(Reading time: 54 - 107 minutes)

வரது பெரும் முயற்சியால் தான் இது சாத்தியமானது. அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது நலமாக உள்ளார்.

நமது பாதுகாப்பு ஆலோசகரிடம் தற்போது பேசினோம். காப்டன் விஜயகுமார் விரைவில் நலமடைய வாழ்த்து கூறி மீண்டும் ஏழு மணி செய்திகளில் சந்திக்கலாம். நன்றி வணக்கம்.

ண்ணா. இத்தனை வருடங்கள் நினைவே இல்லாம இருந்தீங்களா...எப்படி கிராஷ்ல இருந்து தப்பினீங்க” மருத்துவமனையின் அந்த டீலக்ஸ் அறையில் சுசீலா விஜயகுமாரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

விஜயகுமாருக்கு மருத்துவமனையில் ப்ரேத்யேக சலுகை அளிக்கப் பட்டிருந்தது. மேலும் அபூர்வா தானே கவனித்துக் கொள்வதாக கூறவும் குடும்பத்தினர் பேச தனிமை கிடைத்தது.

“விமானம் கிராஷ் ஆகப் போகுதுன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு. என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு நான் கிராஷ் ஆகும் சமயம் கீழே குதிச்சிட்டேன். விழுந்த வேகத்தில் மண்டையில் அடி பட்டிருக்கணும். அங்கிருந்து உருண்டு ஒரு குகை மாதிரி ஓர் இடத்தில விழுந்தேன். எத்தனை நாள் எப்படின்னு சரியா நினைவு இல்ல. காதும் கேக்கல வாய் பேசவும் முடியல. அப்பப்போ காதில் சலங்கை மணி சத்தம் மட்டும் ஒலிச்சிட்டே இருப்பது போல இருக்கும். அங்கேயே காடுகளில் சுற்றித் திரிந்திருக்கேன். நடுவில் தென்பட்ட கிராமங்களில் உணவு உடைன்னு ஏதோ கிடைக்க பிழைச்சிருக்கேன். அப்போ தான் ஒரு நாள் நதியோரமா நடந்து வந்த போது நம்ம சித்து போலவே ஒரு குட்டிப் பையன் நதியில அடிச்சிட்டு போற மாதிரி இருக்கவும் குதிச்சு அந்த பையனை காப்பாத்தினேன். அவன் தான் சமீர். அருமையான பையன். என் மேல ரொம்ப பாசமா இருந்தான்” என்று மேற்கொண்டு அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

இதைக் கேட்ட அனைவர் விழிகளும் குளமாகவே நிலா சத்தமாகவே அழுதாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

“அழக்கூடாது பாப்பா. அக்கா மாதிரி தைரியமா இருக்கணும்” விஜயகுமார் மகளை சமாதானப் படுத்திக் கொண்டிருந்த வேளை நிலாவின் மொபைல் அடிக்க உடனேயே “பேசிட்டு வரேன் டாடி” என்று அறையை விட்டு வெளியில் சென்றாள்.

“உங்க எல்லோர்கிட்டேயும் முக்கியமான ஒரு விஷயம் நாங்க ரெண்டு பேரும் சொல்லணும். நிலா வெளிலே போயிருக்கும் போதே சொல்லிடறோம்” சித்தார்த்தைப் பார்த்து கண்காட்டியபடியே அபூர்வா சொல்லவும் விஜயகுமார் புரிந்து கொண்டு லேசாக நகைத்தார்.

ரத்னாவதியும் புன்னகை புரிய சுசீலா கிருஷ்ணமூர்த்தி இருவரும் சிரிப்பை அடக்கிய படியே என்ன என்று கேட்டனர்.

“நான் தான் சித்து கிட்ட சொன்னேன். முக்கியமா தேவை பட்டது. அதனால கோர்ட் மேரேஜ் செய்துகிட்டோம் ஜெனீவா போன நாளுக்கு முந்தின நாள்” அபூர்வா சொல்லவும்

“என்னது எங்க கிட்ட சொல்லாம நீங்களே எப்படி முடிவு செய்யலாம்” சுசீலா கோபமாய் சொல்வது போல ஆரம்பித்து முடியாமல் சிரிக்கவும்

“சுசிம்மா நீ டான்சர்ன்னு சொல்லிக்காத. உன்னை விட நானே நல்லா அபிநயம் செய்தேன்” விஜயகுமார் தங்கையின் காலை வாரினார்.

சித்தார்த் அபூர்வா தோள் மீது கை போட்டு “பில்லி பில்லி....மங்கல்யான் மார்ஸ்க்கு போய் பல மாசம் ஆச்சு. லேட்டஸ்ட்டா ஏதாச்சும் சொல்லு” என்றான்.

அவன் கேலியை கண்டுகொண்டவள் “எப்போ தெரியும் எல்லோருக்கும்” என ஆச்சரியமாய் கேட்டாள்.

“சித்து அன்னிக்கே போன் பண்ணி ஒரு முக்கியமான விஷயம் உங்க மூணு பேரோட பர்மிஷன் வேணும். ஆனா என்ன ஏதுன்னு ரெண்டு மூணு நாள் கழிச்சு தான் சொல்வேன். நானும் அபியும் சம்பந்தப்பட்டது அப்படின்னு  சொன்னான். மத்தபடி இப்போ டாடி சொல்லி தான் எனக்கு முழுசா தெரியும்” ரத்னாவதி சித்தார்த்தை பெருமிதமாக பார்த்தப்படி சொன்னார்.

“ஆமா இப்போ சித்து கான்டீன்ல வச்சு சொல்லித் தான் இது தான் விஷயம்ன்னு தெரியும்” கிருஷ்ணமூர்த்தி கூற இருவர் பெற்றோர் மீது அபூர்வா கொண்டிருந்த பாசமும் மதிப்பும் பன்மடங்காக பெருகியது.

அந்த ஹாஸ்பிடல் அறையிலேயே அபூர்வா கரம் பற்றி விஜயகுமார் சித்தார்த் கைகளில் வைத்து தாரை வார்த்துக் கொடுக்க அபூர்வா சித்தார்த் பெற்றோர் ஆசியைப் பெற்றனர்.

று மாதங்களுக்குப் பிறகு – இந்திய குடியரசு தின விழா

நாட்டின் அமைதி கால உயரிய விருதான ‘அசோக் சக்ரா’ விருது ஏர் வைஸ் மார்ஷல் ஆர். விஜயகுமார்க்கு வழங்கப் படுகிறது.

அறிவிப்பாளர் சுருக்கமாக அவரது சாதனைகளை கூறவும் முழு விமானப் படை ராணுவ உடையில் கம்பீரமாக நடந்து சல்யுட் செய்து ஜனாதிபதியிடம் இருந்து விருதினை பெற்றுக் கொண்டார்.

விஐபி பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தனர்.

“அடுத்த மாதம் ஓய்வு பெற போகிறீர்கள். இந்த விருது உங்கள் வாழ்நாள் சாதனை என்று கூறலாமா” அவரை நேர்காணல் செய்து கொண்டிருந்தனர் மீடியாக்கள்.

“என் மகள்கள் அபூர்வா, இஷாந்தினிக்கு நல்ல தந்தையாகவும் மருமகன் சித்தார்த்துக்கு நல்ல மாமாவாகவும் இருந்தது, இருப்பது தான் எனது லைப் டைம் அசீவ்மன்ட். என் காலம் பிறகும் என் சந்ததிகள் நல்லதொரு தலைமுறையை உருவாக்கி வழி நடத்திச் செல்வர் என்ற நம்பிக்கையே எனது வாழ்நாள் சாதனை”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.