(Reading time: 7 - 14 minutes)

"ம்மா...ஆனா,நம்ம குழந்தை பாவம்டி!என்கிட்டயே இப்படி கத்துற!அவனோ இல்லை அவளோ சின்ன தப்பு பண்ணாலும் அடித்துவிடுவ போல?"

"குழந்தையா?"

"ம்...என்ன?ஷாக்கிங்கா கேட்கிற?"-சட்டென அவளது மனதை சாந்தப்படுத்தினான் அவன்.

"நான் குழந்தையை எல்லாம் அடிக்க மாட்டேன்."

"ஓ...அப்போ அந்த சாக்குல என்னை அடிப்ப?"

"ஈஸ்வரா..!என்னங்க இப்படி பேசுறீங்க?"

"ஏ..சும்மாடி!"-என்று அவளை அணைத்துக் கொண்டான் ஜோசப்.

"இப்படி ஒரு நல்ல அப்பா கிடைக்கும் போது,எந்தக் குழந்தையும் தப்பும் பண்ணாது,கஷ்டமும் படாதுங்க!"-என்றவளின் குரலில் இருந்த ஏக்கத்தை அவன் உணராமல் இல்லை.

வருங்காலத்தில் வாரிசை குறித்த பெருங்கனவுகளை ஜோசப்பை விட நிர்பயா தான் அதிகம் கொண்டிருந்தாள்.ஆனால்,இன்று??

இந்த இறைவன் தான் அவளுக்கென எவ்வளவு சோதனைகளை வைத்துள்ளான்??எவ்வாறு இந்த நிதர்சனத்தை இவள் ஏற்பாள்??பாழாய் போன உலகம் இவளை தானே பழிக்கும்??என்றெல்லாம் சிந்தனை ஓடியது அவன் மனதுள்!!இருக்கட்டும்...அவளுக்காக சிந்திக்க அவன் மட்டுமாவது இருக்கிறானே!!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - சமூக அக்கறையுள்ள குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"யப்பட இனி ஒண்ணுமில்லை சார்!இனி,கொஞ்சம் கொஞ்சமா நடக்க ஆரம்பிக்கலாம்!மனசைஅமைதியா வைத்துக்கோங்க!டென்ஷன் ஆகாம பார்த்துக்கோங்க!உடம்புல எனர்ஜி இல்லை.நல்லா சாப்பிட சொல்லுங்க!இன்னும் 4 நாளில் டிஸ்சார்ஜ் பண்ணிடுவோம்!"

"தேங்க்யூ டாக்டர்!"

"வெல்கம் சார்!"-என்று புன்னகைத்தப்படி சென்றார் மருத்துவர்.

ஜோசப் மனம் இப்போது தான் நிம்மதி அடைந்தது.

அவளுக்கு இனி ஆபத்தில்லை...

ஒரு வித மனநிறைவோடு அந்த வார்டுகுள் அவன் நுழையவும் தடுமாறி அவன் மேல் விழுந்தாள் நிர்பயா.சட்டென கிடைத்த அவளது நெருக்கம் அவனை சிலையென ஸ்தம்பிக்கவே வைத்தது.

"ஏ...உன்னை யார் இது மாதிரி நடக்க சொன்னா?5 நிமிடம் உட்கார மாட்ட?"-அவள் தன் கருவிழிகளை அகல விரித்தப்படி அவனை பார்த்தாள்.

"உன்கிட்ட தான் கேட்கிறேன்!"-நிர்பயா தன் பார்வையை தாழ்த்தினாள்.அவள் பார்வை சென்ற திசையை நோக்கியவன் திடுக்கிட்டான்.ஜோசப்பின் கரங்கள் நன்றாக அவளை வளைத்திருக்க,இருவருக்கும் இடையே நெருக்கமானது கூறும் அங்கில்லை.சட்டென சுதாரித்தவன் அவளை விலகினான்.

"எத்தனைமுறை சொல்லி இருக்கேன்.நான் இல்லாம எழுந்து நடக்காதேன்னு!நான் வரலைன்னா என்ன ஆகி இருக்கும்?"

"2 கட்டு எக்ஸ்ட்ரா ஆகி இருக்கும்!"

"அப்படியே 2 போட்டேன்னா!"-என்று விளையாட்டாக கை ஓங்கினான் அவன்.

"இனி நான் இல்லாம நடந்துப் பாரு..!நானே தள்ளி விட்டுவிடுவேன்!"-என்றவனை சிறு குழந்தையை போல முறைத்தாள் நிர்பயா.

"வா!"

"கால் வலிக்குது!"

"ம்...சும்மா உட்காருடின்னா பேச்சை கேட்கிறதில்லை.இப்போ கால் வலிக்குதாம்!"-என்றவன் கை குழந்தையை தூக்கிவதைப் போல அவளை தூக்கினான்.

அவளது முகத்தில் புன்னகை லேசாக துளிர்விட்டது.மெல்ல அவளை தூக்கி சென்றவன் அவளை கட்டிலில் அமர வைத்தான்.

"காலை காட்டு!எங்கே வலிக்குது?"-என்று அவன் அவளது காலை பிடித்து பார்க்க பதற்றத்தோடு அவனை விலக்கினாள் நிர்பயா.

"வேணாங்க!"

"இப்போ என்ன கொடுத்தேன் வேணாம்னு சொல்ற?எங்கே வலிக்குது?"-என்று அவளது கால்களில் ஏதோ மருந்தை எடுத்து தடவ வந்தான்.

"இல்லை..நானே தடவிக்கிறேன்!"

"நான் வலிக்கிற மாதிரி தடவ மாட்டேன்!"

"இ...இல்லை..வே..வேணாம்!"-மெல்லிய குரலில் அவள் பதறவும்,அதுவரை ஏதும் விளங்காதவனுக்கு அவள் இடும் தடையின் காரணம் விளங்கியது.

"எனக்கு கால் வலின்னு சொன்னா நீ சாதாரணமா விடுவியா?"-இதமாக கேட்டான் ஜோசப்.

"ம்ஹூம்..!"

"அப்பறம் உனக்கு ஒண்ணுன்னா நான் எப்படி சாதாரணமா விட முடியும்?"-அவளிடம் விடை இல்லை.

"இதோப்பார்...நான் எந்த விதத்திலும் உனக்கு உயர்ந்தவனும் இல்லை.நீ எந்த விதத்திலும் எனக்கு தாழ்ந்தவளும் இல்லை.நீயும் நானும் என்னிக்கும் வேற வேற இல்லை...!உனக்கு ஒரு கஷ்டம்னா முதல்ல துடிக்கிறவன் நானா இருக்கவே விரும்புறேன்!இருக்க விடுவியா?"-இப்போது அவளிடம் பேச்சே இல்லை.

"இதுவரை உன் வாழ்க்கை எப்படியோ!எனக்கு அது தேவையில்லாதது!இனி,நீ போதும்னு கெஞ்சுற அளவுக்கு நான் உனக்கு சந்தோஷத்தை கொடுப்பேன்!நான் இருக்கேன்டி உனக்காக!எந்த கஷ்டம் வந்தாலும்,என்ன எதிர்ப்பு வந்தாலும்,யார் என்ன சொன்னாலும் எதைப் பற்றியும் கவலைப்படாம உன்னை பாதுகாக்க வேண்டியது என் பொறுப்பு புரியுதா??"-அவள் விழிகளில் முதன்முறையாக நிம்மதி!!ஆத்மார்த்தமான ஒரு நிம்மதி!!எதை குறித்தும் சிந்திக்காமல் தன் உயிர் கொண்டவனை இறுக அணைத்துக் கொண்டாள் நிர்பயா.

தொடரும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:1030}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.