(Reading time: 18 - 36 minutes)

வள் சொன்ன தீர்வைக் கேட்டதும் மறைத்திருந்த கருமேகம் விலகி பிரகாசித்த சூரியன் போல அவன் முகம் ஒளிர்ந்தது அபூர்வா மனதிற்கு  சொல்லவொண்ணா ஆனந்ததையும் நிம்மதியையும் அளித்தது.

“ஹேய் என்ன பதிலே காணோம். இப்போவே கான்பரன்ஸ்ல பிரசன்ட் பண்ண போறதை மைண்ட்ல ஓட விட்டுட்டு இருக்கியா

“ம்ம்” பெருமூச்சு ஒன்றை விட்டவள்  “நீ ஒரு டைம் செக் செய்திடு சித்து” பேக்கிங்கை தொடர்ந்தாள் அபூர்வா.

அவளது பிரசன்டேஷனை சரி பார்த்துக் கொண்டிருந்தவன்  இறுதி ஸ்லைட் கண்டதும்  அவளைத் திரும்பி பார்க்க அவளோ புன்னகைத்தாள்.

“எனக்கும் கொஞ்சமே கொஞ்சம் பவர் பாயின்ட் எல்லாம் தெரியும் சார்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அவன் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக லாப்டாப்பை மூடி வைத்தவன் அவளது கரம் பற்றி தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

இன்னும் இரு தினங்களில் பௌர்ணமி ஆகையால் வானில் நிலா பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.

அபூர்வாவை மெல்ல அணைத்தபடியே ஜன்னல் அருகே சென்றவன் வானின் நிலவை நோக்கிப் பார்வையை செலுத்தினான்.

“சித்து”

“ஹ்ம்ம்” என்றவன் அவளை இப்போது மார்போடு அணைத்துக் கொண்டான்.

எத்தனையோ முறை அவளை அவ்வாறு அவன் அணைத்திருக்கிறான் தான். ஆனால் இன்று அந்த அணைப்பில் இருந்த வித்தியாசத்தை அபூர்வா கண்டு கொண்டாள். அவனை நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையில் அவனது இந்த அணைப்பு ஏன் என்ற தேடல் இருந்தது.

ஒரு தெய்வம் தந்த பூவே!!!

கண்ணில் தேடல் என்ன தாயே

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!

வானம் முடியுமிடம் நீதானே!

காற்றைப் போல நீ வந்தாயே!

சுவாசமாக நீ நின்றாயே!

என் மார்பில் ஊறும் உயிரே!!!”

“என்” என அவன் அழுத்திச் சொன்னதையும் அவனது அணைப்பு இறுகியதையும் அபூர்வா உணர்ந்தாள். அந்த வார்த்தைகள் ஆன்மாவின் அடிஆழத்தில் இருந்து வெளிவந்ததை அந்த அணைப்பு உணர்த்தியது.

“பூ....” அவளது முகத்தை தன் கரங்களில் ஏந்தியவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான் .

ஓராயிரம் வார்த்தைகள் கூற முடியாததை அந்த செயல் தெரிவித்து விட்டது. அவளோ அவனது அழைப்பைக் கேட்டு திகைப்பும் ஆச்சரியமுமாக நின்றாள்.

தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிமிழை எடுத்தவன் அதிலிருந்த குங்குமத்தை எடுத்து அவளது புருவ மத்தியில் வட்டமாக வைத்து விட்டான்.

“ஸ்ஸ்ஆ” அவள் லேசாக முனங்கினாள்.

“சாரி பில்லி. நாளைக்கு கண்டிப்பா நகம் கட் பண்றேன். இது வாட்டர் ப்ரூப் குங்குமம் பில்லி” என்றான்.

“என்ன வாட்டர் ப்ரூப் குங்குமமா ...எதுக்கு சித்து”

“கரப்பான் பூச்சி அதனோட ‘கொ.ப.செ’க்கு வெற்றித் திலகம் வைத்து விட சொல்லிச்சு. உன் பிரசன்டேஷன் வரை அழியாம இருக்கனும்ல அதான்”

“சும்மா சும்மா என்னைய கரப்பான் பூச்சி வச்சு  கேலி பண்ணிட்டே இருக்க. Clinical trails க்கு அப்ரூவல் மட்டும் கிடைக்கட்டும். கரப்பான் பூச்சிய உன் மேல மேய விடறேன்” பதிலுக்குப்  பதில் கொடுத்து கலகலவென சிரித்தாள்.

“இனி நீ எப்போவும் இதே போல சந்தோஷமாக சிரிச்சுட்டே இருக்கணும். ஐ வில் மேக் ஸ்யூர்” மனதில் நினைத்தவன் மீண்டும் அவளை மெல்ல அணைத்துக் கொண்டான்.

சித்து. clinical trials அப்ரூவ் ஆகிருச்சு” கான்பரன்ஸ் முடிந்ததும் சித்தார்த்க்கு கால் செய்து  தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாள் அபூர்வா.

“ஐயோ ஆராய்ச்சி பண்றேன்னு என் மேல கரப்பான்பூச்சிய மேய விட்டுடுவாளே” அவளை கேலி செய்தவன் உண்மையில் மிகவும் மகிழ்ந்து போனான்.

“இதுக்கு பண உதவியும் நிறைய கிடைச்சிருக்கு சித்து”

“இனி clinical trials எங்க செய்யணும்டா”

“நிறைய ச்டேஜஸ் இருக்கு. எல்லாம் வந்து சொல்றேன்”

“நீ எங்க இருக்க பில்லி இப்போ”

“நான் கான்பரன்ஸ் வென்யூக்கு ஜஸ்ட் வெளில இருக்கேன். ரிஷி அங்கிள் கார் அனுப்பறேன்னு சொல்லிருக்கார். ஐ ஆம் வெய்டிங்.... எனக்கு இப்போவே இங்கேயே டான்ஸ் ஆடணும் போல இருக்கு சித்து. சந்தோஷமா ஆடணும். டாடிக்கு கேக்கணும். ஹ்ம்ம் நாளைக்கு மதியம் தான் அங்க வர முடியும். கரெக்ட்டா ஏர்போர்ட் வந்திரு சித்து”

அவள் சொல்லவும் சித்தார்த் புன்னகைத்தான்.

“வரேன் வரேன்” அவளிடம் சொன்னவன் அழைப்பைத் துண்டித்தான்.

“டாடி கேக்கணும் இல்ல பார்க்கணும்...நீ அடுத்து ஆடும் போது மாமா பார்க்கணும். பார்க்க வைப்பேன்” மனதிற்குள் உறுதியாய் சொல்லிக் கொண்டவன் கருப்பு நிற பேசும் கருவியை எடுத்து பட்டனை பிரஸ் செய்தான்.

“OPERATION CAT BEGINS

அடுத்த அத்தியாயத்தில் நிறைவு பெறும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:1080}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.