(Reading time: 7 - 14 minutes)

15. நிர்பயா - சகி

Nirbhaya

னமானது நிம்மதியை வேண்டும் சமயத்தில் இந்த விதியானது ஏதாவது பெரும் சிக்கலை உருவாக்கி நம் தலையில் கட்டிவிடும்!!அச்சமயம்,மனதின் வேர்வரை நிம்மதி பறி போகும்.சிலர் இதற்கு இறைவனை சபிப்பர்.சிலரோ,மனம் ஒடுங்கி நிற்பர்.உண்மையில் நிம்மதி வேண்டும் சமயம் எழும் துன்பம் குறித்து அறிவீரா?இறைவனிடம் தாம் வேண்டியது நிர்மூலமான நிம்மதியை..!நிர்மூலமான நிம்மதி என்பது இறைவனுக்கே கிட்டாத பாக்கியம்!!கிட்டி இருந்தால் நாத்திகர்கள் புவியில் வலம் வந்திருக்க மாட்டர்.எனினும் இறைவன் பெருந்துன்பத்தை நல்கி அதன் மூலம் நிம்மதியை மனிதர்க்கு அளிக்கின்றான்.இது எவ்வாறு சாத்தியம்??சற்று சிந்தியுங்கள்...ஒரு மாபெரும் துன்பம் இதயத்தை தாக்கும் சமயம் மனம் அதிர்ந்து போகும் அதில் ஐயமில்லை. ஆனால்,போராடி அத்துன்பத்தை வென்று பாருங்கள்.இறுதியில் தாம் வேண்டிய வரம் கரம் சேருமல்லவா??அதாவது ஆழ்ந்த நிம்மதி...!வாழ தெரியாதவர் இல்லாத துன்பத்தைப் பற்றி சிந்திப்பர்.அவர்களை விடுங்கள்..!மேலும் இதயத்திற்குள் நன் நம்பிக்கை ஒன்று முளைக்கும்.

பரமாத்மா விடுத்த சவாலில் வென்றவர்கள் வேறு எதைக் கண்டு அஞ்ச வேண்டும்??அவர்களை வெல்ல அந்த பரரமாத்மாவை தவிர வேறு எந்த சக்தியாலும் இயலாது என்ற நம்பிக்கை மறைமுகமாக நிச்சயம் இதயத்தை வியாபிக்கும்.உணர்ந்து தான் பாருங்களேன்..!!

தலையில் நல்ல வலி!!

கால்களிலும் தான்!!ஒரு மாதத்திற்கு நடப்பது சிரமம் என்று கூறிவிட்டனர்.

"ஸ்ரீமத் பகவதம்!"-என்ற நாராயணர் உலகிற்கு அளித்த உன்னத மகிமையை படித்துக் கொண்டிருந்தாள் நிர்பயா.

உடலின் சோர்வுகள் புத்தகத்தை படிக்கும் சமயத்தில் காணாமல் போய்விடுவது உண்மை!!

(பள்ளி பருவத்தை தவிர!)

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

வெளியே மழை நன்றாக பொழிந்து கொண்டிருந்தது.

மனதை திருடும் மண் வாசனை அவளது மனதை அமைதியாக்கியது.

அமைதியாக விழிகளை மூடியவள் புத்தகத்தை அணைத்துக் கொண்டு சாய்ந்துக் கொண்டாள்.

சில நிமிடங்கள் கடந்திருக்கும்,அவள் கரத்தில் இருந்த புத்தகத்தை யாரோ வாங்க திடுக்கிட்டு கண் விழித்தாள்.

"முழிச்சிட்டு தான் இருக்கியா?தூங்கிட்டன்னு நினைத்தேன்!"-என்றான் ஜோசப்.

மெல்லிய புன்னகை அவளது இதழோரத்தில் மலர்ந்தது...

"டேப்லட் சாப்பிடு!"-என்று சில மருந்துகளை அவளின் அதரங்களுக்கு இடையே திணித்தான்.மெல்ல தண்ணீரை அவளது சிரத்தை இதமாக பிடித்து அவள் அருந்த செய்தான்.

"வலி எப்படி இருக்கு?"

"அடி வயிறு தான் ரொம்ப வலிக்குது!"-அவள் கூறியதும் அவனுக்கு பகீரென்று.காரணம் அன்று.....

"ஸாரி ஸார்...இந்த ஆக்ஸிடண்ட்ல அவங்க உயிர் பிழைத்தது ரொம்ப அதிசயம்!ஆனா.."

"ஆனா என்ன டாக்டர்?"

"அவங்க தாய்மை அடையுற தகுதியை இழந்துட்டாங்க சார்!"-பெரும் இடியை அவன் தலையில் இறக்கினார் அவர்.

"பட்...ட்ரீட்மண்ட் கொடுத்தா இதை கண்டிப்பா சரி பண்ண முடியும்.ஆனா,அவர் உடம்பு இருக்கிற கண்டிஷன்ல இரண்டு வருஷத்துக்கு எதுவும் பண்ண முடியாது!"-இது எந்த ஒரு ஆணின் மனவுறுதியையும் சோதித்து பார்த்துவிடும்!!

"அவளுக்கு இந்த விஷயம் தெரிய வேணாம்!தாங்கிக்க மாட்டா!நான் பார்த்துக்கிறேன்!"-என்றான் ஜோசப்.

"ரொம்ப வலிக்குதா?"

"ம்..."-ஜோசப் அவளது வயிற்றை தன் கரத்தை வைத்தான்.மனம் கனத்து போனது.

"இதை எப்படி இவளிடம் கூறுவேன்?நொறுங்கி விடுவாள் அல்லவா!"-என்று சிந்தித்தான் அவன்.

"ஒண்ணுமில்லை சீக்கிரம் சரியாயிடும்."

"ம்...."-அவனது முகம் மனதின் வலியை பிரதிபலித்தது.

"என்னாச்சுங்க?"

"ஆ...ஒண்ணுமில்லைம்மா!"

"கையை எடுக்கிறீங்களா?"-குறும்பாக கேட்டாள் அவள்.ஜோசப் புன்னகைத்தப்படி தன் கரத்தை எடுத்துக் கொண்டான்.

"நீ ரெஸ்ட் எடு!புக்ஸ் எல்லாம் அப்புறம் படிக்கலாம்."-என்றவன் பகவத் கீதையை வாங்கி வைத்தான்.

"என்னங்க!"

"ம்??"

"லவ் யூ!"-முதல்முறையாக மனதின் காதலை அவனிடம் எடுத்துரைத்தாள் நிர்பயா.ஜோசப் அவளது நெற்றியில் இதமாக முத்தமிட்டான்.

"ரெஸ்ட் எடு லூசு!"-என்றவன் அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டான்.

சில நிமிடங்களில் அவள் ஆழ்ந்த உறக்கத்திற்குள் தள்ளப்பட்டாள்.

"அவங்க தாய்மை அடையுற தகுதியை இழந்துட்டாங்க!"-மருத்தவரின் கூற்று செவிகளில் ஒலித்தது.

ஒரு காலத்தில்...

"இப்போ எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுற?நான் என் உலக மகா பொய்யா சொன்னேன்?இதான் லாஸ்ட் இனி எந்த கழுதை சொன்னாலும் டிரிங் பண்ண மாட்டேன்."

"நீங்க என்ன சொன்னாலும் சரி!நான் ஒத்துக்க மாட்டேன்!பொய் எதுக்கு சொல்றீங்க?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.