(Reading time: 17 - 33 minutes)

"ப்போ ஜெசிகா தெரிஞ்சிகிட்டா. நாளைக்கு போலீஸ் தெரிஞ்சிக்கும். இன்னும் என்னலாம் நடக்கப் போகுதோ"

"உங்க கற்பனையா மூட்டை கட்டி வைங்க. ஜெசிகா நமக்கு உதவி தான் செய்வா"

"ஹே! அவ தான அந்த பொண்ணு" என்றபடி அமேலியாவை நோக்கி நடந்தாள் ஜெசிகா. அமேலியா பயந்து அறைக்குள் பதுங்கிக்கொண்டாள்.

அறைக்குள் நுழைந்த ஜெசிகா, நடுங்கிக்கொண்டிருந்த அமேலியாவைப் பார்த்து, "நீ எப்படி அமெரிக்காவுக்குள்ள வந்த? அதுவும் பலத்த பாதுகாப்பையும் மீறி.சின்ன பொண்ணா வேற இருக்க" என்று ஆச்சர்யத்தோடு வினவினாள்.

அமேலியாவின் விழிகள் மிரட்சியை கக்கின. அவளின் கையைப் பிடித்து அழைத்து வந்த ஜெசிகா, "வசந்த், இவ என்ன பேசவே மாட்றா. ஊமையா? இல்ல இவளுக்கு காது கேக்காதா? "

"இரண்டுமே கிடையாது. நல்லா பேசுவா. ஆனா நமக்கு தான் புரியாது"

"ஏன்?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

"அவ பேசுற மொழி யாருக்கும் புரியல"

"அப்படி என்ன மொழி பேசுறா?"

"உருது இல்ல அரேபிக்கா இருக்கும்"

ஜெசிகா அமேலியாவை நோக்கினாள். மேகலாவின் பின்னால் மறைத்தபடி ஜெஸிகாவையே பார்த்துக்கொண்டிருந்தாள் அமேலியா.

"ரொம்ப அழகா இருக்கா. இவ மட்டும் மாடலா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்" என்றாள் ஜெசிகா.

"புத்தி எங்கே போகுது பாரு" என்று நாராயணன் தனக்குள்ளாகவே முணுமுணுத்துக்கொண்டார்.

"அவ அழகை ரசிக்கவா இங்கே வந்த?" வெறுப்போடு கேட்டான் வசந்த்.

"ஆமா, இவ பெயர் என்ன?"

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"என்ன பேசாம இருக்கீங்க?" என்றாள் ஜெசிகா.

"நாம எவ்வளவு பெரிய முட்டாளா இருந்திருக்கோம். இவ பேரு கூட தெரியாம வீட்டுல தங்க வச்சிருக்கோம்.. அக்கா, அவ பேரு என்னன்னு உங்கிட்ட சொன்னாளா?"

'இல்லை' என்பது போல் தலையசைத்தாள் மேகலா.

அமேலியாவின் அருகில் வந்த ஜெசிகா, "உன் பெயர் என்ன?" என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.

அமேலியாவிற்கு புரியவில்லை. மீண்டும் கைகளை ஆட்டி  சைகை மொழியில் பேசியும் தோல்வியே தழுவினாள் ஜெசிகா.

"இவ பேரை கண்டுபிடிக்கிறது செவ்வாய் கிரகத்துல தண்ணி இருக்கான்னு கண்டுபிடிக்குறது விட பெரிய வேலையா இருக்கும் போலயே"

"அவ பேரு என்னவா இருந்தா நமக்கென்னடா. நாமளே அவளுக்கு ஒரு பேரு வைப்போம்"

"அறிவு மாதிரி பேசாத அக்கா. புது பேர் வைக்கிறது பெருசு இல்லை. அந்த பேர் சொல்லி நம்மள தான் கூப்பிடுறாங்களான்னு அவளுக்கு புரியணும்"

"இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா" என வாய் பிளந்தாள் மேகலா.

"அப்பா, நீங்க தான் ஜோசியம் பாப்பீங்களே. அதுல பார்த்து இவ பேரு என்னனு கண்டுபிடிச்சு சொல்ல முடியுமா?"

மேகலாவை முறைத்தார் நாராயணன். "என்னைப் பார்த்தா உனக்கென்ன மோடி மஸ்தான் வித்தை காட்டுறவன் போல தெரியுதா பேரு என்ன ஊரு என்னனு கண்டுபிடிக்குறதுக்கு? ஜோதிடத்துல எதிர்காலம் மட்டும் தான் பார்க்க முடியும். அதுக்கு கூட பிறந்த தேதி, நேரம் வேணும். அது மட்டும் இல்லாம ஒவ்வொரு இனத்துக்கு தகுந்தாற் போல ஜோதிடமும் மாற்றமடையும். கால தேச வர்த்தமானம் ஜாதி மத நிற பேதம் யுக்தி சுருதி அனுபவம் கண்டு பலனை சொல்லணும்" என்று நீளமாக கூறி முடித்தார் நாராயணன்.

"அக்கா பேரை நான் கண்டுபிடிக்குறேன்" என்றாள் நிலா.

"எப்படி செல்லம்?" என்று கேட்டாள் மேகலா.

"இரும்மா வரேன்" என்று கூறி உள்ளே சென்ற நிலா, ஒரு புத்தகத்தோடு வெளியே வந்து அமேலியாவின் கை பிடித்து இழுத்து தரையில் அமர்த்தி அவளோடு தானும் அமர்ந்தாள். அவள் கொண்டு வந்த புத்தகத்தைப் புரட்டினாள். ஏகப்பட்ட விலங்குகளின் படம் அதிலிருந்தது..

முதலில் பூனையின்  படத்தைக் காட்டினாள். "இது பேரு பூனை, இங்கிலீஷில cat  னு சொல்லுவாங்க"  என்றபடி அடுத்த பக்கத்தை புரட்டினாள் நிலா.

நாயின் படமிருந்தது. "இது பேரு dog,  தமிழ்ல நாய்னு சொல்லுவோம்"

அமேலியா தன்னை அறியாமலேயே உருதுவில், அந்த விலங்குகளின் பெயர்களை சொன்னாள்.

"வாவ்! அக்கா புரிஞ்சிக்கிட்டாங்க"

 அடுத்த பக்கத்தில் கழுதையின் படமிருந்தது. அது என்னவென்று சைகையால் கேட்டாள் நிலா. அதையும் உருதுவில் கூறினாள் அமேலியா.

"இது கழுதை. இங்கிலீஷ்ல donkey னு சொல்லுவாங்க. என்னை திட்டுறதுனாலும் கொஞ்சுறதுனாலும் என் அம்மா என்னை கழுதை னு தான் செல்லமா கூப்பிடுவாங்க" என்று சிரித்தாள் நிலா.

பிறகு, தன் நெஞ்சில் கை வைத்து, "நான் யாரு?" என்று சைகையில் கேட்டாள் நிலா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.