“இன்னைக்கு நம்ம கல்யாண நாள்….”
திருமணம் மட்டும் அல்ல, திருமண நாளும் ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியம் வாய்ந்தது… அந்த தேதியை ஆண் மறந்து போனாலும் பெண் அவள் மறந்து போகமாட்டாள் ஒருநாளும்…
ஆனால் இன்றோ, நிலைமை வேறாக இருக்க, குற்ற உணர்ச்சியில் உதட்டினை அழுந்த கடித்துக்கொண்டாள் சரயூ…
“எப்படி மறந்தேன்?... ஒவ்வொரு பெண்ணுக்கும் மறக்க முடியாத நாள் அல்லவா இது?... என் திலீப்பை கைப்பிடித்த நாளை நான் எப்படி மறந்து போனேன்?... ஏன் மறந்து போனேன்?... ஆயிரம் கோப தாபங்கள் இருப்பினும், இதை நான் எப்படி மறக்கலாம்?... எப்படி என் நினைவில் இருந்து அது தப்பிப்போனது?... கடவுளே… நான் என் செய்வேன்?...”
கண்கள் கலங்க அவள் நிற்க, அவளின் முக மாற்றத்தினை கவனித்த திலீப்,
“என்னைப் பாரு சரயூ….” என்றான்…
அவள் பார்க்க மறுக்கவே, “என்னைப்பாரு…” என அவளின் தோள்பிடித்து தன் பக்கம் திருப்பினான் அவன்…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஸ்ரீயின் "நின்னை சரணடைந்தேன்" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
உதடு துடிக்க, முகம் சிவந்து, அழுகையை வெளிக்கொண்டு வர தயாராக இருக்கும் கண்களுடன் அவள் நிலம் பார்த்திருக்க,
“போன வருஷம் வர, நம்ம கல்யாண நாளை நீ மறந்திருக்கியா?.. இல்ல தான?... இந்த வருஷம் நீ மறந்துட்டன்னு சத்தியமா நான் சொல்ல மாட்டேன்… நானும், என் செயலும் உன் நினைவிலிருந்து கொஞ்சம் நகர்த்தி வைச்சிட்டுன்னு தான் சொல்லுவேன்… நான் தான காரணம் சரயூ… எல்லாத்துக்குமே… உன்னை மாதிரி பொண்டாட்டி கிடைச்சும், சந்தோஷமா வாழ்க்கையை அனுபவிச்சு வாழத் தெரியாம போயிட்டேன் சரயூ... என்னை மன்னிச்சிடு….”
என அவளைப் பார்த்து கைகூப்பியவன், “வேண்டாம் சரயூ… உனக்கா தோணுறப்போ நீ மன்னிப்பை பத்தி யோசி… உன் மனசார என்னைக்கு மன்னிக்க முடியும்ணு தோணுதோ அப்போ மன்னிச்சா போதும்… அதுவரை நான் காத்திட்டிருப்பேன் சரயூ…. உன்னை எப்படி இதே நாள், காதலோட கைப்பிடிச்சேனோ, அதே மாதிரி காதலோட காத்திருப்பேன், அது அடுத்த வருஷம் ஆனாலும் சரிதான்…”
அவன் அவளின் முகத்தினை நிமிர்த்தி, அவள் கண்ணைப் பார்த்து பேச, அவள் விழிகளிலிருந்து மளமளவென்று கண்ணீர் வழிந்து கன்னம் தொட, அதை மென்மையாக துடைத்துவிட்டவனுக்கும் கண்கள் கலங்க ஆரம்பிக்க,
“திலீப்………………..” என்ற கூவலுடன் அவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்தாள் சரயூ…
தன்னை அணைத்துக்கொண்டு ஏங்கியவளின் முதுகை நீவி விட்டவன்,
“ஹே… அழாதடி… இப்போ என்ன நடந்து போச்சுன்னு அழற?... விடு அதை…”
அவன் சமாதானமாய் பேச, அவள் மேலும் உடைந்து அழுதாள்…
“சாரி திலீப்…. நா……….ன் வே………….ணு……………..ம்…………….னே ம………ற…….க்……க……லை…”
அவள் திக்கித்திணற, அவன் அவளின் முகம் பற்றினான்…
“அய்யோ எனக்கு தெரியாதா உன்னைப் பத்தி?... விடுடி….”
அவன் அவ்வாறு சொன்னதும், அவன் கரங்களைப் பிடித்து தளர்த்தியவள், விரக்தியாக சிரித்தாள்…
கண்ணீரை துடைத்துக்கொண்டே, “நான் போய் இரண்டு பேரையும் ஸ்கூலுக்கு அனுப்புறேன்…” என்றவள் அவன் பேசும் முன்பே, அங்கிருந்து நகர்ந்து சென்றாள் வேகமாய்…
அவளின் விரக்தி முகமும், அது கொண்டிருந்த புன்னகையும், அவன் கண்களுக்கு தப்பவில்லை…
“நிஜமாகவே அவளை நான் புரிந்து கொள்ளவில்லையா?... அவளைப் பத்தி எனக்கு இன்னும் தெரிந்திருக்கவில்லையா?... அவள் மனதில் அரித்துக்கொண்டிருக்கும் அந்த ரணம் தான் என்ன?... ஏன் அவள் என்னிடம் அதை பகிர்ந்து கொள்ள மறுக்கிறாள்?...”
அவன் சிந்தனை விரிவடைய, யோசனையுடன், ஹாலுக்கு வந்தான்…
அவள் பிள்ளைகளை சாப்பிட வைத்து, பள்ளிக்கு அனுப்பிவைத்துவிட்டு, திரும்ப, அங்கே வாசலிலேயே அவளுக்காய் காத்திருந்தான் திலீப்…
அவனைப் பார்த்ததும் திடுக்கிட்டவள், பின்னர் அவனைத் தாண்டி செல்ல முற்படுகையில், அவன் தடுத்தான்…
“ஒரு நிமிஷம் சரயூ…. உங்கிட்ட பேசணும்…”
“சொல்லுங்க….”
“என்னமோ சொல்லணும்னு நினைக்குற… ஆனா சொல்லமாட்டிக்குற?... என்ன சரயூ அது?... சொல்லு… எதுவானாலும் எங்கிட்ட சொல்லு…”
“ஹ்ம்ம்… எதுவுமில்லை….”
“பொய் சொல்லாத சரயூ… எதுவோ இருக்கு… மனசை விட்டு பேசேண்டி எங்கிட்ட…”
“ஹ்ம்ம்… எதுவுமே இல்லை விடுங்க…” என சொல்லிவிட்டு நகர்ந்தவளின் கைகளைப் பிடித்துக்கொண்டான் அவன் இறுக்கமாக…