(Reading time: 26 - 51 minutes)

முன்னதாக யேசுதாஸ் பிரதமரிடம் சித்தார்த் பற்றியும் விஜயகுமார் பற்றியும் தெரிவித்திருந்த  படியால் சித்தார்த் மீது ஏற்கனவே நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டிருந்தது.

“சர் ஐ ஹாவ் எ ப்ளான் அல்ரடி. நான் கொஞ்சம் க்ரவுண்ட் வொர்க் கூட செய்துட்டேன். ஐ நீட் யுவர் அப்ரூவல்” சித்தார்த் தனது திட்டத்தை விவரிக்கவும் பிரதமரும் பாதுகாப்பு ஆலோசகரும் ஆச்சரியமும் வியப்பும் கொண்டனர் என்றால் யேசுதாஸ் கோபம் கொண்டு எழுந்தார்.

“இதுக்கு ஒரு நாளும் நான் அனுமதிக்க மாட்டேன். வாட் ரைட்ஸ் டூ யூ ஹாவ் டு ஈவன் சே திஸ்” என்று அவர் கேட்கவும் பதில் சொல்ல முடியாமல் திகைத்தான் சித்தார்த்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

மேலி கிராமம் பள்ளத்தாக்கு மரவீடு

லாப்டாப், கம்ப்யூடர், டிஷ் அதன் உபரி பொருட்கள் என ஒரு பெட்டியிலும் நான்கைந்து எல்.ஈ.டி ஸ்கரீன் மற்றும் அதை எல்லாம் ஒன்றோடு ஒன்று டிஷ் மூலம் இணைக்கும் வயர்கள், ஹெட்போன் என இன்னொரு பெட்டியிலும் இருந்ததை பார்த்து திகைத்த விஜயகுமார் தான் யூகித்து சரி தான் என்று நினைத்துக் கொண்டார்.

“ஏதோ பெரிய தீவிரவாத வேலை தான் இங்கு நடக்க போகுது. வந்திருக்க பொருட்களை பார்த்தா இங்கே இருந்து நேரடி தாக்குதல் மாதிரி எதுவும் தெரியல. இன்றைய சாட்டிலைட் யுகத்தில் உலகின் எங்கிருந்து வேண்டுமானாலும் எதையும் செய்யலாமே. ஏன் இந்த இடத்தை சூஸ் பண்ணிருக்காங்க. சித்துவுக்கு இதை எப்படியாவது சொல்லணும்”

அப்போதே சமீரின் தந்தை மற்றும் அவர் நண்பர் சென்றவுடன் சலங்கையை இசைத்து இந்த தகவலை அனுப்பினார் விஜயகுமார்.

இந்த மூன்று வாரங்களில் அது என்ன இடம் என்று சுற்றி திரிந்து துப்பு அறிய முடியாமல் அவரது காலின் முறிவு தடுத்து விட்டது.

இந்தப் பொருட்கள் வந்து சேர்ந்த ஓர் வாரத்தில் சமீரின் தந்தையுடன் வேறு இரு நபர்கள் அங்கு வந்தனர். வந்தவர்களில் ஒருவன் மங்கோலிய இனத்தை சேர்ந்தவன் என்று விஜயகுமார் கண்டுகொண்டார். இன்னொருவன் ஐரோப்பியனாக இருக்க வேண்டும். அவன் உயரமும் நிறமும் அவ்வாறே சொல்லியது.

ஆனால் அந்த இருவரும் சம்பல் பள்ளத்தாக்கில் பேசப்படும் மொழியை சரளமாக பேசினர். விஜயகுமார்  காது கேளாதவர் என்பதை சமீரின் தந்தை அவர்களிடம் சொல்லவும் அவர்களும் நல்லதாக போயிற்று என்று தெரிவித்து விட்டு அந்த பொருட்களை எல்லாம் அசம்பிள் செய்ய ஆரம்பித்தனர்.

மேற்கொண்டு இரண்டு வாரங்கள் சென்றதும் அங்கே இன்னொரு புதியவன் வந்து சேர்ந்தான். அவன் வந்ததும் அந்த சிஸ்டம் முழுவதையும் இயக்கினான்.

“இன்னும் ரெண்டு வாரம் கழித்து உனக்கு ஒரு தகவல் வரும். அதை இங்க வந்து சேர்த்தா போதும். அது வரை நீ இங்க வர வேண்டாம். உணவு பொருள் எல்லாம் இருக்கு தானே. இந்த வயதானவர் உதவிக்கு இருக்கட்டும்” அந்த புதியவன்  சமீரின் தந்தைக்கு கட்டளை இட்டான்.

சமீரின் தந்தையும் விஜயகுமாரிடம் சைகை செய்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

அந்த புதியவன் வேறு மொழியில் ஹெட் போனில் ஸ்பீகரில் ஏதோ பேசுவதும் கம்ப்யூட்டரை இயக்குவதுமாக இருந்தான். என்ன ஏது என்று விஜயகுமாருக்கு சரியாக புரியவில்லை எனினும் கணினித் திரையில் பூமியும் அதன் சுற்றுப்பாதையில் சாட்டிலைட்களும் தெரிந்தன.

“நியுக்ளியர்” என்ற வார்த்தை மட்டும் அவர் செவிகளில் தெளிவாக கேட்டது.

விஜயகுமாரின் சமையலை மற்ற இருவரும்  வெகுவாக ரசித்து உண்டனர். சைகையிலேயே  அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். விஜயகுமார் அதை எல்லாம் உணராதவர் போல மனநிலை அவ்வளவு சரியற்றவர் போலவே காண்பித்துக் கொண்டார்.

“இன்னும் இரண்டு வாரம் தான் உங்க சமையலை சாப்பிட போகிறோம்ன்னு நினச்சா கவலையா இருக்கு” அந்த மங்கோலியன் சைகையில் விஜயகுமாருக்கு சொன்னான்.

“புல்வெளி” “அருவி” “பள்ளத்தாக்கு” “மரவீடு” “மூன்று பேர்” “இன்னும் இரண்டு வாரம்”, “நியுக்ளியர்”, “சாட்டிலைட்” இதைத்  தான் இரவில் அந்த மூவரும் தூங்கியவுடன் நதிக்கரையில் பாத்திரங்கள் கழுவி வரும் சாக்கில் விஜயகுமார் சித்தார்த்துக்குத் தெரிவித்தது.

“ஆனாலும் இந்த தகவல்களை வைத்துக் கொண்டு சித்து எப்படி ஏதேனும் செய்ய முடியும். இந்த இடம் நாம உருண்டு விழுந்து பாதை மாறி எப்படியோ வந்து சேர்ந்தது. ஆனாலும் முறையான வழி எப்படி சொல்வது” ஆழ்ந்த யோசனையில் இருந்தார் விஜயகுமார்.

அன்று அவர் நதிக்கரைக்கு துணிகளை அலசி வர சென்ற போது பாறை ஒன்று தடுக்கி விடவே தள்ளாடி கீழே விழ இருந்தவர் அருகில் இருந்த கொடியைப் பிடித்துக் கொண்டு நிதானித்துக் கொண்டார். ஆனால் அந்த சலங்கை முத்துக்கள் அவரின் சட்டைப் பையில் இருந்து நதியில் சென்று விழுந்து விட்டன.

“ஐயோ இப்போ எப்படி நான் தகவல் சொல்லுவேன்” ஒரு வாரமாக தூக்கமின்றி தவித்தார்.

அந்த மூவருமே இப்போது பெரும்பொழுது அந்த கணினித் திரைக்குள் தான் தலையைக் கவிழ்த்துக் கொண்டிருந்தனர்.

“சமீர் அப்பா....ஆமாம் அவர் இப்போ கிராமத்துல இருப்பார். அவருக்கு எல்லாமே தெரியும். அவரு நல்லவர் தான்.... பூக்குட்டி டாடி கிட்ட சலங்கை இல்லையேடா...இருந்தாலும் எத்தனை எத்தனை ஒலிகள் இடையிலும் என் மார்பில் ஊறும் உயிருக்கு என்  ஓசை கேட்காமல் போய்விடுமா....

“ஸ ஸ ஸ மி மி மி மி  ர் ர் ப பா பா”

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1080}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.