(Reading time: 14 - 28 minutes)

26. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ர்ஜுன் ராகுல் இருவருக்கும் லடக் பகுதியில் லேபிடிநென்ட் கர்னலாக promotion ஓட சேர்ந்த போஸ்டிங் போடபட்டது. லடாக் இந்திய பாகிஸ்தான் எல்லை கோடு அருகில் உள்ள மாவட்டம். அதனால் அங்கே அடிக்கடி தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கும்.

அங்கே தினமும் ஷிபிட் முறையில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். ராணுவ வீரர்களை குழுக்களாக பிரித்து , அவர்களை கட்டுபடுத்துவது , தீவிரவாதி ஊடுருவல் தடுப்பது, பாகிஸ்தான் ராணுவ தாக்குதல் நடந்தால் அதை சமாளிப்பது இவை எல்லாம் அர்ஜுன், ராகுல் இருவரோடு சேர்ந்து இன்னும் ஐந்து கர்னலின் வேலைகள்.

அங்கே சென்று duty ஜாயின் செய்த பிறகு ராகுல், அர்ஜுன் இருவரும் அங்கே உள்ள ஆபீஸ் நம்பர் ஐ தங்கள் குடும்பத்துக்கு அனுப்பியவர்கள், தங்கள் செல் நம்பர் ஆபீஸ்இல் surrendar செய்து, வேறு சிம் வாங்கி கொண்டார்கள். அந்த சிம் telecommunication departmet ஆல் கண்காணிக்கப்படும்.

அந்த நம்பர் உம வீட்டிற்கு கொடுத்தவர்கள், தங்கள் நாயகிகளுக்கும் கொடுத்தார்கள். இது monitor செய்யப்படும் என்றே கூறி, முக்கியமான தகவல் மட்டும் இதில் பரிமாறிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்கள்.

ராகுல் , நிஷா இருவரும் பெரிய அளவில் பேசிக் கொள்ளவில்லை என்றாலும், தினமும் எதாவது ஜோக்ஸ், சிந்தனை செய்திகள் அனுப்பி விடுவார்கள். எந்த விதமான போட்டோவும் அனுப்புவதில்லை.

அர்ஜுன் சுபத்ராவிடம் நம்பர் கொடுத்தாலும் தினமும் sms எல்லாம் அனுப்புவதில்லை. இருவருமே அடுத்தவர்களின் பெயர்களை மட்டும் பார்த்துக் கொள்வார்கள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

இதனிடையே சுபத்ரா நிஷா இருவருக்கும் போஸ்டிங் ஆர்டர் வந்தது. ஆனால் இருவரும் வேறு வேறு இடத்திற்கு சென்றார்கள்.

சுபத்ரா ட்ரைனிங் போது நன்றாக செய்திருந்த cryptology மார்க் வைத்து, அவளுக்கு மேலும் ட்ரைனிங் கொடுப்பதற்காக டெல்லியில் உள்ள Joint Cipher Buerau வில் trainee யாக போஸ்டிங் போட்டார்கள்.

நிஷாவோ management சம்பந்தப்பட்ட papers நல்ல மார்க் எடுத்ததால் அவளுக்கு கான்டீன் ஸ்டோர்ஸ் department இல் trainee போஸ்டிங் கொடுக்கப்பட்டு மும்பை சென்றாள்.

இருவரும் dutyஇல் சேரும் முன்னால் இருவர் குடும்பமும் மீண்டும் சென்னையில் சந்தித்தார்கள்.

மகிமா , வருண், இருவரும் மிதுனின் டிரஸ்ட்க்கு வாரம் தோறும் சென்று விடுவார்கள். சுபா லீவ் முடியும் வரை மகிமாவோடு சென்றாள். அதனால் அவள் மூலம் நிஷா போஸ்டிங் மற்றும் அவள் சென்னை வருவது அறிந்து எல்லோரும் மீட் செய்தனர்.

இந்த முறை மிதுன் மற்றும் வர்ஷா இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக சுபத்ரா, மகிமா வீட்டோடு பழக ஆரம்பித்து இருந்தனர்.

சில முறை டிரஸ்ட் வேலைகள் முடித்து வர நேரம் ஆகும்போது மகி, வருண் ஐ ட்ராப் செய்ய வரும் போது அவர்கள் வீட்டிற்கு சென்று வந்தனர்.

நிஷா வந்ததை அறிந்து எல்லோரும் சுபத்ரா வீட்டில் டேரா போட்டனர். பிறகு வீட்டில் சொல்லிவிட்டு வெளியே சென்றனர்.

நன்றாக மாலில் சுற்றிவிட்டு, கடைசியாக பீச் சென்றனர். இந்த முறை மொத்த செலவும் மிதுன் செய்தான். ஆனால் சுபத்ராவிற்கு அன்றைக்கு அர்ஜுனோடு வந்த நினைவே வந்தது.

தினமும் அர்ஜுனை நினைத்தாள் என்று சொல்ல முடியா விட்டாலும் அப்போ அப்போ அவன் நினைவு வந்துதான் சென்றது சுபத்ரவிற்கு. அதுவும் முக்கியமாக மோகன் படம் டிவி யில் பார்த்தால் அவனை கலாய்த்தது கண்டிப்பாக நினைவு வரும் அவளுக்கு.

அன்றைக்கு பிறகு இன்றுதான் மீண்டும் பீச் வருவதால், சற்று அதிகமாகவே எண்ணங்கள் அவனை சுற்றி சென்றது. அன்றைக்கு ராகுல், நிஷாவிற்கு தனிமை கொடுத்து, இருவரும் தனியாக சுற்றியதும் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்ததும் , பலூன் கடைக்காரன் இவள் எல்லா பலூனை ஷூட் செய்து அவன் இவளை திட்டியதும் அர்ஜுன் அவனிடம் சமாதனாமாக பேசி இவளை அழைத்து வந்ததும் கடைசியில் பஞ்சு மிட்டாய் வாங்கி கொடுத்ததும் அவள் கண்களில் தோன்றியது.

றுநாள் ட்ரெயினில் முதலில் நிஷா கிளம்ப, பிறகு சுபத்ரா கிளம்பினாள். இன்றைக்கும் இவர்களை வழி அனுப்ப என்று மொத்த குடும்பமும் வந்தார்கள். வழக்கமாக வருண், மகிமா மட்டுமே வருவார்கள். இந்த முறை மிதுன், வர்ஷாவும் வேறு .

நிஷாவை முதலில் அனுப்பி விட்டு, சுபத்ரா வரும் ட்ரைன் ஒரு மணி நேரம் கழித்து வருவதால் எல்லோரும் அங்கே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது பெரியவர்கள் எல்லோரும் ஒரு பக்கம் அமர்ந்து இருக்க, இளையவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இருந்தார்கள்.

சினிமாவில் ஆரம்பித்து whats up வைரல் வரை எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தனர்.

அப்போது மிதுன் “சுபா ஒரு வருடத்திற்கு முன் இதே ஸ்டேஷனில் உங்கள் மூவரின் கலாட்டக்களையும் ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தேன். இப்போது உங்களோடு நானும் ஐக்கியாமாகி விட்டேன்” என,

வருண், சுபா இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, நிஷாவோ “அட.. உங்களுக்கு எங்களை முன்னாடியே தெரியுமா?” என்று வினவினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.