(Reading time: 54 - 107 minutes)

நாள் 3 ; நேரம் 13 :00 (GMT+ 5.30 )  ஆர் அண்ட் ஆர் ஆர்மி ஹாஸ்பிடல் புது தில்லி.

“டாக்டர் அபூர்வா ஐ ஆம் சாரி டு சே திஸ்” ஆர்மி மருத்துவமனையின் தலைமை எலும்பு முறிவு மருத்துவர் அபூர்வா, சித்தார்த், யேசுதாஸ் மூவர் முன்னிலையில் வருத்தம் தெரிவித்தார்.

அவர் சொன்னதை மிகத் தைரியமாக எதிர்கொண்டாள் அபூர்வா. எக்ஸ்ரே பார்த்ததுமே அவளுக்குப் புரிந்து போனது. இருப்பினும் அவள் ரிசர்ச் பிரிவில் இருந்ததால் இப்போதைய நவீன மருத்துவ முன்னேற்றங்கள் இத்துறையில் எந்த அளவு உள்ளது என்று அறியாமல் இருந்தாள்.

“கோ அஹெட் டாக்டர். ஐ வில் டாக் டு மை டாட்”

அவள் நேராக தந்தை அனுமதிக்கப்பட்ட அறைக்கு சென்றாள்.

“வி ஹாவ் டு சாக்ரிபைஸ் ஹிஸ் லெக்” என்று அந்த மருத்துவர் கூறியதைக் கேட்டதும்  சித்தார்த் யேசுதாஸ் இருவருமே அதிர்ந்து போயினர்.

“வேறு வழி இல்லையா டாக்டர்” யேசுதாஸ் பதறினார்.

“இல்ல. ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டு அது இன்பக்ட் ஆகி போன் ரொம்ப டேமேஜ் ஆகிருக்கு. திஸ் ஸ் தி ஒன்லி ஆப்ஷன்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

நாள் 3 ; நேரம் 17 :00 (GMT+ 5.30 )  ஆர் அண்ட் ஆர் ஆர்மி ஹாஸ்பிடல் புது தில்லி.

“எப்போ வராங்க சித்து எல்லோரும்” அறுவை சிகிச்சை முடிந்து தனி அறைக்கு மாற்றப்பட்ட விஜயகுமார் சித்தார்த்திடம் கேட்டார்.

“ஆறு மணிக்கு ப்ளைட் லான்ட் ஆகுது. இங்க இருந்து பக்கம் தானே டர்மினல். இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பறேன்” அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே யேசுதாஸ் அங்கே வந்து அவன்  காதில் ரகசியம் சொன்னார்.

“அபி, நீ போய் பிக் அப் செய்றியா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” சித்தார்த் அபூர்வாவிடம் கேட்டான்.

“அப்போ டாடி பக்கத்துல யார் இருப்பாங்க”

“நான் இங்க தான் இருக்கேன். வேலை இங்க தான்” மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் அவளைப் பார்க்கவும் “அப்போ சரி” என்றவள்

“ஜூஸ் வரும் டாடிக்கு குடு. ரொம்ப உக்கார வைக்காத. கம்பைன்ட் ஸ்பைனல் குடுத்திருக்குல. 45 degrees  மட்டும் பெட் ரைஸ் பண்ணு. ட்ரிப் போயிட்டு இருக்கட்டும். பெயின் இருக்காது. அப்படி இருந்தா அனஸ்தடிஸ்ட்டை கூப்பிடு. அவங்க வந்து எபிடியூரல் டோஸ் அதிகப் படுத்துவாங்க” சித்தார்த்திடம் சொல்லிக் கொண்டே போனவளை இடை மறித்தார் விஜயகுமார்.

“சித்து பார்த்துப்பான் பூக்குட்டி. நீ போயிட்டு வா”

“நான் எதுவும் சொல்லாம தான் கூட்டிட்டு வருவேன். நீங்களே என்ன சொல்லணுமோ சொல்லிக்கோங்க. எனக்குத் தெரியாது” சொன்னவள் டேக்சி ஒன்றை பிடித்து ஏர்போர்ட் விரைந்தாள்.

முன்னதாக அறுவை சிகிச்சையின் முன் விஜயகுமார் சித்தார்த் இருவரும் அபூர்வாவிடம் யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம் என்று கூறியிருந்தனர்.

“எனக்கு புரியல டாடி”

“நீ ஜெனீவா கிளம்பி நேரா தில்லி வந்துட்ட. உன்னை நான் பிக் செய்தேன். ஜெட் லேக்ல நீ தூங்கிட்ட. நானும் வீட்லே தான் இருந்தேன். யேசுதாஸ் அங்கிள் நமக்கு மார்னிங் கால் பண்ணார். நம்மையும்  அத்தை நிலா எல்லோரையும் மதியம் ஆர்மி ஹாஸ்பிடல் வர சொன்னார். நான் உடனேயே மெட்ராஸ்ல இருந்து எல்லோரையும் வர சொன்னேன். ஏன் என்னன்னு தெரில அங்கிள் உடனே வர சொன்னார்ன்னு சொன்னேன். அதான் எல்லோரும் வராங்க. நாம இங்க முன்னாடி வந்து மாமாவை பார்த்தோம். நீ சைன் பண்ண சர்ஜரிக்கு. இது தான் எல்லோர்கிட்டேயும் சொல்லணும்”

சித்தார்த் விவரமாக அவளிடம் சொல்லவும் விஜயகுமாரை அபூர்வா பார்க்க ஆமாம் என்று அவரும் ஆமோத்திதார்.

நாள் 3 ; நேரம் 17 :30 (GMT+ 5.30 )  ஆர் அண்ட் ஆர் ஆர்மி ஹாஸ்பிடல் புது தில்லி.

அபூர்வா சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் பாதுகாப்பு ஆலோசகர் கானுடன் பிரதமர் விஜயகுமாரை சந்திக்க வருகை தந்தார்.

“சர் ஐ ஆம் சோ ஹானர்ட்” விஜயகுமார் எழ முற்பட பிரதமர் அவரைப் படுத்திருக்கும் படி சைகை செய்து

“ஐ ஆம் வெரி ப்ரவுட் ஆப் யூ அண்ட் கிரேட்புல் டு யூ” விஜயகுமாரைப் பாராட்டி நன்றி தெரிவித்தார்.

“இட்ஸ் மை டியூட்டி சர்”

“ராணுவ வீரராக மட்டும் அல்லாது ஒரு தந்தையாக நீங்கள் என் மதிப்பில் உயர்ந்து இருக்கீங்க. சித்தாரத் சொல்லும் போது எனக்கு நம்பவும் முடியல. நம்பாமலும் இருக்க முடியல. நீங்க உங்க டாட்டர் மூலமா தொடர்பு கொண்ட விதம் சம்திங் அமேசிங்”

“எவ்வளவு தூரம் இது சாத்தியமாகும் என்று எனக்கும் தெரியாமல் தான் இருந்தது. ஐ ஆம் சோ ஹாப்பி தட் இட் வோர்க்ட் அண்ட் தாங்க்ஸ் சோ மச் சர், தி ஹோல் பிளானிங் அண்ட் ஆபரேஷன் எக்சிகியுஷன் வாஸ் அமேசிங்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.