(Reading time: 26 - 51 minutes)

ப்போ ஏன் மாமா நமக்கு தெரியல”

“நமக்கும் தெரியும் சித்து. உண்மையில் மனுஷன் ஆறறிவு படைத்தவன். அவனுடைய மூளை மிகவும் ஷக்தி வாய்ந்தது. ஆனா மனுஷன் தான் பெரியவன் அப்படின்ற அகம்பாவம் கொண்டிருப்பதாலும் இயற்கையை விடுத்து செயற்கையை நேசிக்க தொடங்கியதாலும்  அவனால அவனுடைய ஷக்திகள் எதையும் சரியாக பயன்படுத்திக்க முடியல”

“அப்போ நாம இயற்கையோட பிரண்டா இருந்தா நமக்கும் அந்த ஒலி எல்லாம் கேக்குமா மாமா”

“கண்டிப்பா சித்து. நீ யோகா தியானம் எல்லாம் செய்கிறாய் தானே. நம்ம ஆழ்மனதின் ஷக்தியை நாம அறிந்து கொள்ள இது எல்லாம் உதவி செய்யும். நம்ம புராணங்களில் கதைகளில் எல்லாம் இதை பற்றி நிறைய சொல்லிருக்காங்க. ஒருவர் மனசில் நினைப்பதை இன்னொருவர் அறிந்து கொள்ள முடியும் அப்படின்னு எல்லாம் கூட இருக்கு” தான் படித்ததை அறிந்ததை விஜயகுமார் சொல்லிக் கொடுத்தார்.

“மெர்மைட் மாதிரியா மாமா”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அனிதா சங்கரின் "அவளுக்கென்று ஒரு மனம்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

“ஹஹஹா....மெர்மைட் எல்லாம் இப்போ இல்ல. ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். அது பத்தி எனக்கு சரியா தெரியல”

“பவர் ஆப் சப் கான்ஷியஸ் மைன்ட். ரியலி இட் வொர்க்ஸ் மாமா” பதின் பருவத்தில் விஜயகுமாரோடு பகிர்ந்து கொண்டான் சித்தார்த்.

“அபி டான்ஸ் ஆடுவது கூட ஒரு பார்ம் ஆப் டீப் மெடிடேஷன் தானே மாமா. அவ நேச்சுரலா அந்த தியான நிலைக்கு போயிடறா”

“உண்மை தான் சித்து. இசை, நடனம் இந்தக்  கலைகளுமே ஒரு தியானம் தான். அதுனால  தான் நம் முன்னோர்கள் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் குடுத்தாங்க. சரஸ்வதி கையில் வீணை, நாரதர் தம்புரா, நந்தி மத்தளம், சிவஷக்தி நடனம்னு கடவுள் நிலையில் இந்த கலைகளை வைத்திருந்தாங்க”

“உண்மையில் இசை ரொம்ப அமேசிங் மாமா. இட் கநெகட்ஸ் அவர் சோல் டு தி காஸ்மோஸ்”

சிறு வயதில் ஒலிகள் பற்றிய ஆர்வம் பின்னாளில் பிரபஞ்சத்தின் பல்வேறு அலைகள், விசைகள், காஸ்மோஸ் என்று விரிந்தது. அவன் படித்த எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யுனிகேஷன் கைகொடுக்க தனியாக ஒரு அறையை அமைத்து இந்த ஒலி வடிவங்கள், அலைகள் பற்றியெல்லாம் ஆராய்ந்து கொண்டிருந்தான். அப்படி ஆராய தொடங்கிய போது தான் கோட்ஸ் பற்றியும் அறிந்து கொண்டு டிகோட் செய்ய தொடங்கினான்.

“மாமா...நாம முன்னாடி டிஸ்கஸ் பண்ணினது எல்லாம் இப்போ நம்ம லைப்லேயே நடக்கும்னு நான் நினச்சு கூட பார்க்கல. நீங்க அபியோட ஆழ்மனதோடு தொடர்பு கொண்டு எனக்கு செய்தி சொல்லிருப்பது எனக்கு கிடைச்சிருச்சுனு நான் எப்படி உங்களுக்கு பதில் சொல்றதுன்னு தான் தெரியல மாமா.  அபி மைன்ட்டை  நான் டிஸ்டர்ப் செய்யல மாமா. சீக்கிரம் நான் உங்கள கண்டுபிடிச்சிருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இப்போதைக்கு இது எனக்குள்ளேயே இருக்கட்டும்”  விஜயகுமார் மீண்டும் அபூர்வா மூலம் தன்னை தொடர்பு கொள்வார் என்று உறுதியாக நம்பினான்.

ஜெனீவா செல்ல இன்னும் இரு வாரங்களே இருந்த நிலையில் அபூர்வா வெளியில் காட்டிக் கொள்ள வில்லை எனினும் உள்ளுக்குள் படபடப்பாய் உணர்ந்தாள்.

“சித்து. நீ இங்கேயே சோபாவில் படுத்துக்கோயேன். நான் இங்கே கீழே பெட் போட்டு படுத்துகிறேன்”

“என்ன டா டென்ஷனா இருக்கா”

“தெரில சித்து. டென்ஷன் மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல. ஆனா என்னவோ நீ பக்கத்துல இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது”

“நான் எப்போவும் உன் கூடவே தானே இருக்கேன்”

“சரி நீ தூங்கு சித்து. நான் இதை முடிச்சிட்டு தூங்கறேன்”

நள்ளிரவைத் தாண்டியும் லாப்டாப்பில் அபூர்வா தனது ப்ரெசன்டேஷன் வேலைகள் செய்து கொண்டிருக்க சோபாவில் படுத்த சித்தார்த் தூங்கிப் போனான்.

திடீரென எங்கோ தொலைவில் சலங்கை மணி ஓசை கேட்க கனவோ என்று நினைத்தவன் சட்டென விழிக்க அங்கே அவன் கண்ட காட்சி அவனை முதலில் திகைக்க வைத்தது.

எப்போது சென்று சலங்கை எடுத்து வந்து அதை அருகில் வைத்து உறங்கினாளோ அபூர்வா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். மனம் சஞ்சலம் ஆகும் சமயங்களில் எல்லாம் அவள் தந்தையின் நினைவாக சலங்கையை அணைத்துக் கொண்டு உறங்குவது எப்போதும் நடப்பது தானே. ஆனால் இப்போது அவள் விரல்கள் அந்த சலங்கையை ஓர் தாளத்தில் தட்டிக் கொண்டே இருந்தன.

சித்தார்த் உடனே  எழுந்து தனது வாட்சில் இருக்கும் ரிகார்டரை ஆன் செய்து விட்டு அபூர்வா தலைமாட்டில் இருந்த பேப்பர் பேனாவை எடுத்து அந்த இசையின் நோட்ஸ் குறித்துக் கொண்டிருந்தான்.

கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்குப் பிறகு அபூர்வாவின் விரல் தாளம் இசைப்பதை நிறுத்தியது.

அப்போதே பதிவு செய்ததை மீண்டும் கேட்டு அந்த பேப்பரில் குறிப்புகள் எழுதிய சித்தார்த் விஜயகுமார் தந்திருந்த தகவலைப் பார்த்தவன் “ திஸ் ஸ் வெரி சீரியஸ்” என்று முணுமுணுத்தான்.  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.