(Reading time: 54 - 107 minutes)

தற்குள் நடந்தவற்றை சமீரின் தந்தை மனைவியிடம் கூறவும் அவர் சினம் கொண்டு சமீரின் தந்தையை சரமாரியாக சாடிக் கொண்டிருந்தார்.

“பெஹன்ஜி” மெல்ல விஜயகுமார் அழைக்கவும் சமீரின் தாய் அவர் அருகே வந்ததும் கை கூப்பி நன்றி தெரிவித்தார் விஜயகுமார்.

சமீரின் தாய் உடனேயே சென்று பால் கறந்து விஜயகுமாருக்கு சூடாக பால் மற்றும் மற்றவருக்கு டீ போட்டுக் கொண்டு வந்து உபசரித்தார்.

மரவீட்டினில் குண்டு அடிபட்டதுமே குருதியைக் கட்டுப்படுத்த சித்தார்த்  பையில் வைத்திருந்த பர்ஸ்ட் எய்ட் கிட்டில் இருந்த பாண்டேஜால் கட்டு போட்டு விட்டிருந்தாள் அபூர்வா. மேலும் கால் அசையாதவாறு பலகைகள் வைத்தும் கட்டியிருக்கவே குருதி நின்று விட்டிருந்தது.

சமீரின் தாய் தந்த  பால் அருந்தியதும் சற்று பலம் பெற்ற விஜயகுமார் மெல்ல எழ முற்பட அபூர்வா தனது மடியில் தாங்கிக் கொண்டாள். சுருக்கமாக சமீர் குடும்பம் பற்றி அபூர்வா சித்தார்த்திடம் தெரிவித்தார் விஜயகுமார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

“டாடி சமீர் அப்பாவையும் அரஸ்ட் செய்வீங்களா” நடந்த சம்பவங்கள் வைத்து ஓரளவு யூகித்திருந்தாள் அபூர்வா.

“முறைப்படி அரஸ்ட் செய்யணும். விசாரிக்கணும். குற்றம் ப்ரூவ் ஆனா தண்டனை உண்டு”

“அவர் அரஸ்ட் ஆனா சமீர் குடும்பம் பாவம்ல. நாம அவங்கள அடாப்ட் செய்துக்கலாம் டாடி”

“கண்டிப்பா அவங்க குடும்பம் மட்டுமில்ல இந்த கிராமத்தையே நாம அடாப்ட் செய்துக்கலாம்.

இந்த சமேலி கிராமம் இன்னும் இந்தியக் கட்டுப்பாட்டில் தான் இருக்கு. ஆனால் இவங்க பனிக்காலத்தில் வசிக்க ஏற்ற மாதிரி இங்கே வசதி செய்து தந்தாகணும்” 

விடியும் முன்பே ராணுவ விமானம் வர சமீரிடம் மீண்டும் வருவதாக விடைபெற்று சமீரின் தந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பினர்.

சமீரின் தாயை அழைத்து அவர்கள் மொழியில் மகள் கூறியதை விஜயகுமார் கூறவும் அவர் நன்றி கூறினார்.

“பாய் சாப்” சமீரின் தாய் விஜயகுமாரை அழைத்து அவரது கையில் ஓர் கயிற்றைக் கட்டினார்.

“இன்னிக்கு ரக்ஷா பந்தன்ல சித்து” அபூர்வா கூறவும் சித்தார்த் ஆம் என்று தலையாட்டினான்.

இனம் மொழி மதம் கடந்து அன்பும் சகோதரத்துவமும்  உலகெங்கும் வியாபித்து இருப்பதை அன்று அனைவரும் உணர்ந்தனர்.

நாள் 3 ; நேரம் 07:00 (GMT+ 5.30 )  இந்திய எல்லைப் பகுதி முகாம்

ராணுவ முகாமில் இருந்த மருத்துவர் உடனடியாக விஜயகுமாருக்கு முதலுதவிகள் செய்தார்.

“மேஜர். குண்டு ரொம்ப ஆழமா தாக்கியிருக்கு. அது எலும்பில் ஊடுருவியிருக்கு. உடனடியாக சர்ஜரி செய்யணும். ஸ்ரீநகர் இல்லை தில்லி போகணும்” அந்த மருத்துவர் கூறவும் தில்லி வரை செல்ல உடல்நிலை ஏற்றுக் கொள்ளுமா என்று கேட்டனர் யேசுதாஸ் மற்றும் மேஜர் வாசுதேவ்.

“இப்போதைக்கு ரத்தம் கொடுத்திருக்கோம். ஹி இஸ் ஸ்டேபிள். ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. அண்ட் காப்டன்ஸ் டாட்டர் இஸ் எ டாக்டர். சோ அவங்க கூட இருப்பதால தைரியமா போகலாம்”

தகவல் பிரதமருக்குத்  தெரிவிக்கப்பட அவர் சிறப்பு ராணுவ விமானம் மூலம் தில்லி அழைத்து வர உத்தரவு பிறப்பித்தார்.

“க்ரூப் காப்டன் விஜயகுமார் சர் வி ஆர் ஆல் சோ ப்ரவுட் ஆப் யூ. சொந்த மகளையும் மருமகனையும் இப்படி ஆபத்தான ஆபரேஷன்ல பணயம் வைத்து நாட்டை மட்டுமில்ல உலகத்தையே பெரும் அழிவில் இருந்து காப்பாத்திருக்கீங்க” அந்த எல்லை பாதுக்கப்பு முகாமில் இருந்த அனைவரும் சல்யுட் வைத்து விஜயகுமாரக்கு தங்கள் வணக்கத்தை தெரிவித்தனர்.

விஜயகுமார் யேசுதாஸ்ஸைப் பார்க்க அவர் தலையசைக்க புரிந்து கொண்டு

“இது தனி ஒருவனா நான் மட்டும் செய்தது இல்ல. யேசுதாஸ் மோகன் அவங்க டீம் மற்றும் உங்க எல்லோர் சப்போர்ட் இல்லாம இது வெற்றி அடைந்திருக்காது” என்றார்.

“ஐ ஹாவ் எ ரிகுஸ்ட். என்னோட மகளும் மருமகனும் இதில் இன்வால்வ் ஆனது நமக்குள்ளேயே இருக்கட்டும். வெளியுலகிற்கு தெரிய வேண்டாம். ஐ டோன்ட் வான்ட் டு டேக் மோர் ரிச்க்ஸ்” விஜயகுமார் அந்த ராணுவ அதிகாரிகளிடம் வேண்டினார்.

“ஸ்யூர். வி வில் கீப் திஸ் டு அவர்செல்வ்ஸ்” எல்லோரும் உறுதி அளித்தனர்.

அங்கிருந்து உடனே தில்லி புறப்பட்டனர் அனைவரும்.

புறப்படும் முன் மேஜர் வாசுதேவிடம் சமீரின் தந்தையை காண்பித்து “அவர் எனக்கு பல விதங்களில் உதவி செய்தார். அவர் அங்கிருந்தால் அவர் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படுமோ என்று தான் இங்கு அழைத்து வந்தேன். வி ஷுட் ஆபார் தட் வில்லேஜ் ப்ரொடேக்ஷன்” என்று கூறவும் தான் பார்த்துக் கொள்வதாக வாசுதேவ் கூறினார்.

“நீங்கள் உண்மையில் நல்லவர் தான். என்ன வேலைக்கு துணை போகிறோம் என்று தெரியாமலே தவறான ஒன்றுக்கு துணையாக செயல்பட்டு இருந்தீர்கள். இருந்தாலும் என்னை காப்பாற்றி என் மீது பரிவு காட்டிய உங்கள் மீதும் உங்கள் குடும்பம் மீதும் ஆழமான நன்றி எனக்கு இருக்கிறது. இம்முறை நான் காப்பாற்றி விட்டேன். இனிமேல் இவ்வாறு தவறுகள் செய்யாமல் இருக்க வேண்டும்” சமீரின் தந்தையிடம் அவர்கள் மொழியில் பேசி அவரை வாசுதேவிடம் ஒப்படைத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.