(Reading time: 26 - 51 minutes)

தை காலை வரை கூட தள்ளிப் போட கூடாது என்று நினைத்தவன் உடனேயே யேசுதாஸ்ஸை தொடர்பு கொண்டான்.

“சித் ஐ கான்ட் பிலீவ் திஸ்”

“அங்கிள் உங்களுக்கு நம்ப சிரமமா தான் இருக்கும். மாமா அபூர்வாவின் ஆழ்மனதோடு தொடர்பு கொண்டு சலங்கை ஒலியில் எனக்கு தகவல் சொல்லிருக்கார். ஐ டோன்ட் ஹாவ் எனி ப்ரூப். ஆனா இது தான் உண்மை. வேற யாருக்கும் தெரிய வேண்டாம் அங்கிள். நீங்க உங்க சோர்சஸ் மூலமா இது பத்தி ஏதேனும் இன்பார்மேஷன் கிடைக்குமான்னு பாருங்க”

“சித். இது ரொம்பவே ட்ரிக்கி. ஒரு யூகத்தின் அடிப்படையில் தான் இதை அப்ரோச் செய்ய முடியும். அண்ட் வி ஹாவ் நோ ப்ரூப்”

“அங்கிள் சமேலி கிரமாம் பத்தி ஏதாச்சும் தெரிந்ததா”

“அந்த கிராமத்தில் சில குடும்பங்கள் இருக்காங்க. சிம்பிள் லைப். பெருசா ஏதும் இல்லை”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதலும் நட்பும் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“சாட்டிலைட் மூலமா ஏதாச்சும் அன்யுசுவல் ஆக்டிவிடீஸ்”

“ஆக்சுவலி அது ரொம்ப அடர்ந்த காடுகள் கொண்ட பள்ளத்தாக்கு. சாட்டிலைட் பிக்ஸ்ல பெருசா எதுவும் இல்ல. அண்ட் அந்த பகுதிகளில் பூமியில் மேக்னடிக் பீல்ட் இன்டன்சிட்டி அதிகம் உண்டு. அதை பயன்படுத்தி தான் போன ஆபரேஷன்ல தீவிரவாதிகள் கண்ணில் மண்ணை தூவி விஜய் அட்டக் செய்தது”

“மேக்னடிக் பீல்ட். வாட் யூ மீன் அங்கிள்”

“சில பகுதிகளில் மின்காந்த சக்தி பூமியில் அதிகமா கான்சன்ட்ரேட் ஆகிருக்கும். அந்த மாதிரி பகுதிகளில் நம்ம ரேடார் எல்லாம் செயழிழந்து போகும்”

“திருநள்ளாறு மாதிரியா”

“ஆமாம். நம்ம நாட்டில் அந்த மாதிரி பகுதிகளை கண்டுபிடிச்சு அந்த மேக்னடிக் பவரை உபயோகமாக ஆக்கிருக்காங்க நம்ம முன்னோர்கள். கோயில் ஸ்தலங்களை உருவாக்கி. ஆனால் அதையே அழிவிற்கும் பயன்படுத்துபவர்கள் இருக்கத் தான் செய்றாங்க””

“சோ இப்போ இதை எப்படி அப்ரோச் செய்றது அங்கிள். என் மனதில் ஒரு யோசனை இருக்கு. அதுக்கு நீங்க ஒத்துக்கணும்”

“என்ன சித். எதுனாலும் ஒகே தான் எனக்கு”

“உங்களால பி எம் மற்றும் நேஷனல் செக்குரிட்டி அட்வைசர் கூட ஸ்பெஷல் மீட்டிங் ஏற்பாடு செய்ய முடியுமா. ஏன்னா இது நீங்களும் நானும் மட்டும் தனியா செய்யக் கூடியது இல்லை. அண்ட் இது உண்மையா இல்லையான்னு நமக்கு சாலிட் ப்ரூப் இல்ல. சோ உங்க டிபார்ட்மன்ட் மூலமா நேரடியா எதுவும் செய்யவும் முடியாது. ஹார்ட்லி டூ வீக்ஸ் தான் இருக்கு. வி ஹாவ் டு ப்ளே சம் ட்ரிக்ஸ்”

“நான் சீக்கிரமே ஏற்பாடு செய்றேன் சித்”

“தாங்க்ஸ் அங்கிள்”

சித் வரியா கொஞ்சம் ஷாப்பிங் போகாலாம்” சில நாட்களாகவே தீவிர யோசனையிலே இருக்கும் சித்தாரத்தை சற்று இலகுவாக்க முயற்சி மேற்கொண்டாள் அபூர்வா.

“கான்பரன்ச்க்கா பில்லி”

“அதுக்கும் அப்புறம் கான்பரன்ஸ் முடிஞ்சதும் நாம மெட்ராஸ் போகணுமே. சோ எல்லாத்துக்கும் சேர்த்து இப்போவே ஷாப்பிங் செய்யலாம். அப்புறம் டைம் இருக்குமோ இல்லையோ”

அபூர்வாவும் சித்தார்த்தும் கன்னாட் பிளேஸ், சரோஜினி மார்கெட், செலக்ட் சிட்டி வாக் என எல்லா இடங்களிலும் சுற்றித் திரிந்து களைத்துப் போய் வந்தனர்.

“நான் செம டயர்ட் சித்து” வந்தவள் சோபாவில் அமர்ந்து அவன் தோள்களில் சாய்ந்து அப்படியே உறங்கி விட்டிருந்தாள்.

அவளை எழுப்பி சாப்பிட வைத்து படுக்க சொல்லலாம் என்று சித்தார்த் நினைத்துக் கொண்டிருந்த போதே அபூர்வா தாளம் போட்டபடியே முனங்க ஆரம்பித்தாள்.

“ஸ ஸ ஸ மி மி மி மி  ர் ர் ப பா பா” என்று  அவள் உளறவும் கூர்ந்து கவனித்தான் சித்தார்த். கவனித்தவன் அதை எழுதிக் கொள்ளவும் செய்தான்.

 “அங்கிள் எனக்கு உடனே ஒரு  தகவல் வேணும். ASAP ” யேசுதாஸ்ஸிடம் உதவி நாடினான்.

இந்திய இன்டல்லிஜன்ஸ் ஜாயின்ட் டிரைக்டருக்கு அது பெரிய காரியம் அல்லவே. சித்தார்த் கேட்ட தகவல் அவனுக்கு உடனேயே கிடைத்தும் விட்டது.

வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் வரும் வரை காலம் தாழ்த்துவது சரியில்லை என சித்தார்த் தானே திட்டம் அமைத்து சில பல முன் வேலைகளையும் செய்து விட்டிருந்தான் யேசுதாஸ்க்கு தெரியாமல் தான்.

பூர்வா ஜெனீவா செல்ல இன்னும் இரு நாட்களே இருந்த நிலையில் சித்தார்த் யேசுதாஸ் அங்கிளோடு பிரதமரையும் பாதுகாப்பு ஆலோசகரையும் சந்தித்தான்.

“வி ஹாவ் நோ சாய்ஸ். சித்தார்த் சொல்வதில் நம்பிக்கை வைத்து செயல்பட தான் வேண்டும். பட் ஹொவ் டூ வி டூ இட்” பிரதமர் மிகவும் பொறுமையாக சித்தார்த் கூறுவதைக் கேட்டறிந்து தன் முன் அமர்ந்த மூவரையும் பார்த்துக் கேட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.