(Reading time: 7 - 14 minutes)

மக்கு எதிரியா?... என்ன சொல்லுகிறீர்கள் அக்கா?...”

“விளக்குவதற்கு இது சரியான நேரம் இல்லை சதி… அதை தூர எறிந்துவிட்டு இப்போழுதே எங்களுடன் அரண்மனைக்கு புறப்படு…”

மூன்றாமவள் சற்றே அழுத்தத்துடன் கூற,

“அது மட்டும் என்னால் முடியாது அக்கா… நான் இதனுடனே அரண்மனைக்குள் பிரவேசிப்பேன்…” என்றாள் சதியும் அதே அழுத்தத்துடன்…

“எனில் நீ நம் தந்தையின் மனதை புண்படுத்த தயாராகிவிட்டாயா சதி?...” என மீண்டும் மூன்றாமவள் கேட்க,

சட்டென வந்துவிட்ட கேள்வியில் விழிகள் விரிந்தது சதிக்கு…

“தந்தையின் மனதை நான் புண்படுத்துவதா?... அது ஒருநாளும் நடக்காது அக்கா…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

“எனில் வீண் விவாதம் செய்யாமல், நாங்கள் சொன்னதை செய்…” என்றாள் இரண்டாமவளும்…

“ஆனால் அக்கா?.. நம் தந்தைக்கு எதிரிகள் யார்?... அப்படியே இருந்திருந்தாலும் தந்தை என்னிடத்தில் தெரிவித்திருப்பாரே!!!…”

“நம் தந்தை உனக்கு அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்ததின் விளைவு தான் இது… அவர் எல்லாவற்றையும் உன்னிடத்தில் கூறவேண்டுமென்று ஏதும் சட்டம் இருக்கிறதா என்ன?...”

மூத்தவள் சினத்தோடு சதியிடத்தில் கேட்க

“ஆம்… நம் தந்தை என்னிடத்தில் எதையும் மறைக்க மாட்டார்… அதுவும் அவரின் சதியான என்னிடத்தில் ஒருபோதும் அவர் எதையும் மறைத்ததில்லை…” என்றாள் சதி மிக உறுதியாக…

“இந்த பிடிவாதம் தான் சதி… உன்னிடத்தில் குடிகொண்டிருப்பது… யார் சொல்வதையும் செவிகளில் வாங்கிக்கொள்ள மாட்டேன் என தடுப்பதும் இந்த பிடிவாதம் தான்… உனது இந்த வீண் பிடிவாதம் உன்னோடு மட்டும் முடிந்திடாது, நம் தந்தைக்கும் பெரிய மன உளைச்சலை பரிசளிக்கப் போகிறது… எனில் உனக்கு மகிழ்ச்சி தானே?...”

மூத்தவளுக்கு அடுத்தவள், சதியிடத்தில் கோபமாக வினவ,

“இல்லை அக்கா… நான்….”

சதி பேச முயலுவதற்குள்,

“சதி… இது உன் கரங்களில் இருந்தது மட்டும் தந்தைக்கு தெரிந்தால் அவர் எவ்வளவு மனவேதனைக்குள்ளாவார் என்று அறிவாயா நீ?...”

இரண்டாமவளுக்கு அடுத்தவள், சதியிடம் வருத்தத்துடன் கேட்டிட,

“போதும் அக்கா… இதற்கு மேலும் தாங்கள் எதுவும் கூற வேண்டாம்… நம் தந்தையை மன வேதனைக்கு உள்ளாக்கும் எதுவும் எனக்கு தேவையில்லை…” என கூறிய சதியின் விழிகளில் ஒரு உறுதி தெரிய,

“நம் தந்தையின் எதிரிக்குண்டானதை, நாம் கையில் வைத்திருப்பது முறையல்லவே சதி…”

என அவளுக்கு புரியும்படி விளக்க முற்பட்டாள் நால்வரில் கடைசியானவள்…

“எனக்குப் புரிகிறது அக்கா… நம் தந்தையின் எதிரி… எனக்கும் எதிரியே… அதில் எள்ள்ளவும் மாற்றமில்லை….”

சதி முகமெங்கும் கோபமாக கூறிமுடித்த வேளை,

“இப்படியே நின்று பேசிக்கொண்டிருந்தால் தந்தை செய்து கொண்டிருக்கும் அபிஷேகத்திற்கு நீர் யார் கொண்டு போவது?...”

மூத்தவள் சற்றே காட்டமாக கேட்க, அதுதானே… என்றனர் அவளுக்கு அடுத்த இரண்டு பேரும்…

“அக்கா… நீங்கள் அனைவரும் செல்லுங்கள்… நான் சதியிடம் பேசி அவளை அழைத்து வருகிறேன்…”

“தந்தை காத்திருப்பது நம் ஐவருக்காகவும் தான்…. நேரத்தை விரயம் செய்யாமல், அதனை தூர எறிந்துவிட்டு, அவளை அழைத்துவா… இல்லை நீயும் அவளுடன் சேர்ந்து காலத்தை போக்குவதென்றால் உன் விருப்பம்….”

என்ற மூன்றாமவள், மற்ற இருவரையும் அழைத்துக்கொண்டு செல்ல,

கடைசியில் உள்ளவளைப் பரிதாபமாக பார்த்த சதி,

“நான் இதனை இப்பொழுதே நீரில் விட்டுவிடுகிறேன் அக்கா…” என கூறியபடி அதனை நீரில் விட, அதுவோ நகர மறுத்தது அங்கிருந்து…

மெல்ல நீரினில் கைகளை விட்டு அவள் அதனை தள்ளிவிட, அது நகர்ந்து சென்று ஒரு செடியின் அடியில் நின்றது…

அதனை வைத்தகண் வாங்காமல் பார்த்தபடி நின்றவளின் கையைப் பிடித்து,

“வா சதி… நேரமாகிறது… தந்தை நமக்காக அங்கே காத்துக்கொண்டிருப்பார்…” என சதியின் சகோதரி அழைக்க,

“சரி அக்கா…” என்றபடி தலையசைத்துவிட்டு, அவளுடன் சென்றாள் சதி…

சதி தன் சகோதரிகளுடன் சென்றதும், செடியின் அடியில், ஒதுங்கி இருந்த ருத்திராட்சம் அசையாமல், மீண்டும் அவள் கை சேரும் நேரத்திற்காக காத்திருக்க தொடங்கியது இனிதே…

சதியின் கை சேர்ந்த ருத்திராட்சம் மீண்டும் அவள் கரங்களில் தவழுமா?...

அதனை தெரிந்து கொள்ள நாமும் காத்திருக்கலாமா?...

மீண்டும் அடுத்த வாரம், சிவ-சதியின் முன் ஜென்ம மருவக்காதல் கொண்டேனில் சந்திக்கலாம்… நன்றி….

Episode 32

Episode 34

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.