(Reading time: 54 - 107 minutes)

தாங்க்ஸ் சந்தோஷ்” சித்தார்த் சொல்லவும் எழுந்து நின்று இடுப்பில் கைகளை வைத்தபடி “வாட்...தாங்கஸா இவனுக்கா எதுக்கு” என்று அபூர்வா கேட்க சித்தார்த் அடக்கமாட்டாமல் சிரித்தான்.

“பில்லி தேகோ பில்லி” என்று சந்தோஷைப் பார்த்து கண்ணடித்தபடியே அவன் சொல்ல அபூர்வா உடன் சிரித்துக் கொண்டே அவனை நன்றாக மொத்தினாள்.

மேடையில் மைக் பிடித்துக் கொண்டு நீரஜ் அனைவரையும் பாட அழைக்க பெரியவர்கள் சிறியவர்கள் என பலர் மேடை ஏறினர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“சித் சித்...வி வான்ட் சித் டு சிங்” என சித்தார்த் பான்ஸ் ஆரவாரம் செய்ய மேடை ஏறி மைக் பிடித்தவன் விஜயகுமாரை மேடைக்கு வருமாறு அழைத்தான்.

“எனக்கு நிறைய விதத்தில் மாமா இன்ச்பிரேஷன். ஆனா எல்லாத்தையும் விட முக்கியமானது அவரைப்  போலவே என் மகளுக்கு ஒரு நல்ல தந்தையாக நான் இருக்கணும் என்பது தான்” என்றவன் இன்னொரு மைக்கை அவரிடம் கொடுத்தான்.

“பார் தி காட்டஸ் ஏஞ்சல் இன் போத் ஆப் அவர் லைப்ஸ்” சித்தார்த் கரோகி தவழ விட விஜயகுமார் அவனை திரும்பிப் பார்த்து நிறைவாக புன்னகைத்தார். தனது பூக்குட்டிக்காக விஜயகுமாரும் தன் பூரிக்காக சித்தார்த்தும் பாடத்  தொடங்கினர்.

அனைவரும் மகிழ்ச்சியாக ரசிக்க நிலா சந்தோஷின் அணைப்பில் பாடலில் மெய் மறந்திருந்தாள்.

ரத்னாவதியும் சுசீலாவும் அபூர்வாவின் இருபுறம் அமர்ந்து அவளை அணைத்தபடியே  மனநிறைவாய் மேடையில் பாடிக் கொண்டிருந்த இருவரையும் கண்டு ரசித்தனர்.

ஒரு தெய்வம் தந்த பூவே!

ஒரு தெய்வம் தந்த பூவே!

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!

வானம் முடியுமிடம் நீதானே!

காற்றைப் போல நீ வந்தாயே!

சுவாசமாக நீ நின்றாயே!

விஜயகுமாரும் சித்தார்த்தும் இறுதி வரிக்கு முன் பாடுவதை சற்றே நிறுத்த அந்த அரங்கம் முழுவதும் வியாபித்த நிசப்தத்தை அபூர்வாவின் ஜல் ஜல் என்ற கொலுசின் ஒலி நிறைத்தது.

தங்களை நோக்கி  ஓடி வந்தவளை விஜயகுமாரும் சித்தார்த்தும் ஒரு சேர அணைத்துக் கொண்டு ஆத்மார்த்தமாய் பாடலை பூரணம் செய்தனர்.

“மார்பில் ஊறும் உயிரே!!!

 It would be the best birthday gift I can  give to my daddy today.

இது ஓர் கற்பனைக் கதை என்ற போதும் எனக்கும் என் தந்தைக்கும் இடையிலான ஆழமான பிணைப்பு, அதன் ஆணிவேராய் என் அன்னையின் பலம், விழுதாய் என் சகோதரியின் துணை  இவையே இக்கதையின் நாடித்துடிப்பு.

Nothing is perfect in this world….But one can always learn to see, appreciate and cherish the brighter and beautiful side of life.

எனது இந்தக் கோட்பாடு தான் கதையின் கதாபாத்திரங்களில் பிரதிபலிக்கின்றது.

உருவம் மறைந்தாலும் உணர்வில் கலந்திருக்கும் பந்தமும் எனது சிந்தையில் வியாபித்து இருக்கும் எண்ணமும் காலத்திற்கும் அழியாமல் எழுத்தின் வடிவத்தில் உயிர்த்திருக்கும்.

இதை சாத்தியமாக்கிய சில்சிக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.

கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து ரசித்து கருத்துப்பதிவு செய்து எனக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்த சில்சி தோழமைகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. லைக்ஸ் ஹார்ட்ஸ் வாவ்ஸ் கொடுத்த நட்புக்கள், சைலன்ட் ரீடர்ஸ் அனைவருக்கும் நன்றி.

என் சுயத்தின் நிழலான, என் அகத்தின் வண்ணங்களான புவி, கீர்த்து, மலர், மீனு, ப்ரீ, சுஜி.... மற்றும் என் மகிழ்ச்சியின் ஊற்றான ஆரு சாரு.... நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

தொடர்கதையா நானா கபி நஹி என்று சொன்ன கடைந்தெடுத்த சோம்பேறி ஒரு அத்தியாயம் கூட ஆப்சன்ட் ஆகாமல் முழுக்கதையை எழுதி முடித்திருப்பது ஓர் அருமையான டீச்சரின் வழிகாட்டுதலால் தான். ஓர் ஏணியாக என்னை உயர்த்தி விட்டு அதில் பெருமகிழ்ச்சி கொள்ளும் என் ஆத்மார்த்தமான தோழி வத்சுவிற்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்.

ஒரு பாசிடிவ் சொல்லே மிகுந்த பலத்தைக் கொடுக்கும் எனும் போது பாசிடிவ் மழையையே பொழிந்து எனக்கு பெரும் ஷக்தி கொடுத்த நண்பன் ஷக்திக்கு என் நன்றிகள்.

To have an intellectual friend is a bliss… Thanks to my genius friend Ranesh for all those beyond the galaxies conversations.

எழுதினால் இவரைப் போல எழுத வேண்டும் என்று என்னை பிரமிக்க வைத்த, எனது மானசீக குருக்களாக  நான் ஏற்றுக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் Ayn Rand மேம் மற்றும் சுஜாதா சார்க்கு எனது பணிவான வணக்கங்கள். அவர்களின் எழுத்துச் சாகரத்தில் ஓர் சிறு துளியாகவேணும் எனது இக்கதை இருக்குமானால் அதுவே எனக்கு பெரும் நிறைவு.

மீண்டும் மற்றொரு கதையில் சந்திப்போம்... நன்றி!!! நன்றி!!! நன்றி!!! }

Episode # 15

{kunena_discuss:1080}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.