(Reading time: 26 - 51 minutes)

14. மார்பில் ஊறும் உயிரே!!! - மது

சிதறிய ஒலிகளில் உயிரோசை நீ!!!

Marbil oorum uyire

பூர்வாவின் ஆராய்ச்சி கட்டுரை ஜெனீவா கான்பரன்ஸில் சமர்பிக்க ஒப்புதல் பெற்ற நிலையில் அது குறித்த வேலைகளில் முழுமையாக ஈடுபட்டாள்.

“பில்லி  நீ இங்கேயே இரு. ஹாஸ்டல் போக வேண்டாம். எப்படியும் இன்னும் ரெண்டு மாசத்தில நிலாவும் அத்தையும் வந்திருவாங்க” சித்தார்த் சொல்லவும் அபூர்வா சரி என்று சம்மதித்திருந்தாள்.

கடந்த சில நாட்களாக அபூர்வாவின் நடவடிக்கைகள், மனநிலை இவற்றைக் கண்டவன்  அவளை தனியே விட விரும்பவில்லை.

“ஏன் சித்து ரொம்ப டல்லா இருக்க. புது ப்ராஜக்ட் வொர்க் ரொம்ப அதிகமா” அவன் தீவிர சிந்தனையில் இருப்பதை கவனித்துக் கேட்டாள் அபூர்வா.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே”

“எனக்கு அப்படி தோணிச்சு அதான்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“இவ கிட்ட இருந்து என்னால எதையும் மறைக்க முடியாதே” மனதிற்குள் நினைத்த சித்தார்த் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.

“சித்து...நான் எதுவும் கேக்கல. பட் டேக் கேர்”

“ஐ வில். நீ உன்னோட பிரசன்டேஷன்ல கான்சன்ட்ரேட் செய்”

“சித்து ப்ரீயா இருந்தா சொல்லு. எனக்கு கொஞ்சம் ஹெல்ப் தேவைப்படும்”

“என்ன பில்லி. எப்போ வேணும்னாலும் பண்ணி தரேன். உனக்கு தான் இன்னும் எக்செல் ஷீட், பவர் பாயின்ட் எதுவுமே ஒழுங்கா செய்யவே தெரியாதே” கேலி செய்தவனை அபூர்வா முறைக்கவும் அவளிடம் சரணடைந்தான்.

“சரி சரி காளி  அவதாரம் எடுக்காத.  நான் கொஞ்சம் வெளில போயிட்டு வரேன்”

அவளிடம் இருந்து விடை பெற்று யேசுதாஸ்ஸை சந்திக்க சென்றான்.

“அங்கிள். தட் இஸ் எ வெரி காம்ப்ளிகேடட் ஒன். நானும் விடாம முயற்சி செய்றேன். இன்னும் ஐ குட் நாட் சக்சீட் ”

“சித். மோகன் அவங்க டீம்ல யாராலையும் முடியாம போகவும் தான் உன்னை ஞாபகம் வைத்து வந்து கேட்டார். யூ கீப் ட்ரையிங். எங்களுக்கும் இது என்ன இன்பர்மேஷன், எவ்வளவு முக்கியம் வாய்ந்தது அப்படின்னு இன்னும் உறுதியா தெரியலை”

“ஷ்யூர் அங்கிள். அப்புறம் உங்ககிட்ட இன்னொரு விஷயம் கேக்கணும்”

“என்ன சித். என்ன கேக்கணும்”

“மாமா ஏர் கிராஷ்ல தப்பிச்சிருக்க ஏதாச்சும் சான்ஸ் இருக்கா அங்கிள்”

“என்ன சித். திடீர்னு ஆப்டர் ஆல் தீஸ் இயர்ஸ்”

“மாமாவோட ….ஐ மீன் எதுவும் கிடைக்கலை இல்லையா” வார்த்தையால் கூட சொல்ல முடியாமல் சித்தார்த் தவித்தான்.

“உனக்கு அப்போவே எல்லா டீடைல்ஸும் குடுத்தேன். அப்படி ஒரு வாய்ப்பு இல்லை சித். ஒரு சதவீதம் அப்படி இருந்திருந்தா கூட நான் விட்டிருக்க மாட்டேனே. விஜய் வாஸ் மை டியரஸ்ட் பிரண்ட்”

“எனக்கு தெரியும் அங்கிள். ஐ ஆம் சாரி. ஜஸ்ட் வாண்டட் டு ஆஸ்க்”

“தட்ஸ் ஒகே மை பாய்”

“சரி நான் வரேன் அங்கிள்”

“அபி எப்படி இருக்கா”

“அவ நல்லா இருக்கா. அவளோட ரிசர்ச் பேப்பர் ஜெனீவால பிரசன்ட் செய்ய போறா” சித்தார்த் சுருக்கமாக அபூர்வாவின் ஆராய்ச்சி பற்றி சொல்லவும் யேசுதாஸ் மகிழ்ந்து போனார்.

“விஜய் இருந்தா ஹி வில் பீ சோ ப்ரவுட்”

“கண்டிப்பா அங்கிள், மாமாவோட ஆசீர்வாதம் எப்போவும் கூடவே இருக்கும். ஒகே அங்கிள் சி யூ”

அவரிடம் பேசிவிட்டு வந்தவன் தங்களது நிறுவனத்தின் புது ப்ராஜெக்டில் கவனம் செலுத்தினான். இடையில்  அந்த கோட்ஸ் பற்றி ஆராயவும் தவறவில்லை. மூன்று வாரங்கள் ஆகிவிட்ட போதும் ஏனோ அவனால் அதை டி கோட் செய்ய முடியாமல் போனது.  யேசுதாஸ்ஸிடம் இருந்தும் வேறு தகவல்கள் ஏதும் வரவில்லை ஆதனால் அவனும் அதைப் பற்றி அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.

நீங்க ரெண்டு பேரும் அப்போ கண்டிப்பா வரலையா” சுசீலா சித்தார்த் அபூர்வாவிற்கு காலை உணவு பரிமாறிக் கொண்டே கேட்டார்.

“அத்தை உங்களுக்கே தெரியும் தானே. கான்பரன்ஸ்க்கு பிரிப்பர் செய்யணும். சித் நீ வேணும்னா போயிட்டு வா”

“எனக்கும் புது ப்ராஜக்ட் வேலை இருக்கு. இப்போ தான் த்ரீ வீக்ஸ் ஆகிருக்கு. இனி தான் வேலை ஜாஸ்தியாகும்மா. நீங்களும் அப்பாவும் போயிட்டு வாங்க”

அபூர்வாவை தனியே விட்டு செல்ல சித்தார்த் விரும்பவில்லை.

“நீங்களாச்சு உங்க அத்தை பொண்ணாச்சு. எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லிடுவேன்”

“நான் காவ்யா கிட்ட ஏற்கனவே பேசிட்டேன் அத்தை. குழந்தை பிறந்ததும் பார்க்க வரோம்ன்னு  சொல்லிருக்கேன். நானும் அதுக்குள்ளே ஜெனீவா போயிட்டு வந்திருவேன்ல”

“அப்போ சரி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.