(Reading time: 17 - 33 minutes)

32. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

ட்சேஷ்வரின் கரங்களைப் பிடித்திருந்த ஜெய்யை உறுத்து பார்த்தார் அவர்….

“எவ்வளவு திமிர் இருந்தா நீ என் கையையே பிடிப்ப?...”

கிட்டத்தட்ட தட்சேஷ்வர் உறும,

“நீங்க கை நீட்டினது எனக்கு உரிமையானவளை நோக்கி…” என்றான் ஜெய் அழுத்தத்துடன்…

“என்னடா உரிமை?... அவ என் பொண்ணு… அவளுக்கு எந்த நல்லதை கொடுக்கணும் எந்த கெட்டதை எடுக்கணும்னு எனக்குத்தெரியும்… ஒரு தகப்பனா எனக்கு இருக்குற உரிமையை நீ முதலில் தெரிஞ்சிக்கோ…”

“உங்களின் உரிமையை விட என் உரிமையை அதிகம் தெரிஞ்சு தான் பேசுறேன்…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“என்னடா தெரியும் உனக்கு?... எத்தனை நாளா அவளை தெரியும்?... இருபத்தோரு வருஷமா என் பொண்ணை நோகாம வளர்த்தவன் நான்டா… எங்க இருந்தோ வந்த நீ, ஒரு நொடியில என் பொண்ணை உரிமை கொண்டாடி என்னையே எதிர்த்தா, நான் பார்த்துட்டு பேசாம இருப்பேன்னு நினைச்சீயா?...”

தட்சேஷ்வர் கோபத்தோடு வார்த்தைகளை அவனை நோக்கி ஆயுதமாய் விட,

சட்டென்று மூண்டுவிட்ட சினத்துடன் அவரைப் பார்த்தவன்,

“என் உரிமையோட அளவு தெரியணுமா உங்களுக்கு?.... பார்த்துக்கோங்க….”

என சொல்லிவிட்டு வேகமாக தன் கையில் வைத்திருந்ததை அவரின் முன் நீட்ட, அப்படியே சிலையாகி போனார் தட்சேஷ்வர்…

எத்தனை எத்தனையோ ஆண்டுகளாய் அவன் கைகளில் தவழ்ந்திருக்கும் அந்த பொக்கிஷம், இன்று தட்சேஷ்வரின் கண்களுக்குள்ளும் தெரிய, அவரின் உடம்பில் ஏற்பட்ட அதிர்வும், அதைத் தொடர்ந்து அவர் பேச்சு மூச்சின்றி அசைவற்று நின்று போனதையும், பிரம்மரிஷி ஒரு பெருமூச்சுடன் பார்த்திருந்தார்….

நாழிகை கடந்து கொண்டே இருந்தது தெரியாமல், தட்சேஷ்வரின் கண்கள் அந்த பொக்கிஷத்திலேயே நிலைத்திருக்க,

“இப்போ புரிஞ்சதா என் உரிமையோட அளவு?...”

என்ற குரலில் சட்டென தன்னுணர்வு பெற்று அவர் ஜெய்யைப் பார்த்த தருணத்தில், அவரின் கண்களின் முன் கண்ட காட்சியில் உறைந்தே போனார் அவர்…

மெல்ல அவரின் தோளில் ஒரு கரம் விழுகவும், பதறியவராய் அவர் திரும்பிப் பார்க்கையில், பிரம்மரிஷி நின்றிருந்தார்…

“தட்சா…”

“அப்பா…….. நான் என் கண்ணுல காணுற காட்சி……………..”

அவர் மிரண்டு போனவராய் தந்தையிடம் கேட்க,

“அனைத்தும் உண்மையே…” என்றார் பிரம்மரிஷி விழி மூடி இமைத்து…

“அப்போ சில நிமிஷத்துக்கு முன்ன நான் பார்த்த நிகழ்வுகள்???...”

“இரண்டுமே நிஜம்….”

“என்னப்பா சொல்லுறீங்க?... எனக்குப் புரியலை?....”

“உனக்கு புரிய வேண்டிய காலம் வந்துடுச்சு… சிவா கையில இருக்குறதை கொஞ்சம் பாரு….”

“இல்லப்பா வேண்டாம்… அதைப் பார்த்தா, உடம்பே அதிருது… ஏன்னு எனக்கு சொல்லத்தெரியலை…”

“எல்லாத்துக்குமே சில காரணம் இருக்கு தட்சா…. நீ அதைப் பாரு முதலில்…”

“இல்லப்பா… நான் எதையும் பார்க்க விரும்பலை… சதியை நான் கூட்டிட்டு போறேன்… நீங்க என்னோட வரீங்களா இல்லையா?...”

“எதைப் பார்க்க விரும்பலை தட்சா?... இதையா?....”

என சொல்லிக்கொண்டே பிரம்மரிஷி ஜெய்யின் கையில் இருப்பதை சுட்டிக்காட்டி சொல்ல,

தானாகவே தட்சேஷ்வரின் விழிகள் அதன் மேல் பதிந்தது…

கண்கள் அதில் விழுந்த நேரம், அவரின் மனதில் சில காட்சிகள் விரிய, நெஞ்சம் கனத்தது அவருக்கு….

கண்களில் கலக்கமும், அதே நேரம் ஆத்திரமும் பெருக, அவரால் அதற்கு மேலும் அதனைப் பார்க்க முடியாமல் திரும்பிக்கொண்டார்…

“தட்சா?... என்னாச்சு?...”

“யாரை நான் என் பொண்ணு வாழ்க்கையில இருந்து விலக்கணும்னு நினைக்கிறேனோ, அவனையே என் பொண்ணுக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்குற காட்சி வந்து போகுதுப்பா…. என்னால அதை ஏத்துக்க முடியலைப்பா….”

“சத்தியத்தை ஏத்துக்கிட்டு தான் ஆகணும் தட்சா….”

“தேவையில்லப்பா… எந்த சூழ்நிலையிலும் என் பொண்ணை, இந்த தட்சேஷ்வரோட பொண்ணை, இவனுக்கு நான் கட்டிக்கொடுக்க மாட்டேன்…”

அழுத்தம் திருத்தமாக அவர் உரைக்க,

“அவளுக்காகப் பிறந்தவன் நான்… அவ என் சதி… என் சதியை எந்த சூழ்நிலையிலும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்… இது இதுநாள்வரை என்னவளுக்காக, நான் பாதுகாத்து வைத்திருந்த என் பொக்கிஷத்தின் மீது ஆணை…”

அவன் கர்ஜித்து சூளுரைத்து முடித்த வேளை, எங்கிருந்தோ வந்த ஓர் ஒற்றை மின்னல், அவனது கரத்தினில் பட்டு தெறிக்க, அனைவரின் பார்வையும் அவனின் கைகளில் வைத்திருந்த மங்கல நாணின் மீது விழுந்தது அதிர்ச்சியுடன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.