தனர்.

நாட்கள் செல்ல விஜயகுமார் பற்றிய விஷயம் உறவுகளுக்குத்  தெரிவிக்கப்பட அவர்கள் கடிந்து கொள்ள அங்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க சொல்லிவிட்டாள் அபூர்வா.

“எனக்கு கூட சொல்லணும்னு தோணலையா... அம்மாக்கு தெரிஞ்சிருக்கு அம்மாவும் சொல்லலை. கேட்டா அபி சத்தியம் வாங்கிட்டான்னு சொல்றாங்க” பத்மா அபூர்வாவை கடிந்து கொண்டதையும் அவள் பெரிதுபடுத்தவில்லை.

பத்மா குடும்பத்தினர் சில வருடங்களாக ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தனர். பத்மாவின் உடல் நலம் சிறிது குன்றவே லலிதாம்பிகை அவர்களோடு வெளிநாட்டில் தங்கி விட்டார். இரு வருடங்களுக்கு ஒரு முறை வந்து போய்க் கொண்டிருந்தவரால்  இப்போது உடல் நலம் காரணமாக அதிகம் பயணிக்க முடியாமல் போனது.

ருடங்கள் உருண்டோட சித்தார்த் கல்லூரியில் சிறப்பாக தேர்ச்சி பெற்று மேற்படிப்புக்காக யூ.எஸ் புறப்படும் சமயமும் வந்தது.

“சித்து நீ கண்டிப்பா போகணும். யாருக்கு இப்படி புல் ஸ்காலர்ஷிப் கிடைக்கும் சொல்லு”

“அந்த நவரசா டால் ப்ராஜெக்ட் தான் பில்லி இந்த ஸ்காலர்ஷிப் கிடைக்க ரீசன்”

“உன்னோட திறமைக்குக் கிடைச்சிருக்கு சித்து”

“நிலாவை பெங்களூர்ல காலேஜில் சேர்த்து விட்டு அத்தையையும் அங்கேயே வீடு பார்த்து தங்க வச்சிட்டு நீ இப்படி ஹாஸ்டலில் தனியா இருக்கேன்னு சொல்ற. நீ ஒழுங்கா இருந்துப்ப தானே”

“சித்து உன்கிட்ட என்னோட பீலிங்க்ஸ என்னிக்காச்சும் மறைச்சிருக்கேனா ”

“அது உன்னால முடியாது பில்லி”

“அப்புறம் என்ன சித்து. ஏன் இவ்வளவு யோசிக்கிற”

“இன்னும் ரெண்டே வருஷம் தான் பில்லி. அப்புறம் நான் வேலைக்குப் போயிருவேன்”

“இது எதுக்கு சித்து சொல்ற இப்போ”

“நிலா பேபிக்கு கொஞ்சமா தான் பாக்கெட் மணி குடுக்குற நீ. இப்போ காலேஜ் போகப் போறா அவளுக்கு நிறைய செலவு இருக்குமே”

“இந்த டீலிங் எல்லாம் எங்கிட்ட பேசாத. அவ விஷயத்துல உன்னால ஸ்ட்ரிக்டா இருக்க முடியாது சித்து. நான் இருந்து தான் ஆகணும். அம்மாவும் அவளுக்கு ஓவர் செல்லம் கொடுக்குறாங்க”

தைரியமாக சொல்லிவிட்ட போதும் அவன் பிரிந்து செல்லும் நாள் நெருங்கி வர அபூர்வா கொஞ்சம் கலங்கித் தான் போனாள். பல வருடங்கள் முன் சித்தார்த் சொன்ன வார்த்தைகளை நினைவு படுத்திக்கொண்டாள்.  

எங்கிருந்தாலும் அவனின் ஷக்தி நானாக எனது ஷக்தி அவனாக இருக்கும் பட்சத்தில் இந்த கலக்கம் தேவையில்லை என்று தெளிவுற்றாள்.

நிலா தான் தமிழ் சினிமா செண்டிமெண்ட் சீன்ஸ் எல்லாம் தோற்றுப் போகும் வகையில் ஏர்போர்டில் அழுது கரைந்தாள்.

“உன்னையும் பிரிஞ்சு அக்காவையும் பிரிஞ்சு எப்படி இருப்பேன் சித்து அண்ணா”

“அதுனால தானே பேபி அத்தை உன் கூடவே வராங்க. நீ தானே அந்த காலேஜ்ல தான் படிக்கணும்னு ஆசைப்பட்ட”

“நீ சீக்கிரம் வந்திருவியா அண்ணா. நீ திரும்ப வரும் போது எனக்கு என்ன வாங்கிட்டு வருவ...நானும் அங்க ஊர் சுத்தி பார்க்க வரவா”

“உனக்கு என்னவெல்லாம் வேணும்னு லிஸ்ட் போட்டு வை பேபி. அண்ணா எல்லாம் வாங்கித் தரேன். நீ இப்போ காலேஜ் போகும் பெரிய பொண்ணா ஆகிட்ட. சமத்தா இருக்கணும்”

“சரி அண்ணா” அபூர்வா முறைப்பைக் கண்டுகொள்ளமால் அழுகையுடனே சிரித்தாள் நிலா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.