(Reading time: 18 - 36 minutes)

மது உடலில் மூளைக்குத் தான் அதிக அளவில் ரா க்ளுகோஸ் தேவைபடுகிறது என்று மருத்துவம் படிக்கும் போது அறிந்து கொண்ட அபூர்வா தந்தையின் அறிவை எண்ணி வியந்தாள்.

“என் பூக்குட்டி தான் எப்போவும் பெஸ்ட்” “என் பூக்குட்டியால முடியலைனா யாராலையும் முடியாது” “அதுக்கென்ன டா ஜஸ்ட் ஒரு எக்ஸாம் தானே. அடுத்த தடவை நமக்கு சான்ஸ் கிடைக்காமலா போய்டும்” “மத்தவங்களோட உன்னை கம்பேர் செய்யாதே பூக்குட்டி. நீ சூரியன் போல. சுயமா பிரகாசிப்பவள். உனக்கு யாருமே ஈடு இணை கிடையாது” “ நாம முயற்சி மட்டும் செய்யணும் டா. அதுக்குண்டான பலன் தானே கிடைக்கும். அதை தேடி நாம ஓடத் தேவையில்ல. நமக்கு உண்டானது தானே நம்மள தேடி வரும்” தந்தையின் இந்த வார்த்தைகள் தான் மகளுக்கு சாக்லேட், க்ளுகோஸ் எல்லாம்.

சிறுவயதில் இருந்தே மனதில் இந்த வார்த்தைகள் ஆழப் பதிந்து போனதால் எந்த வித அளவுகோல்களும் ஒப்பீடல்களும் அபூர்வாவை பாதித்ததே இல்லை. ஒன்றில் இறங்கி விட்டால் பலனை எதிர்பாராமல் அதை முழு அர்ப்பணிப்போடு செய்வாள். அதனாலேயே வெற்றியும் புகழும் அவளைத் தானே தேடி வந்தன.

“தும் கைசே பட்தி ஹோ. ஹமேஷா பர்ஸ்ட் ஆதி ஹை” (எப்போதுமே பர்ஸ்ட் வரியே. எப்படி படிக்கிற) அவளிடம் அவளது வகுப்பு மாணவர்கள் கேட்பதுண்டு.

“நான் டெய்லி எல்லாம் படிக்க மாட்டேன். எக்ஸாம் முன்னாடி நானும் சித்துவும் சேர்ந்து ஒரு தரம் படிப்போம். அவ்வளவு தான்னு சொன்னா நம்பவே மாட்றாங்க சித்து. பொய் சொல்ற அப்படின்னு சொல்றாங்க”

“நானும் இதையே தான் சொன்னேன் என் க்ளாஸ்மேட்ஸ் கேக்கும் போது. அவங்களும் நம்பள. நம்பலைனா போறாங்க. விடு பில்லி” தூசு போல சித்தார்த் ஊதி விடவும் அதைப்  பற்றி சட்டை செய்வதே இல்லை அபூர்வா.

இந்த நினைவுகளை எல்லாம் அசை போட்டபடியே ஜெனீவா விமான நிலையத்தில் தரை இறங்கியவளை கிருஷ்ணமூர்த்தியின் நண்பர் ரிஷி சிங் அன்போடு வரவேற்றார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "விவேக் ஸ்ரீநிவாசன்" - இனிய தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

While a dose of 5Gy is sufficient to kill a human, Thermococcus gammatolerans can withstand doses of up to 30,000 Gy, and an instantaneous dose of up to 5,000 Gy with no loss of viability”

உலக அணுசக்தி மாநாட்டில் தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்த அபூர்வா உரையாற்றிக் கொண்டிருந்தாள்.

இந்த நுண்ணுயிரின் டி.என்.ஏ வில் இருக்கும் இந்த அறிய தன்மையை ஜெனடிக் இன்ஜினியரிங் மூலம் உற்பத்தி செய்து அதை மனித டி.என்.ஏ வில் புகுத்தும் செயல்பாடு பற்றி எளிமையாக புரியும் படி விளக்கினாள்.

இதை விலங்குகளில் டெஸ்ட் செய்து வெற்றி அடைந்ததன் புள்ளிவிவரங்களை சமர்ப்பித்தாள்.

ஒட்டுமொத்த அரங்கமுமே மிகவும் ஆர்வமாக அபூர்வாவின் பேச்சினைக் கூர்ந்து கவனித்தது. அணுசக்தி பற்றிய மாநாடு ஆகையால் அதில் விஞ்ஞானிகள் மட்டும் அல்லாது பல்வேறு நாட்டின் பாதுகாப்பு துறையில் இருந்தோரும் கலந்து கொண்டிருந்தனர்.

பின்னர் கேள்வி பதில் செஷனில் அவள் மேல் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு அனாயசமாக பதிலுரைத்தாள்.

இறுதி ஸ்லைடில் இரு திருக்குறள்கள் அதன் ஆங்கில விளக்கத்துடன் திரையில் ஒளிர்ந்தது அரங்கத்தில் இருந்தோர் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்”

குறள்: #67

Thandhai Makarkaatrum Nandri Avaiyaththu

Mundhi Iruppach Cheyal.

Translation :

Sire greatest boon on son confers, who makes him meet,

In councils of the wise to fill the highest seat.

Meaning:

The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.

“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்”

குறள்: #70

Makandhandhaikku Aatrum Udhavi Ivandhandhai

Ennotraan Kolenum Sol.

Translation :

To sire, what best requital can by grateful child be done?

To make men say, 'What merit gained the father such a son?'

Meaning:

(So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his father.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.