(Reading time: 54 - 107 minutes)

ந்த அறைக் கதவை திறந்து உள்ளே நுழைந்த ரத்னாவதி நகர முடியாமல் ஸ்தம்பித்து சிலையாய் நிற்க நிலா டாடி என்று கூவிக் கொண்டே விஜயகுமாரிடம் ஓடினாள்.

“டாடி. எனக்குத் தெரியும் நீங்க வந்திருவீங்கன்னு அக்கா அப்போவே சொன்னா” நிலா விஜயகுமாரை அணுகி அவரை அணைத்துக் கொள்ள மகளை முத்தமிட்டவர் பார்வை மனைவி மீதே இருந்தது.

“நிலாபாப்பா. வா நாம அம்மாக்கும் டாடிக்கும் காபி வாங்கிட்டு வரலாம்” அன்னைக்கும் தந்தைக்கும் தனிமை கொடுக்க வேண்டி நிலாவுடன் வெளியில் சென்றாள் அபூர்வா.   

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

நாள் 3 ; நேரம் 18 :30 (GMT+ 5.30 )  தூர்தர்ஷன் ஸ்பெஷல் நியுஸ்

முக்கிய செய்தி

மிக பயங்கரமான தீவிரவாத தாக்குதல் முயற்சி ஒன்றை இந்திய ராணுவம் இன்டலிஜன்ஸ் உதவியுடன் முறியடித்து உலகத்தை மிக அபாயகரமான அணுகுண்டு தாக்குதலில் இருந்து காப்பற்றி உள்ளது. இது குறித்த விரிவான தகவல் வருமாறு.

நேற்றைய நள்ளிரவில் மிக ஷக்தி வாய்ந்த அணுகுண்டுகள் மூலம் உலகின் முக்கிய நகரங்களை தாக்க மிக பயங்கர தீவிரவாத அமைப்பினர் திட்டமிட்டு இருந்தனர்.

எட்டு வருடங்கள் முன் ஓர் தீவிரவாத முகாமை அழிக்கும் முயற்சியில் வெற்றி பெற்று திரும்பும் வேளையில் விபத்துக்கு உள்ளான இந்திய விமானப் படை காப்டன் ஆர் விஜயகுமார் இறந்து விட்டார் என்று நம்பப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து இந்திய இண்டலிஜன்ச்க்கு இந்த தீவிரவாத திட்டம் பற்றிய தகவல் வந்தது.

காஷ்மீர் பகுதியின் எல்லை தாண்டிய பகுதியின் பள்ளத்தாக்கு ஒன்றில் உயிர் மீண்ட காப்டன் விஜயகுமார் சுயநினைவு தப்பிய நிலையில் இத்தனை வருடங்கள் இருந்து வந்திருக்கிறார். சமீபமாக ஓர் விபத்தில் அவர் மீண்டும் சிக்கிய போது சுயஉணர்வு அடைந்தார். அச்சமயம் இந்த தீவிரவாத கும்பலின் சதி பற்றி அவருக்குத் தெரிய வந்தது.

மிகவும் சமயோசிதமாக செயல்பட்டு இந்திய இன்டலிஜன்ச்க்கு தகவல் கொடுத்தவர் அவர்களின் நடவடிக்கைகள் பற்றியும் துப்பு அளித்தார்.

அதன் அடிப்படையில் இன்டலிஜன்ஸ் ஜாயின்ட் டைரக்டர் யேசுதாஸ் தலைமையிலான குழு எல்லை பாதுகாப்பு படையினரோடு சேர்ந்து “ஆபரேஷன் கேட்” என்ற வியூகம் வகுத்து நேற்று நள்ளிரவில் இந்த தீவிரவாத முயற்சியை முறியடித்து வெற்றி கண்டனர்.

உலகத்தின் மற்ற நாடுகளுக்கும் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் காத்தனர்.

இந்த தகவலினால் அந்த தீவிரவாத அமைப்பின் பல்வேறு முகாம்களும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த முயற்சியில் குண்டு அடிப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கும் காப்டன் விஜயகுமாரை பிரதமர் நேரில் சந்தித்து தனது பாராட்டினை தெரிவித்து விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நம்மிடையே தற்போது பாதுக்கப்பு ஆலோசகர் திரு கான் உடனிருக்கிறார்.

“இந்த தீவிரவாத கும்பல் எப்படி பட்ட தாக்குதலை திட்டமிட்டிருந்தது”

“அவர்கள் மிகவும் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகின் முக்கிய நகரங்களில் அணுகுண்டுகள் வெடிக்குமாறு திட்டமிட்டிருந்தனர். செயற்கை கோளை பயன்படுத்தி அதன் மூலம் ஒரே நேரத்தில் அந்த குண்டுகள் உலகின் பல பகுதிகளில் வெடிக்குமாறு செட் செய்திருந்தனர்”

“அவர்கள் சமேலி பள்ளத்தாக்கில் இருந்து தான் தாக்குதலை திட்டமிட்டிருந்தார்கள் என்று கூறப்படுகிறதே”

“ஆம். அந்த பள்ளத்தாக்கில் பூமியின் மேக்னடிக் பீல்ட் அதிகமாக உள்ளது. அந்த இடத்தில் முழுநிலவும் செயற்கை கோளும் ஒரே நேர்கோட்டில் வரும் போது செயற்கை கோள் ஒருசில வினாடிகள் செயழிழந்து போகும். அந்த விநாடிகளைப் பயன்படுத்தி அவர்கள் அதில் தங்களது ப்ரோக்ராமை வைரஸ் போல புகுத்தி விட்டு சாட்டிலைட் மூலம் குண்டுகள் வெடிக்க திட்டமிட்டிருந்தனர்.

“இந்த விவரங்கள் கேப்டன் விஜயகுமார் உங்களுக்கு எவ்வாறு தெரிவித்தார்?”

“காப்டன் விஜயகுமார் தீவிரவாத கூட்டத்தின் நடவடிக்கைளை கண்டு சந்தேகம் அடைந்து  முக்கிய தகவல்களை இன்டலிஜன்ஸ்க்கு தெரிவித்திருந்தார். நமது  இன்டலிஜன்ஸ்சில் இருக்கும் மிகத் திறமையான அதிகாரிகள் மற்றும் எல்லை ராணுவ வீரர்கள் இதை சாத்தியமாக்கினர். பாதுகாப்பு காரணங்களால் மேற்கொண்டு தகவல்களை என்னால் தெரிவிக்க முடியாது.

“மற்ற நாடுகள் இது குறித்து தெரிவித்த கருத்துக்கள்”

“நமது பிரதமர் நேரிலேயே தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவிக்க அவர்களும் அதிவிரைவில் செயல்பட்டு மொத்த தீவிரவாத கூட்டத்தையும் கைது செய்து விட்டனர். குண்டுகள் அனைத்தும் கண்டுபிடிக்கப் பட்டு செயழிழக்க செய்யப்பட்டு விட்டன. உலக நாடுகள் அனைத்தும் நமது பாரததிற்கு நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்து உள்ளனர்.

“இந்த முயற்சியில் குண்டு அடிப்பட்ட காப்டன் விஜயகுமார் நலமாக உள்ளாரா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.