(Reading time: 26 - 51 minutes)

ந்த இரவு நேரத்தில் சித்தார்த் உடனடியாக சந்திக்க வேண்டும் என்று சொன்னதும் தாஸ் மோகன் ராயுடன் லோதி ரோடின் அந்த வீட்டில் காத்திருந்தார்.

“அங்கிள்... LATITUDE XXXX LONGITUDE YYYY திஸ் இஸ் தி கோட்”

“இது என்ன லொகேஷன் தாஸ்” மோகன் ராய் யேசுதாஸ்ஸிடம் காண்பித்தார்.

“சமேலி என்று ஒரு  சிறு கிராமம். ஆனா 2005 பூகம்பம் போது அந்த பகுதி கிராமங்கள் எல்லாம் ரொம்ப சேதம் ஆகிருச்சே”

“இந்த கிராமம் எதை சேர்ந்தது தாஸ்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“நம்ம LOC க்கு அப்பால் இருக்கும் பகுதிகள்”

“தேங்க்ஸ் சோ மச் சித். இதை நான் உடனேயே ரிப்போர்ட் செய்யறேன். தாஸ் ரெஸ்ட் இஸ் யுவர்ஸ் தென்” மோகன் ராய் சொல்லிவிட்டு கிளம்பவும் யேசுதாஸ் சிந்தனை வயப்பட்டு அமர்ந்திருந்தார்.

“என்ன யோசிக்கிறீங்க அங்கிள்”

“உனக்கு ஞாபகம் இருக்கா சித்து. எட்டு வருஷம் முன்னே இதே மாதிரி ஒரு கோட் நீ கண்டுபிடிச்ச. அந்த கோட் மூலமா தான் ஒரு மேஜர் டெர்ரரிஸ்ட் முகாமோட லொகேஷன் தெரிய வந்தது. அதைக் கண்டுபிடித்து கிளியர் செய்ய தான் விஜயகுமார் போனது. ஹி டிட் சக்சீட் ஆனா வி லாஸ்ட் ஹிம்”

“அப்போ இதுவும் அதே போல இருக்கலாம்ன்னு நினைக்கிறீங்களா அங்கிள்”

“நாட் ஷ்யூர். நான் சாட்டிலைட் சோர்சஸ் மூலமா அந்த கிராமத்தின் அக்டிவிடீஸ் செக் செய்ய சொல்றேன்”

“எனக்கு அப்டேட் செய்யுங்க அங்கிள்” அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தவனை ஹாலில் லாப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த அபூர்வா வரவேற்றாள்.

“சாப்பிடவே இல்ல சித்து  நீ...முதல்ல போய் சாப்பிடு”

இந்த நேரத்தில் எங்கே போனாய் ஏன் போனாய் என்று அவனிடம் எதுவும் அவள் கேட்கவில்லை. சொல்ல வேண்டும் என்றால் அவனாக சொல்வான் என்று அவளுக்குத் தெரியும்.

“நீ சாப்டியா பில்லி. தூங்காம என்ன பண்ற”

“நான் சாப்பிட்டேன்... நல்லா தூங்கி எந்திரிச்சுட்டேன். கொஞ்சம் வொர்க் முடிச்சிட்டு தூங்கறேன். நாளைக்கு ஜே என் யூ போகணும். என்னை டிராப் செய்திடு” சொல்லிவிட்டு தனது வேலையை தொடர்ந்தாள் அபூர்வா.

சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். தனது அறைக்கு வந்தவன் ஜன்னல் வழியே வானத்தின் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

து மோகனம் ராகம் சித்து. சந்தோஷமான ராகம். இதைக் கேட்டு நம்ம பவழமல்லி மரம் ஹாப்பியா ஆகிடும் தெரியுமா...சீக்கிரமே வளர்ந்து பூ பூக்கும்” எட்டு வயது அபூர்வா தாங்கள் நட்டு வைத்த மரம் செழிப்பாக வளர வேண்டும் என்று மாலைப் பொழுதில் மோகன ராகத்தில் அமைந்த பாடல்களை ஓட விட்டு தானும் கொலுசுகள் சப்திக்க ஆடுவாள்.

மரம் செடி கொடிகளும் இசையைக் கேட்டு ஆனந்தம் கொள்ளும் என்று தொலைக்கட்சியில் பார்த்து விட்டு அதை நிறைவேற்றிக் கொண்டிருந்தாள் அபூர்வா.

“அக்கா இந்த மரத்துக்கு தமிழ் பாட்டு பாடினா புரியுமா. ஹிந்தி பாட்டு பாடு” ஆறு வயது நிலா பெரிய மனுஷியாக வியாக்கியானம் சொல்லிக் கொண்டிருந்தாள்.  

ஒலி எப்படி பயணம் செய்கிறது. ரேடியோ, டி.வி, டெலிபோன் எல்லாம் எப்படி வேலை செய்கிறது என்று மிகுந்த ஆர்வம் உண்டு சித்தார்த்துக்கு.

அபூர்வா நடனம் ஆடத் தொடங்கியதில் இருந்தே சங்கீத ஸ்வரங்கள் தாளங்கள் அனைத்தும் சித்தார்த் தினம் கேட்டுக் கொண்டே தான் இருந்தான்.

“சித்து தித் தித் தை ஜதி சொல்லு. நேத்து சரியாவே நான் ஆடல” அவ்வவ்போது அபூர்வா கேட்க சித்தார்த் சரியாக அந்த ஜதிகளைப் பாடுவான்.

சாதரணமாக அபூர்வாவிற்காக பாடிக் கொண்டிருந்த சித்தார்த் அவள் பவழமல்லி மரத்திற்காக பாடலை ஓட விட்டு ஆடவும் அது எப்படி என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தீவிரமானான்.

“மாமா மரத்துக்கு எப்படி மாமா கேக்கும்” இப்படி ஆரம்பித்தவன் வளர வளர பல சந்தேகங்களை விஜயகுமாரோடு விவாதித்தான்.

“ஒலி அப்படின்றது ஒரு வைப்ரேஷன் சித்து. அதுல மனித காதுகள் கேட்கக் கூட அலைவரிசையில் பயணம் செய்யும் வைப்ரேஷன்னை  நாம சவுண்ட்ன்னு சொல்றோம். நாம கேட்கிறோம். ஆனா நம்ம காதுகள் கேட்க முடியாத வைப்ரேஷன் பல விலங்குகள் பறவைகள் உணர்ந்து கொள்ளும்”

“அது எப்படி மாமா. அனிமல்ஸ்க்கு தனியா கேக்குமா”   

“ஆமா சித்து. அனிமல்ஸ் பறவை எல்லாம் இயற்கையோட ஒன்றி வாழுது. இயற்கையில் இருக்கும் சிறு சிறு அதிர்வுகள் வைப்ரேஷன்ஸ் சென்ஸ் செய்யும். மழை வரும்ன்னு முன்னாடியே தெரிஞ்சு எறும்பு கூட தான் சேமிச்சு வைத்ததை எல்லாம் பாதுக்காப்பான இடத்துக்கு கொண்டு போகுதே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.