(Reading time: 54 - 107 minutes)

16. மார்பில் ஊறும் உயிரே!!! - மது

மரணம் ஈன்ற ஜனனம் நீ!!!

Marbil oorum uyire

நாள் 1 ; நேரம் 18.30 (GMT +1)  ; ஜெனீவா 

“ஓகே பை சித்து” சித்தார்த்துடன் பேசி முடித்து விட்டு கான்பரன்ஸ் அரங்க வாயிலில் ரிஷி சிங் அனுப்பும் காருக்காக  காத்துக் கொண்டிருந்தாள் அபூர்வா.

“டாக்டர் RVK “ அபூர்வா ரத்னாவதி விஜயகுமார் என்ற அவளது பெயரை சர்நேம் இனிஷியல்ஸ் வைத்தே கான்பரன்சில் அனைவரும் அவளை அழைத்தனர்.  

“யெஸ்”

“ஐ ஆம் டாக்டர் பெய்லி ப்ரம் UCLA.  ஐ ஆம் வெரி இம்ப்ரெஸ்ட் பை யுவர் ரிசர்ச். வுட் லைக் டு பி எ பார்ட் ஆப் யுவர் CLINICAL TRIALS” தன்னை அறிமுகம் செய்து கொண்டு அவரது விசிடிங் கார்ட் கொடுத்தார்.

அபூர்வா அங்கு உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு மேலும் சிலர் வாழ்த்துக்கள் தெரிவித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தனர்.  

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“எக்ஸ்க்யூஸ் மீ மேம். யுவர் கார் ஹாஸ் அரைவ்ட்” சிப்பந்தி வந்து சொல்ல தன்னுடன் உரையாடிக் கொண்டிருந்த அனைவரிடமும் விடைபெற்று காரை நோக்கிச் சென்றாள்.

அதே நேரம் அவள் போன் ஒலிக்கவும் எடுத்தவள் “கான்பரன்ஸ் முடிஞ்சது மாமா.... ஆமா அத்தை..... நாளைக்கு மதியம் வருவேன் மா... எல்லாம் வாங்கி வச்சிருக்கேன் பாப்பா. கொண்டு வரேன்” போன் பேசிக் கொண்டே  வந்தவள் டிரைவரின் கரம் கார் கதவைத் திறந்து விட அதில் அமர்ந்தாள்.

கார் சட்டென சீறிப் பாய போன் பேசி முடித்தவள் அப்போது தான் தான் முன் சீட்டில் அமர்ந்திருப்பதை உணர்ந்தாள்.

“டிரைவர்” என்று திரும்பியவள் கண்கள் விரிந்தன.

அவள் அசையாமல் இருக்க சீட் பெல்ட்டை போட்டு விட்ட அந்தக் கரம் காரை வேகமாய் செலுத்தியது.

“CAT  WRAPPED”

நாள் 2 ; நேரம் 08.30 (GMT+5.30 ) ; இந்திய எல்லைப் பாதுக்கப்பு முகாம் வடமேற்கு காஷ்மீர்

இமய மலையின் பனிப் படர்ந்த சிகரத்தில் இருக்கும் இந்திய எல்லை பாதுகாப்பு முகாம் வந்து சேர்ந்தனர் யேசுதாஸ், மோகன் ராய் மற்றும் சில தேர்ந்த இன்டலிஜன்ஸ் ஆபிசர்ஸ்.

“மிஸ்டர் தாஸ், பாதுகாப்பு ஆலோசகர் கொஞ்சம் நேரம் முன்னாடி தான் நேரடியா பேசினார். வி வில் கிவ் அவர் புல் சப்போர்ட்” அந்த முகாமின் உயர் ராணுவ அதிகாரி மேஜர் வாசுதேவ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

“எங்களுக்கு கிடைத்த இன்டலிஜன்ஸ் தகவல் படி நம்ம LOC தாண்டிய இந்த சம்பல் கிராமத்தில் இருந்து தான் மெசஜ் டிரான்ஸ்பர் ஆகிருக்கு. சமேலி பள்ளத்தாக்கு அடிவாரத்தில் இருக்கும் கிராமம் தான் சம்பல். சமேலி கம்ஸ் அண்டர் அவர் கண்ட்ரோல். சம்பல் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகள் எல்லைக்கு அப்பால் இருக்கின்றன” யேசுதாஸ் வரைபடத்தில் சம்பல் கிராமம், சமேலி பள்ளத்தாக்கு ஆகியவற்றின் லொகேஷன் காண்பித்து, முன்னர் சித்தார்த் டிகோட் செய்ததையும் மெசேஜ் பரிமாறப் பட்ட தகவலையும் காண்பித்தார்.

“மேஜர் வாசுதேவ். ஐ ஆம் பர்சனலி இன்வால்ட் இன் திஸ் பிகாஸ் யூ நோ தி ரிசன்” யேசுதாஸ் சொல்லவும் அந்த ராணுவ அதிகாரியும் உணர்ச்சி வசப்படார்.

“திஸ் பிகம்ஸ் பர்சனல் டு அஸ் ஆல்சோ மிஸ்டர் தாஸ்”

“மோகன் இஸ் ஹியர் பார் டெக்னிகல் ஹெல்ப். நாம இந்த இடத்தை நம் எல்லையில் இருந்து இவ்வாறு வளைத்து அணுகணும்”

“இது ஸ்கார்பியோ மாடல் அட்டேக். வெரி பர்பெக்ட் மிஸ்டர் தாஸ்” மேஜர் வாசுதேவ் சிலாகித்தார்.

“வி ஷுட் பி கேர்புல்”

யேசுதாஸ் திட்டத்தை விவரித்ததும் மேஜர் வாசுதேவ் தனது படை வீரர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு ஆணைகள் பிறப்பித்தார்.

“ஒகே வி வில் மூவ் அஹெட்” மேஜர் வாசுதேவ் சொல்லவும் வீரர்கள் அனைவரும் ஸ்கார்பியோ வியூகத்தின் படி அந்த பனி படர்ந்த சிகரத்தில் இருந்து சமேலி பள்ளத்தாக்கு நோக்கி நகர்ந்தனர்.

நாள் 2 ; நேரம் 18.00 (GMT+5.30 ) சம்பல் கிராமத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில்

“யஹான் தக் ஹி ஹமாரா பார்டர் சாப். இஸ்சே ஆகே நஹி ஜா சக்தேன்” ( இது வரை தான் நமது எல்லை. இதற்கு மேல் என்னால் செல்ல முடியாது) ஜீப் ஒட்டிக் கொண்டு வந்தவன் சொல்லவும் அந்த முதியவர் அவனுக்கு நன்றி தெரிவித்து பணத்தைக் கொடுத்தார்.

“சாப். மாப் கர்னா. மைன் அவுர் மதத் நஹி கர் பா ரஹா ஹூன்” (என்னால் இதற்கு மேல் உதவி செய்ய முடியாமல் போவதற்கு மன்னிக்கவும்)

“ஆப்கி பலா ஹோ பேட்டா. ஜுக் ஜுக் ஜியோ ( உனக்கு எல்லா நலமும் கிடைக்கட்டும் மகனே. நீடூழி வாழ்வாய்) அவனை வாழ்த்தி விட்டு ஜீப்பில் இருந்த ஒரு பெரிய பேக்கை தன் தோளில் மாட்டிக் கொண்டு, ஓர் மிருதுவான துணியால் மூடப்பட்டிருந்ததைக் கைகளில் தூக்க மாட்டாமல் கஷ்டப் பட்டு தூக்கி சுமந்து கொண்டு சம்பல் கிராமம் நோக்கி முன்னேறினார்.

சிறிது தொலைவிலேயே சமீரின் தந்தை அங்கே ஓர் கோவேரி கழுதையுடன் காத்துக் கொண்டிருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.