(Reading time: 54 - 107 minutes)

நிலாவை சந்தோஷ் வீட்டில் விட சென்ற அபூர்வா சித்தார்த் கிளம்புகையில் சித்தார்த் சந்தோஷ் பெற்றோரிடம் நிலாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் படி கேட்டுக் கொண்டான்.

“சந்தோஷ் அவ இன்னும் குழந்தையா தான் இருக்கா. நீ தான் பத்திரமா பார்த்துக்கணும். பார்த்துப்பல” இப்போது அபூர்வா மிகவும் சீரியஸாக சொல்லவும் நிலா தமக்கையை கட்டிப் பிடித்துக் கொண்டு ஓவென அழ ஆரம்பித்தாள்.

“அழக் கூடாது. நிலா பாப்பா சமத்துல. தைரியமா இருக்கணும். நீ இப்போ பெரிய பொண்ணு ஆகிட்ட” தங்கைக்குத் தைரியம் சொன்னவள் வீட்டிற்கு வந்ததும் தந்தையின் மடியில் படுத்து அழுது கரைந்தாள்.

இன்னொரு பக்கம் சித்தார்த்தும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தான். இப்போது அவனை சமாதானம் செய்யும் பொறுப்பு அபூர்வாவிற்கு இருந்தது.

நிலா சித்தார்த்தின் பொக்கிஷம். அபூர்வா மூலம் கடவுள் அளித்த வரம். தகுதியான தங்க கிரீடத்தில் தான் அவனின் வைரம் ஒளிர்கிறாள் என்று புரிய வைத்தாள் அபூர்வா.  

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ந்த விசாலமான ஏர்போர்ஸ் கம்யுனிட்டி ஹால் முழுவதும் மகிழ்ச்சி குரல்களால் நிறைந்திருந்தது. விஜயகுமார் ரிடயர்மன்ட் விழாவை ஒட்டி அவர் அனைவருக்கும் அளிக்கும் தேங்க்ஸ் கிவிங் பார்ட்டி நடந்து கொண்டிருந்தது.

ஏர்போர்ஸ் நண்பர்கள், யேசுதாஸ், மோகன் ராய், மேஜர் வாசுதேவ் அனைவரும் வருகை தந்திருந்தனர். சித்தார்த் அபூர்வா பள்ளி நண்பர்களையும் கல்லூரி நண்பர்களையும் அழைத்திருந்தனர். சித்தார்த் நிறுவனத்தைச் சேர்ந்த அனைவரும் அங்கு வந்திருந்தனர்.

திருமணம் முடிந்து மறுவீடு வந்து சீராடி விட்டுப் போன பிறகு மீண்டும் நிலா சந்தோஷ் அவனது பெற்றோருடன் வந்திருந்தனர்.

லலிதாம்பிகை உடல் நிலை காரணமாக பத்மா, ராமசந்திரன் வரமுடியாமல் போனாலும் காவ்யா தன் கணவன் குழந்தை மற்றும் கார்த்திக்குடன் வந்திருந்தாள்.

விஜயகுமார்க்கு சர்ப்ரைஸ் கிப்ட்டாக சமீர் மற்றும் அவன் தாய் தந்தை சகோதரிகளை வரவழைத்து இருந்தான் சித்தார்த்.

அபூர்வா ஓடிச் சென்று சமீரை அணைத்துக் கொண்டாள்.

“பில்லி டோன்ட் கெட் எமோஷனல்” சித்தார்த் ஞாபகப் படுத்தவும் சமாளித்துக் கொண்டாள்.  

“கப் ஷாதி கியா ரெ தும் லோகோன் நே” (எப்போது திருமணம் செய்து கொண்டீர்கள் நீங்கள் இருவரும்)

“யார் முதலில் காதலை சொன்னீர்கள்”

விழாவில் விஜயகுமார் சித்தார்த்தை தனது மகள் அபூர்வாவின் கணவன் என்று குறிப்பிட்டு பேசவும் நண்பர் வட்டம் அபூர்வா சித்தார்த்தை சூழ்ந்து கொண்டது. அது வரை யாருக்கும் தெரிவித்திருக்கவில்லை அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்பதை.

“கப் கைசே கோன் பதா ஹி நஹி” ( எப்போது எப்படி யார் தெரியவே இல்லை) சித்தார்த் சொல்லவும் நண்பர்கள் எல்லோரும் ஆரவாரமாய் சிரித்தனர்.

“ ஐ நோ” என்ற மிதுன் “பர்ஸ்ட் கிளாஸ் படிக்கும் போது  எங்க எல்லோரையும் அடிச்சிருவேன்னு மிரட்டிட்டு அபி கை பிடிச்சு கூட்டிட்டு போனியே அப்போ தானே” என்றான்.

“இல்லை இல்லை நாம ராம் லீலா நாடகம் போது. சுயம்வரம்ல அபி சித்க்கு மாலை போட்டாளே அப்போ” என்று தீப்தி சொல்ல

சந்தோஷ், ”இல்ல இல்ல நெருப்புல இருந்து கைய பிடிச்சு வெளில இழுத்தானே அப்போ...என்னைய ஒரு முறை விட்டானே மறக்கவே மாட்டேன். என்னவோ நான் தான் நிஜமாவே நெருப்பு மூட்டின மாதிரி” என்று சொல்லவும் அது மட்டும் தான் மறக்கலையா என்று தீப்தி கேலி செய்ய கன்னத்தைப் பிடித்துக் கொண்டு “தாயே ஆளை விடு..எதுவுமே மறக்கலை” என்று பயந்தவாறு நடிக்கவும் அங்கே ஒரே சிரிப்பலை.  

“ஐ திங்க் பிரகதி மைதான்ல சித் ப்ரைஸ் வாங்கும் போது அபியையும் கைபிடிச்சு அழைச்சுட்டு போனானே....அப்போ தானே சித்” சோனல் அவள் பங்கிற்கு சொன்னாள்.

“மற்றவர் எங்களது பந்தத்தை பல வித அழகிய வண்ணங்களாக பார்க்கலாம். சிலர் எங்களை நண்பர்களாக பார்க்கலாம். சிலர் உறவினர்களாக, சிலர் காதலர்களாக, சிலர் கணவன் மனைவியாக பார்க்கலாம். எல்லா வண்ணங்களும் வெண்மையில் அடங்குவது போல எல்லா உறவுகளையும் உள்ளடக்கியது தான் எங்கள் பந்தம்”

சித்தார்த் சொல்லவும் அவர்கள் இருவரையும் அறிந்த அனைவரும் ஒத்துக் கொண்டனர்.

ராணுவ பார்ட்டி என்றாலும் அபூர்வா சித்தார்த் ஸ்ட்ரிக்ட் நோ சொன்னதால் லிகர் இல்லாமல் இருந்தாலும் பார்ட்டி கலகலவென சென்றது.

ஒரு பக்கம் டிஜே நடந்து கொண்டிருக்க இளைஞர் கூட்டம் அதில் உற்சாகமாக ஆட பெரியோர் ரசித்துக் கொண்டிருந்தனர்.

“சித்... எ டான்ஸ் வித் அஸ்” சித்தார்த்துக்கு அழைப்பு வரவே அபூர்வா போ போ என்று அவனை அனுப்பி வைத்தாள்.

நிலா சந்தோஷின் பெற்றோரை அன்போடும் அக்கறையோடும் உபசரித்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்து ரசித்தபடியே சித்தார்த், அபூர்வா மற்றும் சந்தோஷ் அமர்ந்திருந்த இடம் நோக்கி வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.