(Reading time: 14 - 28 minutes)

தோ ஒரு flow வில் ஆரம்பித்த மிதுன் மற்றவர்கள் இருக்கும் நினைவு இல்லாமல்

“ஹேய்.. முன்னாடி என்றால் ரொம்பவே முன்னாடியே உங்களை எனக்கு தெரியும்..” என்றான்.

“எப்போது இருந்து?”

“நீ பிளஸ் டூ முடித்த வருடத்தில் இருந்து..”

“நீங்க இன்ஜினியரிங் தானே..? எங்களை பள்ளி படிக்கும் போது இருந்து எப்படி தெரியும்?”

“ஹ்ம்ம்.. நானும் NCC ஸ்டுடென்ட் மா.. அதுவும் award வின்னிங் ஸ்டுடென்ட் ...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

“ஒ.. அப்படி என்றால் எங்களை எதாவது கேம்பில் பார்த்து இருப்பீர்கள்?”

“எதாவது இல்லை.. திருநெல்வேலி அருகே கேம்ப் போட்டு இருந்தார்கள் அல்லவா? அங்கே தான் பார்த்தேன்.”

“அப்போ போன வருஷம் ஸ்டேஷனில் பார்த்தவுடனே உங்களுக்கு அடையாளம் தெரிந்ததா?”

“ஸ்டேஷனில் அல்ல.. அதற்கு முன்னே மாயாஜாலில் வைத்து உன்னை அடையாளம் கண்டு கொண்டேன். கபாலி ரிலீஸ் அன்று என்ன ஆட்டம் போட்டாய்..?” என்று வினவ, நிஷா நெளிந்தாள்.

இதுவரை மற்ற எந்த நினைவும் இல்லாமல் நிஷா, மிதுன் மட்டுமே பேசிக் கொண்டு இருக்க, இப்போது வருண் இடை நுழைந்தான்.

“அப்போ ..எங்களை follow பண்ணினீங்களா?” என்று ஒரு மாதிரி குரலில் வினவ, சட்டென்று சுதாரித்த மிதுன்

“ ஹேய்.. அப்படி எல்லாம் இல்லை.. உங்கள் குரூப்பை NCC கேம்ப் போதே மிகவும் பிடித்தது.. அதனால் தியேட்டரில் பார்த்ததும் சட்டேன்று அடையாளம் தெரிந்தது. அங்கே உங்கள் காலேஜ் பூரா இருந்தீர்கள் அதானால் உங்களிடம் இன்ட்ரோ ஆக முடியவில்லை. இந்த சமயம் மீண்டும் ஸ்டேஷனில் வைத்து பார்த்தேன்.. அப்போது நான் என் அப்பாவை வழி அனுப்ப வந்ததால் உங்களோடு பேச முடியவில்லை. பிறகுதான் dehradoon இல் வைத்து சந்திதோம்..” என்று கூறி முடித்தான்.

இந்த நேரத்தில் சரியாக சுபத்ரா செல்ல வேண்டிய ரயில் வர, இப்போது எல்லோரும் அவளை வழி அனுப்பினார்கள்.

பிறகு வரும் போது போல் இப்போது பெரியவர்கள் ஒரு காரிலும், சின்னவர்கள் ஒரு காரிலும் ஏறிக் கொண்டனர், முதலில் வர்ஷவை வீட்டில் கொண்டு விட்டனர். நேரம் ஆகி விட்ட படியால் அவர்கள் apartment வாசலில் வர்ஷவை விட்டு வரும்படி வருணிடம் சொன்னான் மிதுன்.

வருண் குஷியாக கிளம்பி போக , வர்ஷா முதலில் நடந்து கொண்டிருந்தவள், பின்னால் வந்து கொண்டு இருந்த வருணை பார்த்து

“ஹலோ.. உங்க பிரென்ட் மகிமாவ எங்க அண்ணன் என்ன செய்துடுவாங்க..? உங்க ஆட்டம் பார்த்து ரசிச்சேன்னு சொன்ன தப்பா..? எதுக்கு முறைக்குறீங்க..? நீங்க மட்டும் என்னை பார்த்து கடலை வறுக்கலாம்.. அதே எங்க அண்ணன் பண்ணினா தப்பா?” என்று கேட்டு விட்டு வேகமாக வீட்டிற்குள் சென்று விட்டாள்.

சற்று நேரம் வருண் ஒன்றும் புரியாமல் முழிக்க , பிறகே புரிந்து ஹூர்ரே என்று கத்திக் கொண்டு சென்றான்.

இங்கே வருண் , வர்ஷா சென்ற கேப்பில் , மிதுன்

“மகி.. நான் பேசினத நீ தப்ப எடுத்துகிட்டியா?”

அவள் மௌனமாக இல்லை என்று தலை ஆட்டவும்,

“அப்போ இப்போ சொல்றதையும் தப்பா எடுத்துக்காம சரியா புரிஞ்சிக்கோ “ என்று கேப் விட, மகி என்ன என்பது போல் ஏறிட்டு பார்த்தாள்.

“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு.. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன்..” என,

இப்போது முற்றிலுமாய் திகைத்து நிமிர்ந்தாள் மகி..

அவளின் திகைப்பை பார்த்து “ இதற்கு நீ உடனே பதில் சொல்லனும்னு இல்லை.. கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக உனக்காக காத்து இருக்கிறேன். இன்னும் சில வருடங்கள் கூட காத்து இருக்க முடியும்.. ஆனால் என்னோட வாழ்க்கை உன்னோடு தான்.. அது மட்டும் உறுதி..” என்று முடித்தான்.

அந்த சமயம் வருண் வர , மிதுன் ஒன்றும் அறியாதவன் போல் திரும்பி அமர்ந்து விட்டான். வருண் காரில் அமரந்து திகைத்து முழித்த மகியை பார்த்து

“ஹேய்.. கீமா.. ? என்ன ஆச்சு..? ஏன் இப்படி யாரோ உன்னோட பரோட்டாவ எடுத்துட்டு போன மாதிரி முழிக்கிற?” என்று வினவ,

அவன் குரலில் சுயநினைவிற்கு வந்த மகி , “ஹேய்.. சோடாபுட்டி... ஒழுங்கா முன்னாடி உட்கார்ந்து cleaner வேலை பாரு.. அத விட்டுட்டு என்னை கலாயிச்ச , உன்ன இறக்கி விட்டு வண்டிய தள்ள விட்ருவேன் பார்த்துக்கோ? என்ன டிரைவர் அப்படிதானே?” என்று வேறு மிதுனிடம் வினவினாள்.

“நீ சொன்னா சரிதான் தாயே..?” என்று மிதுனும் அவள் பக்கம் பேச,

“அடிப்பாவி.. நீ செஞ்சாலும் செய்வ..? நான் வேற இப்போதான் செம கட்டு கட்டிட்டு வந்து இருக்கேன்.. நான் முன்னாடி உட்கார்ந்து தூங்கறேன்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.