(Reading time: 14 - 28 minutes)

cleaner சார்.. உங்கள முன்னாடி, பின்னாடி வண்டி வருதான்னு பார்க்க சொன்னேன்.. தூங்க சொல்லல..”

“எல்லாம் நேரம்..”

அவர்களின் இயல்பான பேச்சுக்களை கவனித்து வண்டி ஒட்டிக் கொண்டு இருந்த மிதுன், இவர்களின் நட்பை புரிந்து கொள்பவர்கள் தான் இவர்களுக்கு வாழ்க்கை துணையாக வர வேண்டும் கடவுளே.. என்று வேண்டிக் கொண்டான்.

முதலில் மகிமாவை இறக்கி விட்டு விட்டு , வருண் வீட்டிற்கு அழைத்து போக, வருண்

“மிதுன் .. நீங்க மகிய லவ் பண்றீங்களா?” என்று கேட்க, சட்டென்று பிரேக் போட்டு நிறுத்தியவன் , வருணை பார்த்து

“உனக்கு எப்படி தெரியும்.?” என்று கேட்டான்.

“இன்னிக்குதான் தோணிச்சு.. நீங்க சுறா வோட ட்ரைனிங் கேம்ப் லே மீட் பண்றதுக்கு முன்னாடியே எங்களை தெரியும் நு சொன்னதும் guess பண்ணினேன்..”

“ஹ்ம்ம்.. ஆமாம்.. வருண்.. ஐ லவ் மகி வெரி மச்.. “

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“அவ கிட்ட சொல்ல்லிட்டீங்களா?”

“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சொன்னேன்..”

“சோ. அதுதான் காஞ்சனா பேய் அடிச்சா மாதிரி உட்கார்ந்து இருந்தாளா?”

“ரொம்ப வாரதடா.. “

“அது சரி.. நீங்க உங்க ஆளுக்குதான் சப்போர்ட் பண்ணுவீங்க மச்சான்..”

“மச்சான்..ஆ “ என்று மிதுன் வினவ,

கண்ணடித்து “ மகி யோட would be  எனக்கு மச்சான் தான்..”

“தேங்க்ஸ் டா.. வருண்.. மகிய கூட சமாளிச்சுரலம்ன்னு தோணிச்சு.. உன்னை நினைசுதாண்டா பயந்தோம்..”

“பயந்தோம்னா வேற யாரு பயந்தாங்க...”

“என் friends தான்.. நான் மகி பத்தி சொன்னவுடனே அவங்களும் நீ என்ன சொல்லுவியோன்னு தான் யோசிச்சாங்க..” என்று சமாளித்தான்.. அதற்குள் வருண் வீடு வர இறங்கி கொண்ட வருண்

“மச்சான்.. இதே போலே நீங்களும் எனக்கு ஹெல்ப் பண்ண வேண்டி வரும்.. அன்னிக்கு இதை நியாபகம் வச்சுக்கோங்க..” என்று கூறிவிட்டு சென்று விட்டான்.

இவன் என்ன சொல்கிறான் என்று யோசித்தவன் , ஒருவேளை அவன் காதலிக்கும் போது நாம ஹெல்ப் பண்ணனும் நினைக்கிறான் போல இருக்கு.. அதுக்கென்ன பண்ணிட்டா போச்சு .. என்று எண்ணியவன், வருணை தன் நினைவுகளில் இருந்து துரத்தி விட்டு, தன் டார்லிங் மகியை பற்றி எண்ணினான்.

கியும் அன்று இரவு மிதுனின் propose பற்றியே எண்ணிக் கொண்டு இருந்தாள். ஏதோ ஒரு பாதிப்பு அவனால் தன்னிடம் இருக்கிறது என்றுதான் தோன்றியது.. கிட்ட தட்ட நான்கு ஐந்து வருடங்களாக தன்னை நினைவு வைத்து இருக்கிறான் , அதுவும் ஒருமுறை நேருக்கு நேர் நின்று பேசக் கூட இல்லாத நிலையிலும் என்பது அவளுக்கு ஒரு மாதிரி மகிழ்ச்சியாகவும் அதே சமயம் பெருமையாகவும் இருந்தது.

அவனின் இயல்பான பேச்சுகளில் தன்னை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் அவனிடம் இருக்கிறது என்றும் தோன்றியது. அவனோடான வாழ்க்கை என்பது நிச்சயம் சந்தோஷத்தை தரும் என்ற நம்பிக்கை தோன்றியது.

அவன் தன் பதிலுக்கு அவசரபடமால் காத்து இருக்கிறேன் என்றது அதை விட பிடித்தது. அவனிடம் இப்போது பேசலாமா என்று எண்ணியவள், பிறகு அடுத்த வாரம் நேரில் செல்லும்போது அவனிடம் பதில் சொல்லி அவன் reaction பார்க்கலாம் என்று விட்டு விட்டாள்.

ன்றைக்கு சுறா தனியாக travel செய்து கொண்டு இருந்தாள். இத்தனை நாட்கள் அவள் நண்பர்களோ, பெற்றோர்களோ துணை இல்லாமல் எங்கும் சென்றது இல்லை. சென்ற முறை ஆர்மி ட்ரைனிங் போது கூட அவள் அப்பா, அம்மா வந்துதான் விட்டு சென்றனர். அதே போல் திரும்பி வரும்போது நிஷா மட்டும் இல்லாமல், அர்ஜுன் , ராகுல் இருவரும் வேறு அவளோடு பயணித்தனர். அதனால் தனிமை உணர்வு தோன்றவில்லை.

ஆனால் இப்போது அந்த தனிமை உணர்வு தோன்றியது. இப்போதும் அவள் அப்பா வருகிறேன் என்று தான் சொன்னார்.. ஆனால் அவளுக்கே சற்று யோசனையாக இருந்தது. தான் மற்றவர்கள் மாதிரி சாதாரண வேலை பார்க்க வில்லை. ஆர்மியில் சேருகிறேன் என்னும் போது இயல்பான தைரியம் இருக்க வேண்டும். தொட்டது தொன்னூருக்கும் வீட்டில் உள்ளவர்களை எதிர் பார்த்தால் நம்மால் எப்படி வேலை செய்ய முடியும் என்று எண்ணியே யாரையும் வர வேண்டாம் என்று விட்டாள்.

ரயில் ஏறிய கொஞ்ச நேரம் அவளுக்கு தன் பெற்றோர் நினைவு இருந்தது. பிறகு கொஞ்ச நேரத்தில் அன்றைய நாள் சென்றவிதம் யோசித்ததில் மிதுனின் பேச்சுக்கள் பற்றி யோசித்தாள். மிதுன் பற்றிய எண்ணம் தோன்றியவுடன் அப்படியே அன்றைய பீச் கலாட்டக்கள் நினைவு வர அங்கிருந்து அப்படியே அர்ஜுனை நோக்கி அவள் எண்ணம் திரும்பியது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.