(Reading time: 18 - 36 minutes)

15. மார்பில் ஊறும் உயிரே!!! - மது

இக்கட்டான சோதனைகளில் சரணாகதி  நீ!!!

Marbil oorum uyire

மேடம் பேச்சுப் போட்டியில் அபூர்வா பேரையும் சேர்த்துக்கோங்க”

சென்னையில் முதல் வகுப்பில் அபூர்வா படித்துக் கொண்டிருந்த போது அப்போதைய சுதந்திர தின விழாவை ஒட்டி பல போட்டிகள் நடைபெற்றன. ஒன்று இரண்டு  மூன்றாம் வகுப்பு மாணவர்கள் பிரிவில் அபூர்வாவும் பங்கெடுக்க வேண்டும் என விரும்பினார் ரத்னாவதி.

“அபூர்வா பேச்சுப் போட்டியில் ஒழுங்கா பேசுவாளா. ஏன்னா கிளாஸ்ல பர்ஸ்ட் வந்தாலும் ரொம்ப அமைதியா இருக்கா. பாடம் பத்தி கேட்டா மட்டும் தான் டான்ன்னு பதில் வருது. இல்லைனா நாங்க பத்து கேள்வி கேட்டா ஒரே வரில பதில் சொல்றா. கொஞ்சம் பயந்த சுபாவமா இருக்காளே. இது இன்டர் ஸ்கூல் காம்படிஷன் வேறு”

“மேடம். எப்படியும் இங்க செலெக்ஷன் வச்சு அதிலிருந்து பெஸ்ட் தானே இன்டர்ஸ்கூல்க்கு அனுப்புவீங்க. அபூர்வாவை நான் டிரைன் செய்றேன்” ரத்னாவதி  இப்போது தான் முன்பை விட தீவிரமாக சொன்னார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“என்ன ரதி. இதுக்கு போய் இப்படி மூஞ்சிய தூக்கி வச்சுட்டு உக்காந்திருக்க. உன்னை மாதிரியே நம்ம பொண்ணு வாயாடியா இல்லைன்னு அப்செட்டா இருக்கியா” கேலியாய் பேசி சமாதானம் செய்ய முயன்றார் விஜயகுமார்.

“அதெப்படி அந்த டீச்சர் அபியை பார்த்து ஒழுங்கா பேசுவாளான்னு கேக்கலாம். ஒரு நாள் அவள் பேசுறதை இந்த உலகமே வாயைப் பிளந்து கொண்டு  கேக்கும்” அது சபதமா இல்லை பெற்றவளின்  தீர்க்க திருஷ்டியா ரத்னாவதியின் அன்றைய வாக்கு பலிக்கும் நாளும் வந்தது.

“அபி பேசும் போது பொம்மை மாதிரி நின்னு பேசாம இப்படி ஆக்ஷன் குடுத்து பேசணும். அச்சமில்லை அச்சமில்லை (பாரதியார் பாட்டு) சொல்லும் போது கைய இப்படி உயர்த்தி சத்தமா சொல்லணும். எங்க நான் சொல்ற மாதிரி திரும்ப சொல்லு”

வெகு தீவிரமாக பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார் ரத்னாவதி. அவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் பேச்சுப் போட்டிகள் பட்டிமன்றங்கள் என்று கலக்கியவர் ஆயிற்றே.

“சரி மா” அன்னை என்றால் அபூர்வாவிற்கு கொஞ்சம் பயம் எப்போதும் உண்டு. அபூர்வா இயல்பிலேயே  சொல்படி நடக்கும் குழந்தை என்றாலும் சில பல விஷயங்களில் தவறு செய்யும் போதோ பிடிவாதம் கொள்ளும் போதோ ரத்னாவதி மிகவும் கண்டிப்பாக இருப்பார்.

அன்றொரு நாள் அபூர்வாவை அடித்து விட்டு வருந்திய போது அடிப்பதைக் குறைத்துக் கொள். ஆனால் அவளை கண்டிக்க முழு உரிமையும் உனக்கு உண்டு என்று விஜயகுமார் சொன்னதிலிருந்து அடிப்பதை விட்டுவிட்டாலும் கண்டிப்பைக் காட்டுபவராகவே இருந்தார் ரத்னாவதி.

பின்னாளில் பெரும்பாலும் விஜயகுமார் பணியின் காரணமாக பிரிந்து இருந்த நிலையில் குடும்பத்தின் நிர்வாகத்தை நேர்த்தியாக நடத்திச் சென்று குழந்தைகளின் தேவைகளையும் நிறைவேற்றிய அன்னையின் திறமை, அவர் ஒவ்வொரு விஷயத்தையும் கையாளும் முறையில் இருத்த தைரியம் எல்லாம் அபூர்வா மனதில் தாய் மீது மதிப்பை தோற்றுவித்தது.   

“டாடி கர்ல்” என்ற போதும் பெரும்பாலான சமயங்களில் அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் போதும் செயலப்படும் போதும் ரத்னாவதியின் பிம்பமாக தான் இருப்பதை அபூர்வா உணர்ந்திருக்கிறாள்.

“எனக்கு என் ரதி மாதிரியே பொண்ணு வேணும்னு ஆசைப்பட்டேன். உன் அம்மா நீ என்னை மாதிரி இருக்கணும்னு ஆசைபட்டா. அதான் ரெண்டு பேரோட சாயல்  குணம்ன்னு சரிசமமா நீ இருக்க” ஓர் நாள் ஜீன்ஸ், ஹெரிடிட்டி. வளரும் சூழல் இவற்றைப் பற்றி வீட்டில்  விவாதிக்கும் போது விஜயகுமார் சொல்லிக் கொண்டிருந்தார்.

“அப்போ நான் யார் மாதிரி டாடி” நிலா கேட்கவும்

“நீ உன் அக்கா மாதிரி நிலா. முன் ஏர் எவ்வழியோ பின் ஏரும் அவ்வழியே” ஓர் ஆழ்ந்த கருத்தை மிகச் சாதாரணமாக சொல்லிவிட்டிருந்தார்  ரத்னாவதி.

“இவ என் மாதிரியா இருக்கா. பிடிவாதம், ஆட்டிட்யூட் எல்லாம் அப்படியே சித்து தான்” அபூர்வா சொல்லவும் விஜயகுமார் சிரிக்க ரத்னாவதி “சேர்வார் சேர்கையும் ரொம்ப முக்கியம்” என்று தானும் மகிழ்ச்சியாக ஆமோதித்தார்.

“ஹாப்பாடா அக்காவே ஒத்துகிட்டா. நான் அவளை போல இல்லைன்னு. இவள மாதிரி ஆதர்ச அக்மார்க் மகளா எல்லாம் என்னால இருக்க முடியாது பா”

“நிலாகுட்டி, அக்கா இருப்பதால அவ பார்த்துப்பான்னு நீ ரிலாக்ஸா இருக்க. ஆனால் சந்தர்ப்பம் வரும் போது உன்னோட குவாலிட்டீஸ் தானே வெளிப்படும்” விஜயகுமார் சொல்லவும் தந்தையின் பாராட்டில் இன்னும் கொஞ்சம் துள்ளி குதித்தாள் நிலா. .

பூக்குட்டி தைரியமா பேசணும். உனக்கு முன்னாடி இருக்கவங்க எல்லோருக்கும் எல்லாமும் தெரியாது. அதனால அவங்களுக்கு நீ தெளிவா புரியும் படி சொல்லணும் என்ன” பேச்சுப் போட்டிக்கு செல்வதற்கு முன் மகளிடம் சொன்னார் விஜயகுமார்.

“இந்தா சாக்லேட்” அவளது கைகளில் மூன்று சாக்லேட்களைத் திணித்தார்.

“பேசும் போது நடுவில் எப்படி சாப்டுறது டாடி” மகள் புரியாமல் கேட்கவும் சிரித்தார்.

அபூர்வா பள்ளியில்  தேர்வு எழுத செல்லும் போது எப்போதும் மூன்று சாக்லேட் கொடுப்பார் விஜயகுமார். ஒன்றை தேர்வின் முன், இன்னொன்று தேர்வு எழுதும் போது நடுவில், மூன்றாவது தேர்வு முடித்ததும் என்று சாப்பிட சொல்வார்.

“இது சாப்பிட்டா மூளை நல்லா ஷார்ப்பா வேலை செய்யும் பூக்குட்டி” என்பார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.