(Reading time: 54 - 107 minutes)

ன்னிக்கு ஜெனீவா போற முதல் நாளும் அப்படி தான் கூப்பிட்ட. அப்புறம் இன்னொரு டைம். இன்னிக்கும்...என்ன அது ஒழுங்கா சொல்லு”

“சரி இங்க வா” கட்டில் அருகே வருமாறு அவளை அழைத்தான்.

“வந்துட்டேன். சொல்லு”

அதன் தலைமாட்டில் உள்ள பலகையில் அவளது கரம் பதிக்க சொன்னான். அவன் கரம் பதிக்கவும் அது ஒரு செயற்கை மீன் தொட்டி போலானது. 26 தங்க மீன்கள் இங்கும் அங்குமாக நீந்திக் கொண்டிருந்தன.

“நல்லா உற்றுப் பார். என்ன தெரியுது”

“நம்பர்ஸ்”

“16 , 15 , 15 , 18 , 9 உன் விரலால் அழுத்து”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூஜா பாண்டியனின் "நானும் அங்கே உன்னோடு" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவள் அவ்வாறு அழுத்தவும்  ஒரு பெரிய சுறா மீன்  வாயைப் பிளந்து கொண்டு அந்த ஸ்க்ரீனில் தோன்றியது.

“இப்போ படுத்துக்கோ” என்றவன் அவள் கட்டை விரல் கொண்டு சுறாவின் பல்லில் பதித்தான்.

சுறா அபூர்வாவை விழுங்கி விட்டது.

சிறிது நேரத்தில் அவனும் அந்த பாதாள பைரவி அறைக்கு வந்து சேர்ந்தான்.

“அல்மோஸ்ட் எட்டு மாசமா வெயிட் பண்ணிருக்கேன் இதை உனக்கு காட்ட”

“ம்ப்ப்ச்... சித்து இது நல்லா தான் இருக்கு. ஆனா நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல”

“நீயே கண்டுபிடி”

“என்ன எனக்கு தெரில. நீயே சொல்லு”

“மக்கு. சரியான மக்கு”

“ஆமா மக்கு தான்... உனக்கு சலங்கை மூலமா டாடி அனுப்பின தகவலை தெரிவிச்சு அந்த தீவிரவாதிகளோட சிஸ்டம் எல்லாம் கிராஷ் பண்ண நான் மக்கு தான்”

“அதெல்லாம் என்னமோ நீயே மூளையை கசக்கி பிழிஞ்சு செய்த மாதிரி பில்ட் அப் குடுக்குற.. அதெல்லாம் என் பூ... யோட ஆழ்மனசு செய்துச்சு”

“ஹே திரும்பவும் அப்படி கூப்பிடுற....சொல்லு சித்து. அட்லீஸ்ட் க்ளூ குடு”

நீ அழுத்தின அந்த நம்பர்ஸ் சொல்லு”

““16 , 15 , 15 , 18 , 9”

“யோசி..அது தான் க்ளூ”

சிறிது நேரம் கண்மூடி யோசித்தாள்.

“P O O R I”

“யெஸ் மை பூ...ரி” அவள் முகத்தை கையில் ஏந்தியவன், “பூரி என்றால் முழுமை. யூ கம்ப்ளீட் மீ... அதான் எனக்கு நீ பூரி” அவள் நெற்றியில் முத்தமிட்டு மெல்ல அணைத்துக் கொண்டான்.

நிலா சந்தோஷ் திருமணம் சென்னையில் நடைபெற விஜயகுமார் நிலாவை தாரை வார்த்துக் கொடுக்கும் போது சித்தார்த்தையும் உடன் கரம் பற்றச் சொன்னதும் சித்தார்த் கண்கள் பனித்தன.

“பாட்டி உங்களை எவ்வளவு மிஸ் செய்தேன் தெரியுமா” அபூர்வா லலிதாம்பிகை கரம் பற்றி சொல்ல சித்தார்த் இன்னொரு கரம் பற்றிக் கொண்டாள்.

“அங்க கிளைமேட் சரி வரலைலடா அபிம்மா” லலிதாம்பிகையும் இருவரையும் அணைத்துக் கொண்டு இனி அடிக்கடி வந்து செல்ல வேண்டும் என்றார்.

பத்மா, ராமசந்திரன் காவ்யா கார்த்திக் அனைவரையும் நீண்ட நாட்களுக்குப் பின் அபூர்வா விஜயகுமார் இருவரும் சந்தித்ததால் அளவலாவிக் கொண்டிருந்தனர்.

பெரியவர்கள் அகன்றதும் சந்தோஷிடம் சென்ற அபூர்வா அவனின் கைகளை பற்றிக் கொண்டாள்.

“சந்தோஷ் நீ என் லைப்ல எவ்வளவு இம்பார்டன்ட் தெரியுமா. சித்துவை எனக்கு காமிச்சு குடுத்தது நீ தான். அதுனாலேயே எனக்கு உன் மேல எப்போவும் தனி பிரியம் உண்டு. இன்னிக்கு எங்க பாப்பாவ உன்கிட்ட சேர்த்துட்டோம். அவளை கண்கலங்காம பத்திரமா பார்த்துக்கோ” அபூர்வா அவ்வாறு சொல்லவும் சித்தார்த் சந்தோஷ் நிலா மூவரும் என்ன இது என்று திகைத்து கொண்டிருக்கும் போதே

“அப்படி எல்லாம் சொல்ல நான் சாதாரண அபூர்வான்னு நினைச்சியா... நான் பில்லிடா... சித்து மாதிரி அவளுக்கு ஓவர் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சன்னு வைன்னு உன்ன பிராண்டிருவேன். அவ சேட்டை செய்தா ஒழுங்கா என்கிட்டே ரிபோர்ட் செய்யணும். பயந்துட்டு அடி வாங்கிகிட்டு இருக்காத” என மிரட்டவும்

“மாப்ள  உன்ன இப்படி பில்லி ஓவரா டேமேஜ் பண்ணிட்டாளே” சித்தார்த் கேலி செய்தான்.

“நீ வேற சித்...அபி மொதல்ல சொன்னதை கேட்டதும் நான் பயந்தே போயிட்டேன். இப்போ தான் நிம்மதியா இருக்கு. தாங்க்ஸ் அபி. இஷாவும் சித்தும் ஒரு கூட்டணி. நான் மட்டும் சோலோவா இருந்தேன். நீ இருக்கும் போது நோ வோரிஸ்” சந்தோஷ் சொல்லவும் நிலா அவர்கள் முன்னிலையிலே அழுத்தமாக கிள்ளி வைத்தாள்.

“ஐயோ அபி காப்பாத்து” சந்தோஷ் அலற சித்தார்த் குலுங்கி குலுங்கி சிரித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.