(Reading time: 54 - 107 minutes)

நாட்டு மக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன”

“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் கருவில் உதிக்கையிலே. அந்தக் குழந்தை நல்லவராகவே வாழ்நாள் முழுவதும் இருக்கச் செய்வது பெற்றோர் கையிலே தான் உள்ளது. ஓர் தலைமுறையில் இந்த மாற்றம் உதித்தால் போதும். வரும்காலம் பிரகாசமாக நல்ல சமுதாயமாக திகழும். கலியுகத்தையும் சத்யயுகமாக பொற்காலமாக மாற்ற நம்மால் இயலும். நல்லவற்றை சிந்தியுங்கள். நல்ல செயல்கள் புரியுங்கள். நன்மையே நடக்கும்”

“உங்கள் மகள் டாக்டர் அபூர்வா அணுக்கதிர்கள் எதிர்ப்பு சக்தியை மனித உடலில் புகுத்தும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு அதை செயல் படுத்தும் முயற்சி மேற்கொண்டுள்ளார். அவரைப் பற்றி ஓரிரு வார்த்தைகள்”

“விஜயகுமார் என்ற என் அடையாளத்தை விட டாக்டர் அபூர்வாவின் தந்தை விஜயகுமார் என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். என் மகளுக்காக நான் எப்போதும் பாடும் பாடலை இப்போது பாட அனுமதி வேண்டுகிறேன்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சக்ர வியூகம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ஒரு தெய்வம் தந்த பூவே!

என் மகளும் ஆன தாயே!!

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!

வானம் முடியுமிடம் நீதானே!

காற்றைப் போல நீ வந்தாயே!

சுவாசமாக நீ நின்றாயே!

“மார்பில் ஊறும் உயிரே!!!”

பின்னுரை

மழை!!!

“வாவ்"

"அத்தை  இங்க பாருங்களேன், மழை பெய்யுது" ஜன்னலை நோக்கி  குதூகலமாக ஓடிச் சென்றாள் அபூர்வா.

ஜனவரி மாத இறுதியில் பனி பெய்யாமல் மழை பெய்யவும் அபூர்வா குதூகலம் ஆனாள். தைப்பூச விழாவினை ஒட்டி தில்லி தமிழ் சங்கத்தில் அபூர்வாவின் நாட்டியம் நடைபெற இருந்தது.

“அபி வாம்மா லேட் ஆகுது” அந்தப் பச்சை நிற நாட்டிய உடையில் ஜொலித்தாள் அபூர்வா.

“அத்தை மாலையை காணோம்” அபூர்வா மாலையைக் காணமல் தேட

“வீட்லேயே வச்சுட்டு வந்து இங்க தேடினா எப்படி கிடைக்கும்..என்னைய வேலை வாங்கவே வேணும்னே செய்றா மா ” கையில் மாலையுடன் வந்தான் சித்தார்த்.

“அப்பா, அத்தை மாமா எல்லோரும் வந்துட்டாங்க. நீங்க போய் மாமாவை அனுப்புங்க மா. ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆகப் போகுது” அன்னையிடம் சொன்னவன் அவர் சென்றதும் அபூர்வாவின் அருகில் வந்தான்.

“குடு மாலையை” அவனிடம் இருந்து அவள் பிடுங்க முயற்சிக்க அவள் கழுத்தில் அவனே அணிவித்தான்.

கண்ணாடி முன் திரும்பிக் கொண்டு அழகு பார்த்தவளை “பில்லி...வான் கோழி...” என கேலி செய்ய அவனை நன்றாக மொத்தினாள்.

ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆகப் போகுது. அங்கே விஜயகுமார் வர அவரது கைகளில் சலங்கையை கொடுத்தான் சித்தார்த்.

“மாமா நீங்க என்கிட்டே குடுத்த பொறுப்பை நான் தவறாம நிறைவேற்றிட்டேன்”

“வாழ்நாள் முழுமைக்கும் இனி உன் பொறுப்பு சித்து” அவனது கைகளிலேயே சலங்கையை கொடுத்தவர் அவன் மகளின் கால்களில் சலங்கையை அணிவித்ததும் இருவரையும் அணைத்துக் கொண்டு “ஆல் தி பெஸ்ட் பூக்குட்டி” என்று சொல்லி விட்டு சென்றதும் சித்தார்த் “ஆல் தி பெஸ்ட் பூ...” என்று சொல்லி விஜயகுமாரைப் பின் தொடர்ந்தான்.

“ஐ கெப்ட் மை ப்ராமிஸ்” தன்னருகில் அமர்ந்து மகளின் நடனத்தை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்த விஜயகுமாரையும் மேடையில் ஆனந்தமாய் ஆடிக் கொண்டிருந்த அபூர்வாவையும் மாறி மாறிப் பார்த்தவன் மனதில் சொல்லிக் கொண்டான்.

டான்ஸ் முடிந்ததும் நாட்டிய உடையில் வந்தவள் “சித்து வீட்டுக்கு போகலாம்” எனவும்

“இரு பில்லி. குட்டி பசங்க டான்ஸ் பார்த்துட்டு போகலாம்” என சீண்டினான்.

வீடு வந்து சேர்ந்ததும் சித்தார்த்தை அபூர்வா அவர்கள் அறைக்கு இழுத்துச் செல்ல “பில்லி பால்கோவா கீழ  இருக்கு..மாமா ஏற்கனவே வாங்கி வச்சுட்டார்...எங்க இழுத்துட்டு போற என்னைய” என்றான்.

“ஒழுங்கு மரியாதையா வா என்னோட”

அவர்கள் அறையை அடைந்ததும் இடுப்பில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு அவனைப் பார்த்து முறைத்தாள்.

“சந்திரமுகி பேய்” அவன் பயந்த மாதிரி நடிக்க

“நீ இப்போ என்னன்னு சொல்லலைனா நிஜமா அந்த ரூபம் தான் எடுப்பேன்”

“என்ன பில்லி சொல்லணும்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.