அந்த காட்சியை யோசித்தவளுக்கு சிரிப்பு வந்தது ,கூடவே அப்படிதான் இவங்களை பழி வாங்கணும் என்றும் தோன்ற ,கூடவே மற்றும் ஒரு எண்ணம் எழுந்தது ...
''நீங்க அடிக்கடி நேரடியான பதில் சொல்லாம நழுவறதை போல ''என்றாள் நமுட்டு சிரிப்புடன் ....
கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு சிரிப்பில் லேசாய் முகம் விரிய
''பரவாயில்லை என்னோடு சேர்ந்து நல்லா பேச கத்துகிட்ட'' என்றான் கெத்தாக
''பின்ன கொஞ்ச நஞ்ச மொக்கையா போட்ருக்கிங்க ,அதுக்கு இந்த பலன் கூட இல்லைனா எப்படி ..''என்றாள் சிரிப்புடன்
''பாவம்சிட்டிலேர்ந்து வந்து க்ரீன் சாண்டாவே இருக்கியே ...கொஞ்சம் விஷயம் சொல்லி தேத்துவோம்ன்னு சொன்னேன் பாரு என் தப்பு தான் ,டேய் மஹி நல்லதுக்கு காலம் இல்லடா
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக்கிற ,சும்மா உட்காரு ''என்று உரிமையாய் அதட்டியபடியே உள்ளே வந்து திண்ணையில் உட்கார்ந்தது ..
''நல்லபடியா பொங்கல் ஆச்சா ''என்று இவளை கேட்டு விட்டு ''உனக்கு எல்லாம் புதுசா இருந்துருக்கும் ''என்று சிரித்தது
''ஆமாம் நல்லாத்தான் இருந்தது ,இப்போ தான் முதல் முறையா பார்க்கிறேன்''