(Reading time: 54 - 107 minutes)

தாங்க்ஸ் உங்க சன் இன் லாக்கு சொல்லுங்க. இட் வாஸ் ஹிஸ் மாஸ்டர் ப்ளான்” பிரதமர் கூறவும் சித்தார்த் சங்கடத்தில் நெளிந்தான்.

“உங்க பர்மிஷன் இல்லாமலே உங்க மகளை மேரேஜ் செய்துட்டார்” பிரதமர் சிரித்துக் கொண்டே கூறவும் விஜயகுமார் இப்போது பெரிதாக புன்னகைத்தார்.

“தட்ஸ் நாட் சோ சர். நான் எட்டு ஆண்டுகள் முன்னாடியே என் மகளை சித்தார்த் கரங்களில் ஒப்படைத்து விட்டேன்” மகிழ்ச்சியாக அவர் சொல்லவும் சித்தார்த் இப்போது விஜயகுமாரைப் பார்த்து புன்னகைத்தான். 

“உங்க ஹெல்ப் இல்லாம என்னால எதுவும் செய்திருக்க முடியாது சர்” பணிவாக சொன்ன சித்தார்த் அந்த மாஸ்டர் ப்ளானை விவரித்தான் .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அனிதா சங்கரின் "அவளுக்கென்று ஒரு மனம்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

பூர்வா ‘ஸ ஸ ஸ மி மி மி மி  ர் ர் ப பா பா’ என்று முனங்கிய அன்று “சமீர் அப்பா” இந்த மனிதர் யார் என்று முதலில் தெரிய வேண்டும் என்று எண்ணிய சித்தார்த் யேசுதாஸ்ஸிடம் உதவி நாடினான்.

“அங்கிள் அந்த சம்பல், சமேலி வாட்டெவர்...அந்த கிராமத்தில் இருக்க மக்களோட டீடைல்ஸ் வேணும்”

“கண்டிப்பா. அது ஒன்னும் கஷ்டம் இல்ல. பொலிடிகல் பவுண்டரிஸ் தான் பிரித்திருக்கே தவிர  மக்கள் எல்லாம் எல்லை பகுதிகளில் ஒருவரோடு உறவாக தொடர்பில் தான் இருக்காங்க”

அவன் தகவலை கேட்ட ஓரிரு தினங்களில் யேசுதாஸ் சமீரின் தந்தை பற்றிய முழு விவரங்களைக் கொடுத்தார். அதில் சமீரின் தந்தையின் போன் நம்பரும் அடக்கம்.

“ஆஹ் மை ஜாப் பிகம்ஸ் ஈசி நவ்” நிமிடத்தில் சித்தார்த் அந்த போனை ஹேக் செய்து விட்டான். அதில் இருந்த தகவல்களை அறிந்தவன் சமீரின் தந்தையைப் பயன்படுத்தி தான் விஜயகுமாரை அணுக முடியும் என்பதை தெளிவாக அறிந்து கொண்டான்.

“பி எம்மை சந்தித்து இதையெல்லாம் சொல்லி...டைம் இல்ல... நான் ஏதாச்சும் செய்தாகணும்” மனதில் நினைத்தவன் சமீரின் தந்தைக்கு எந்த நம்பரில் இருந்து மெசேஜ் வருகிறதோ அதே நம்பரில் இருந்து மெசேஜ் செல்வது போல ஹேக் செய்து சித்தார்த் அனுப்பினான்.

“CATWALK IN MOONLITE” இதே போல மெசேஜ் காட்டி ஒருவன் தந்து செல்வதை பத்திரமாக மரவீட்டில் ஒப்படைக்க வேண்டும்.

மரவீடு என்று தான் விஜயகுமார் ஏற்கனவே செய்தி அனுப்பி இருந்தாரே.

பிரதமரை சந்தித்து தனது திட்டத்தை விவரித்தான்.

“சர். அபூர்வா விஜயகுமார் மாமாஸ் டாட்டர் அணுசக்தி மாநாட்டில் பிரசன்ட் செய்ய ஜெனீவா போறா. அவள் அங்கிருந்து  கிட்னாப் செய்யப்பட்டு சமீரின் தந்தையிடம் ஒப்படைக்கப் படுகிறாள். இது நம்ம இன்டலிஜன்ஸ்க்கு தெரிந்து அபூர்வாவை மீட்க ஆர்மி ஹெல்ப் கேட்கிறாங்க. ஏன்னா அபூர்வா ரிசர்ச் இஸ் வெரி இம்பார்டன்ட் பார் மேன்கைண்ட். அண்ட் அணுசக்தி பற்றியது சோ தீவிரவாத அமைப்பு இதிலே இன்வால்வ் ஆகிருக்க சச்பிஷன் இருக்கு அப்படின்னு சொல்றோம். சோ அவளை மீட்க ஆர்மி வில் மூவ் டுவர்ட்ஸ் தட் பள்ளத்தாக்கு. மாமா ராணுவ வீரர் ஆகையால் ஆர்மி வில் ஹாவ் எ பர்சனல் அட்டாச்ட்மண்ட் ஆல்சோ டுவார்ட்ஸ் அபூர்வா”

“மாமா சொன்ன அந்த இடத்துக்கு அபூர்வாவை சமீரின் தந்தை கொண்டு போய் சேர்ப்பார். அங்கே போனதும் அவள் உடம்பில் நான் இன்செர்ட் செய்யவிருக்கும் மைக்ரோசிப் மூலமா ஐ வில் ஹேக் தேயர் சிஸ்டம். அதை செய்ய நானும் அருகில் இருந்தாகணும்.. அதுனால அபூர்வாவை கிட்நேப் செய்யும் வேலையை நானே செய்கிறேன். என்கிட்டே இருக்க ட்ராக்கர் மூலமா அபூர்வா போகும் இடம் எல்லாம் தெளிவா தெரிஞ்சுக்கலாம். அண்ட் அவர் ஆர்மி வில் பி இன் பொசிஷன். ஒன்ஸ் ஐ ஹேக் தெயர் சிஸ்டம் உங்களுக்கும் அதை டிரான்ஸ்பர் செய்திடுவேன். தென் வி கேன் அட்டாக். ஒரு வேளை அப்படி எதுவும் தீவிரவாத அக்டிவிடீஸ் இல்லைனாலும் அபூர்வாவை கண்டுபிடிக்க ஸ்பெஷல் ஆபரேஷன் அப்படின்னு  நாம ஜஸ்டிபை செய்திடலாம்”

சித்தார்த் சொல்லவும் யேசுதாஸ் கோபம் கொண்டு மறுத்ததன் காரணம் இதில் அபூர்வாவை பணயம் வைக்க வேண்டாம் என்று தான். ஒரு வேளை நண்பர் உயிருடன் வந்து கேட்டால் என்ன பதில் சொல்லுவார். அதனாலேயே சித்தார்த்திடம் அவனுக்கு அபூர்வாவை இன்வால்வ் செய்ய ரைட்ஸ் எதுவும் இல்லை என்று சொன்னார்.

சித்தார்த் என்றுமே அபூர்வாவை தன்னிடம் இருந்து பிரித்துப் பார்த்ததில்லை. அவள் விஷயத்தில் அவன் எடுக்கும் முடிவுகளுக்கு யாரிடமும் (விஜயகுமார் ரத்னாவதியிடமும் கூட) அனுமதி கேட்டதில்லை. இன்று யேசுதாஸ் இவ்வாறு கேட்கவும் செய்வதறியாது திகைத்தான். எந்த உரிமையில் அவளுக்குத் தெரியாமலே இப்படி ஒரு திட்டத்தில் அவளை ஈடுபடுத்தலாம் என்று அவர் கேட்டது முற்றிலும் சரியே.

சித்தார்த் மனதில் உதித்த தீர்வு அப்போது ஒன்றே ஒன்று தான். ஆனால் அபூர்வாவின் மனநிலை பற்றி தெரிந்தவன் அவளிடம் எப்படி கேட்பது என்னவென்று சொல்வது என்று  செய்வதறியாது சோர்ந்திருந்த போது அபூர்வா பளிச் என்று அவன் மனதைப் படித்துவிட்டாள்.

“ஐ கேன் சென்ஸ் சம்திங் இஸ் வெரி இம்பார்டன்ட் அண்ட் அர்ஜென்ட் ஆல்சோ. வி நீட் எ நேம் பார் அவர் பான்ட்... ம்ம்” என்று யோசித்தவள் “மேரேஜ் பண்ணிக்கலாம் சித்து. கோர்ட் மேரேஜ் உடனே பண்ணலாம் தானே. வில் தட் டூ...என்ன சொல்ற”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.