(Reading time: 54 - 107 minutes)

நாள் 2 ; நேரம் 22:00 (GMT+5 )  சமேலி பள்ளதாக்கு மரவீட்டில் இருந்து சிறிது தொலைவில்

மிகுந்த அடர்ந்த மரங்கள் கொண்ட அந்தப் பகுதியில் நிலவின் ஒளி பிரகாசமாக இருந்த ஓர் இடத்தைத் தேர்வு செய்து தனது பையை திறந்து கணினியையும் ஓர் மோடம் போன்ற கருவியையும் செட் செய்தான் சித்தார்த்.

அவன் அதை உயிர்ப்பித்ததும் கருப்பு நிற பேசும் கருவியை எடுத்து அதில் இருந்த பட்டனை அழுத்தி யேசுதாஸ்க்கு “ CAT REACHED DESTINATION…ஸ்டார்ட் கனக்ஷன்ஸ்” என்று தகவல் சொன்னான்.  

இப்போது அவனது கணினி திரையில் “SERVER FOUND” என ஒளிர  ப்ரோக்ராம் ரன் செய்து என்டர் பட்டனை அழுத்தினான். “DATA TRANSFER ON”  என்று திரையில் தெரியவும் “யெஸ்” என்று தனக்குத் தானே பாராட்டினை தெரிவித்துக் கொண்டவன் TAB போன்ற ஒரு கருவியின் வாயிலாக அந்த மரவீட்டில் நடந்து கொண்டிருந்ததைத் தெள்ளத் தெளிவாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சக்ர வியூகம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“DATA TRANSFER COMPLETED” என கணினியின் திரையில் தெரியவும் சிறிது நேரத்திலே யேசுதாஸ் கிடைத்துவிட்டது என பதில் தெரிவித்தார்.

அனைத்தையும் மூடி பையில் வைத்து முதுகில் சுமந்து கொண்டு அந்த மரவீட்டினை நோக்கி நகர்ந்தான்

நடந்து கொண்டே TAB திரையில் பார்வையை செலுத்திக் கொண்டிருந்தவன் அப்போது தெரிந்த உருவத்தைக் கண்டு சிலிர்த்தான்.

“மாமா” அவன் உதடுகள் முணுமுணுக்க விரைவாக மரவீடு நோக்கி சென்றான்.

அவன் கண் பார்வையில் மரவீடு தெரிந்த சமயம் TAB திரையில் தெரிந்த காட்சி கண்டு ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டான்.

“மை குட்னஸ்” உடனே சுதாரித்தவன் கருப்பு நிற கருவியில் செய்தி சொல்லிக் கொண்டே  மரவீட்டினை நோக்கி ஓடினான்.

“CAT IN DANGER. ATTACK”

நாள் 2 ; நேரம் 22:30 (GMT+5 )  சமேலி பள்ளதாக்கு மரவீடு

சமீரின் தந்தையுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த அந்த மூவரில் தலைவன் போல இருந்த புதியவன் மற்ற இருவரிடமும் ஏதோ சொல்லிவிட்டு கணினித் திரை நோக்கி நகர முற்பட்டான்.

அதே சமயம் அந்த பர்தா உருவம் லேசாக சிலிர்க்கவும் மற்ற இருவரும் சென்று ஆளுக்கு கையில் ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அந்த உருவத்தை மெல்ல நெருங்கினர்.

அப்போது ஒரு பெருத்த சத்தம் கேட்கவும் அனைவரும் திகைக்க அங்கு இருந்த கணினித் திரைகள் எல் ஈ டி திரைகள் அனைத்தும் கிராஷ் ஆகின. அந்த டிஷ் முதற்கொண்டு ஷார்ட் சர்கியுட் ஆகி விழ அந்த மர வீட்டின் கூரை இப்போது பாதி உடைந்து விழுந்தது.

அவர்கள் வைத்திருந்த சோலார் எனெர்ஜி சிஸ்டம் இந்தக் கணினியோடு பொருத்தப்பட்டிருந்ததால் அதன் பாட்டரிகளும் கிராஷ் ஆகவே செயற்கை ஒளி விளக்குகள் அணைந்து போயின.

உடைந்த கூரை வழியே நிலவொளி பிரகாசிக்க நிமிட நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்திருக்க அந்த மூவரும் இப்போது பர்தா அணிந்த உருவத்தை நோக்கி நகர விஜயகுமார் கையில் இருந்த பாத்திரங்களை அவர்கள் மீது வீசினார்.

இந்தத் தாக்குதலை எதிர்ப்பார்க்காத அவர்கள் தடுமாறுகையில் அந்த பர்தா அணிந்த உருவம் இப்போது விஜயகுமாரை நோக்கி ஓட இடையில் சமீரின் தந்தை அந்த உருவத்தைப் பிடிக்க முற்பட இருவரும் தரையில் சரிந்தனர்.

அதற்குள் அந்த மங்கோலியன் விழுந்த துப்பாக்கியை எடுத்து விழுந்திருந்த இருவர் மீது இலக்கில்லாமல் சுட அதை பார்த்துவிட்ட பர்தா உருவம் சட்டென்று விலகி விட சமீரின் தந்தையை நோக்கி அந்த தோட்டா பாய

“பூக்குட்டி”

“டாடி”

“மாமா”     

அந்த இரவு நேரத்தில் அந்த பள்ளத்தாக்கு முழுவதும் எதிரொலித்தது.

“CAT RESCUED. OPERATION CAT SUCCESS”

நாள் 2  ; நேரம் 23:00 (GMT+ 5.30)  பிரதமர் அலுவலகம்; புது தில்லி

“சர். சித்தார்த் அனுமானித்தது முற்றிலும் உண்மை” பாதுகாப்பு ஆலோசகர் கான் பிரதமரிடம் யேசுதாஸ் அனுப்பிய தகவல்களைத் தெரிவித்தார்.

உடனடியாக யேசுதாஸ்ஸை தொடர்பு கொண்டு ஆலோசித்தார் பிரதமர்.

அதே நேரம் பாதுக்கப்பு துறை அமைச்சர், வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் முக்கிய அதிகாரிகள் அந்த நள்ளிரவில் அவசரமாக வந்து சேர்ந்தனர்.

அவசர ஆலோசனை கூட்டம் நடத்திய பிரதமர் உடனேயே லிஸ்ட்டில் இருந்த நாட்டின் அதிபர்கள், பிரதமர்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார்.

பாரத பிரதமர் கூறிய தகவலைக் கேட்டு அதிர்ந்தவர்கள் அவருக்கு நன்றி சொன்னதோடு அது பற்றிய விரிவான தகவலை அனுப்புமாறு வேண்டினர்.  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.