(Reading time: 54 - 107 minutes)

விஜயகுமாரிடம் அனைத்தையும் சொல்லி முடித்ததும் சித்தார்த்தை எண்ணி பெருமை கொண்டார்.

“உண்மையில் இந்த திட்டத்திற்கு அபூர்வாவை அனுப்பு என்று நானே சொல்லிருப்பேன் தாஸ்”

“எனக்குத் தெரியும் விஜய்”

“சர். அங்கிள் சொன்னார். உண்மையில் மிக பயங்கரமான தீவிரவாத அமைப்பு தான் இல்லையா” சித்தார்த் பிரதமரிடம் கூறவும்

“ஆமாம். நீ சரியான சமயத்தில் ஹேக் செய்து அவங்க சிஸ்டம் க்ரேஷ் செய்துட்ட. அதே சமயம் நானும் மற்ற நாடுகளுக்கு தொடர்பு கொண்டு இது குறித்து இன்பார்மேஷன் குடுத்தேன். அண்ட் அவங்க அந்த நகரங்களில் இருந்து அந்த நியுக்ளியர் பாம்ஸ் கிளியர் செய்துட்டாங்க. அந்தந்த இடங்களில் படர்ந்திருந்த இந்த தீவிரவாத அமைப்பினரையும் கைது செய்தாச்சு. லாஸ்ட் இன்பார்மேஷன் இப்போ தான் வந்தது. ஆபீஷியல் நியுஸ் இன்னும் சில நிமிடங்களில் வெளியிடப்படும்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

“சர் நான் சொன்னது” சித்தார்த் மெல்ல தயக்கத்துடன் கேட்கவும்

“அப் கோர்ஸ் திஸ் இஸ் பியூர்லி விஜயகுமார்ஸ் மாஸ்டர் ப்ளான். ரைட்” சிரித்தவர் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு விஜயகுமார் குணமானதும் குடும்பத்துடன் தேநீர் விருந்துக்கு தனது இல்லம் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றதும் சித்தார்த் விஜயகுமார் அருகில் வந்து அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“சித்து, எனக்கு அபியை பார்க்கும் வரையிலுமே பதட்டமா இருந்தது. நான் அனுப்பின தகவல் உனக்கு வந்து சேர்ந்ததான்னு”

விஜயகுமார்க்கு அவரின் தகவல்கள் எவ்வாறு அவனுக்கு வந்து சேர்ந்தது என்று விவரித்தான் சித்தார்த். மேலும் அத்தனை ஆண்டுகள் குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளையும் கூறினான்.

“மாமா சிஸ்டம் நான் கிராஷ் செய்யல. அது கிராஷ் ஆனது பார்த்து நானே அதிர்ச்சி ஆகிட்டேன். அதை செய்தது நீங்க...உங்க மூலமா அபி”

அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் பார்த்தார் விஜயகுமார்.

“மாமா அபி அந்த மரவீட்டிற்குள் வந்ததுமே அவங்க எல்லோரும் டைவர்ட் ஆகி ஸ்க்ரீன் விட்டு விலகி வந்த நேரத்துல நான் அவங்க சிஸ்டம் ஹேக் செய்துட்டேன். செய்து முடிச்சு நான் வீடு நோக்கி வந்துட்டு இருந்த போது தான் நீங்க அங்க வந்திருந்தீங்க. அபிக்கு மயக்கம் தெளிஞ்சிருக்கணும். அபி உங்களை பார்த்த சில செகண்ட்ஸ்ல சிஸ்டம் மொத்தமும் கிராஷ் ஆகிருச்சு. அதைப் பார்த்து நான் ஓடி வந்தேன்”

“எனக்கு இன்னும் புரியல சித்து”

“எனக்கும் அப்போ ஒன்னும் புரியல மாமா.. அப்புறம் நான் யோசிச்சு பார்த்து இந்த முடிவுக்கு வந்தேன். நான் அந்த சிப் பொருத்தியிருந்தது அபியோட நெற்றிப் பொட்டில். உங்களை பார்த்ததும் அவளுக்குள் ஒரு  பாசிடிவ் எனெர்ஜி எக்ஸ்ப்லோஷன் மாதிரி நடந்திருக்கணும். இன்னும் சைன்டிபிக் ப்ரூப் இல்லைனாலும் பினியல் கிளான்ட் தான் நெற்றிக்கண், ஆழ்மனதின் வாசல்ன்னு நம்ம புராணங்களில் இருக்கே. அந்த பாசிடிவ் வேவ்ஸ் இந்த சிப் வழியா கான்சன்ட்ரேட் ஆகியிருக்கு. மாமா அந்த இடத்தை தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்த ரீசன் அதன் மேக்னெடிக் பீல்ட் தன்மையால் தான். அதைப் பயன்படுத்தி தான் அவங்க சிஸ்டம் பூராவும் செயல்பட்டிருக்கு. அபி ஆழ்மனசில் கான்சன்ட்ரேட் ஆன இந்த பவர் பூமியின் மேக்னடிக் பீல்ட் கூட ரிபல் ஆகியிருக்கணும். அதுனால டிஸ்டர்பன்ஸ் கிரியேட் ஆகி ஷார்ட் சர்கியுட் மாதிரி ஆகிருச்சு. மொத்த சிஸ்டமும் கிராஷ் ஆகிருச்சு”

சித்தார்த் சொல்ல சொல்ல விஜயகுமார் இப்போது பிரமித்து போனார்.

மனிதன் தான் எத்தனை ஷக்தி வாய்ந்தவன். அதை சரியான முறையில் பயன்படுத்துபவன் கடவுள் ஆகிறான். தீய வழியில் போகிறவன் அசுரன் ஆகிறான். 

நாள் 3 ; நேரம் 18 :00 (GMT+ 5.30 )  இந்திரா காந்தி இன்டர் நேஷனல் ஏர்போர்ட் டர்மினல் 1D

“அபி என்னடா அவசரமா எங்களை எல்லாம் வர சொல்லி போன் வந்தது” ரத்னாவதி சற்று பதட்டமாக கேட்க சுசீலாவும் அதையே எதிரொலித்தார்.

விமான நிலையத்தில் சுசீலா கிருஷ்ணமூர்த்தி ரத்னாவதி நிலா ஆகியோரை அழைத்துச் செல்ல வந்திருந்த அபூர்வாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட குடும்பத்தினரை இன்னும் பத்து நிமிடங்கள் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியாமல் விழித்தாள் அபூர்வா.

“எதுவா இருந்தாலும் சித்து கிட்ட கேட்டுக்கோங்க. ப்ளீஸ். இன்னும் டென் மினிட்ஸ் தானே” அவள் கெஞ்சவும் அமைதியாகினர்.

“உனக்கு ஏதாச்சும் பாராட்டு விழாவா அக்கா. அதான் சர்ப்ரைசா” நிலா விடமால் கேட்டுக் கொண்டே வரவும் டேக்சி அந்த ஆர்மி ஹாஸ்பிடல் உள்ளே நுழைய ரத்னாவதி மனம் படபடவென துடித்தது.

“அபி” என்றவர் அவளது கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள அந்தக் கரம் சில்லிட்டு இருந்ததை உணர்ந்தாள் அபூர்வா.

அதற்குள்ளேயே வெளியில் வந்த சித்தார்த் கண்ணாலேயே சைகை காட்ட அபூர்வா அன்னையையும் நிலாவையும்  மட்டும் அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல சித்தார்த் தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு அங்கிருந்த கான்டீன் சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.