(Reading time: 18 - 36 minutes)

திருக்குறள் பற்றி சிறு விளக்கம் அளித்த அபூர்வா இந்த இரு குறள்களையும் எடுத்துரைத்து

“ஹோல்ட்ஸ் குட் பார் பாதர் அண்ட் டாட்டர் ஆஸ் வெல்” என்று தனது உரையை முடித்ததும்  அரங்கத்தினோர் கைதட்டி பாராட்டினை தெரிவிக்க கை கூப்பி நன்றி தெரிவித்தாள் அபூர்வா.

அந்த கூப்பியக் கரங்களுக்குள் இருந்த இரு சாக்லேட்கள் தந்தையே அவள் கரம் பற்றி துணையாக இருந்தது போன்ற ஒரு பலத்தினை அவளுக்குக்  கொடுத்ததை அவள் மட்டுமே அறிவாள்.

மாநாட்டில் அபூர்வாவிற்கு மிகச் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரை விருது வழங்கப்பட்டதோடு clinical trails க்கு அனுமதி வழங்கப்பட்டது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வளர்மதியின் "நிழலாய் உன்னை தொடரும்..." - திகிலூட்டும் அமானுஷ்ய தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

த்தனை மணிக்கு மா ப்ளைட்” அவள் ஜெனீவா செல்வதற்கு முன்தினம் மதியம் ரத்னாவதி போனில் மகளிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

அபூர்வா சித்தார்த் தவிர மொத்த குடும்பத்தினரும் அப்போது சென்னையில் இருந்தனர்.

“ஆல் தி பெஸ்ட் அக்கா. வரும் போது ச்விச்ஸ் ஹோம் மேட் சாக்லேட் நிறைய வாங்கிட்டு வா”

“இன்னும் இதையெல்லாம் என்கிட்டே ஏன் கேட்டுட்டு இருக்க. உன் வருங்கால உத்தமபுருஷன் கிட்ட இனிமே கேளு” வேண்டுமென்றே தங்கையை சீண்டினாள் அபூர்வா.

“நீ ஒன்னும் வாங்கிட்டு வர வேண்டாம் போ. சித்து அண்ணா வாங்கி தருவான் எனக்கு”

“சரி சரி அழாத. ஜெனீவா நான் மட்டும் தான் போறேன். வாங்கிட்டு வரேன்”

“பத்திரமா போயிட்டு வாம்மா” லலிதாம்பிகை ஆசிர்வதிக்க சுசீலாவும் பத்மாவும் தங்கள் பங்கிற்கு வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருந்தனர்.

“எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டியா அபி. உன்னை அங்க ரிஷி ரிசீவ் செய்துப்பான்” சுவிஸ் நாட்டின் இந்திய ஹை கமிஷன் அதிகாரி ரிஷிகுமார் சிங் கிருஷ்ணமூர்த்தியின் நண்பர். ஜெனீவாவில் அபியை பார்த்துக் கொள்ளும் படி நண்பரிடம் கேட்டுக் கொண்டிருந்தார் கிருஷ்ணமூர்த்தி.

“சரி மாமா. நானும் கிளம்பும் முன் அங்கிள் கிட்ட பேசி இன்ட்ரோ பண்ணிக்கிறேன்”

“சித்து எங்க மா. இருக்கானா. நீ ரிடர்ன் தில்லி வந்து அப்புறம் தான் மெட்ராஸ் வரீங்களா” சுசீலா சித்தார்த் பற்றி கேட்கவும் அபூர்வா ஒரு நிமிடம் ஒருவித உணர்ச்சிக் கலவையில் சிக்குண்டாள். உடனேயே மீண்டு சுசீலாவிற்குப் பதில் சொன்னாள்.

“ரிடர்ன் டிக்கெட் தில்லிக்கு தான் அத்தை. அவன் ஏதோ முக்கிய வேலையா வெளில போயிருக்கான். போன் சுவிச் ஆப் பண்ணிருப்பான். நான் வந்ததும் பேசச் சொல்றேன்”

பூர்வா குடும்பதினரோடு உரையாடிக் கொண்டிருத்த அதே மதிய நேரம் பிரதமரை அவரது இல்லத்தின் அலுவலக அறையில் சந்தித்தான் சித்தார்த். யேசுதாஸ் மற்றும் பாதுக்காப்பு ஆலோசகர் உடனிருக்க சித்தார்த் அவர்களிடம் இரு முத்திரையிட்ட தாள்களை நீட்டினான்.

“ஒ மை குட்னஸ்” யேசுதாஸ் அதைப் பார்த்து திகைத்தார். நேற்று அவர் கேட்ட கேள்விக்கு இப்படி ஒரு பதிலடியை  சித்தார்த் கொடுப்பான் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

“சர். சட்ட ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் எந்த பிரச்சனையும் இனி இல்லை. இந்த ஆபரேஷன் முழுக்க முழுக்க என்னுடைய அனுமானத்தின் அடிப்படையில் அமையப் போகிறது. அதனாலேயே ஐ பீல் ரெச்பான்சிபில் அண்ட் ஐ ஆம் அன்சரபில் டூ. நேத்து அங்கிள் கேட்டதும் சரியானது தான்”

“இருந்தாலும் சித் வி கேன் பைன்ட் சம் அதர் வே” யேசுதாஸ் இப்போதும் அவனது திட்டத்தை முழுமனதாய் ஏற்கவில்லை.

“அங்கிள். நம்மிடம் நேரம் ரொம்பவும் குறைவு. ஒரு சதவீதம் என்னுடைய அனுமானம் தவறாக இருந்தாலும்  இந்த ப்ளான் படி நாம எந்த கான்ட்ராவர்சியும் பேஸ் செய்ய வேண்டாம். ஆனாலும்  99 %  சரியாக இருக்கும் பட்சத்தில் ரகசியம் காக்கும் பொருட்டும் இந்த திட்டமே சரியானதாக எனக்கு தோன்றுகிறது. அதுவும் நமக்கு இன்னும் முழுமையான தகவல் தெரியாத நிலையில் திஸ் இஸ் தி பெஸ்ட் ஆப்ஷன் வி ஹாவ். மாமாவிற்கு என்னால தொடர்பு கொள்ள முடிந்து அவர்கிட்ட கேட்டா அவரும் இதையே தான் சரின்னு சொல்வார்”

“ஐ அப்ரூவ் சித்தார்த்ஸ் ப்ளான் ஆப் ஆபரேஷன். டோன்ட் வொரி மிஸ்டர் தாஸ். நான் உங்களுக்கு எல்லா வகையிலும் புல் சப்போர்ட் செய்ய சொல்றேன். இட் வில் பி லீடட் பை யூ. மிஸ்டர் கான் வாட் டூ யூ சே” பாதுகாப்பு ஆலோசகரை கேட்டார்.

“சர் ஐ ஆம் அமேஸ்ட் பை சித்தார்த்ஸ் ப்ளான். வி வில் மேக் இட் வொர்க் அண்ட் சக்சீட்” அவர் தனது சம்மதத்தைத் தெரிவிக்கவும் சித்தார்த் யேசுதாஸ் கான் இருவருக்கும் மூவரும் திட்டத்தின் மினிட்ஸ் பற்றி ஆலோசித்தான்.

“அங்கிள் நாளை மறுநாள் மாலையில் இருந்து அவர் ஆபரேஷன் ஸ்டார்ட்ஸ்” சொன்னவன் அந்த திட்டத்திற்கு ஒரு பெயரையும் வைத்தான்.  

அந்த பெயர்க் காரணம் பற்றி கான் நினைத்துக் கொண்டிருக்க யேசுதாஸ் அவனிடம் அந்த முத்திரை தாள்களில் இருந்த செய்தியைப்  பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“அங்கிள். ஐ டிட் நாட் ப்ளான் தட். அண்ட் இட் வாஸ் நாட் மை டெஷிஷன் டூ”. அங்கிள் கடைசியா நான் கேட்டுக் கொண்டதை ப்ளீஸ் கண்டிப்பா நிறைவேற்றனும்”

“கண்டிப்பா” என்ற யேசுதாஸ் அவன் சற்று முன் கூறியதைக்  கேட்டு இன்னும் ஆச்சரியம் அகலாமலே இருந்தார். அதை அவனிடம் தெரிவிக்கவும் செய்தார். அவர் ஆச்சரியம் கொள்ளலாம் ஆனால் சித்தார்த்க்கு அது ஒன்றும் ஆச்சரியம் அல்லவே.

அன்று காலை நடந்ததை அசைப்போட்ட படியே வீட்டை நோக்கி தனது காரை செலுத்தினான் சித்தார்த்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.