(Reading time: 12 - 23 minutes)

துக்குடி மறுபடியும் சிரிக்குற?...”

“இல்ல… உண்மையை நினைச்சேன்.. சிரிச்சேன்….”

“என்ன உண்மையை அப்படி நினைச்ச?...”

“சாருக்கு இப்படி எல்லாம் கூட ஆசை இருக்குதேன்னு உண்மையை நினைச்சேன்… சிரிப்பு வந்துட்டு…”

“ஓ… வரும்… வரும்…”

“ஹ்ம்ம்… ஆசையை நிறைவேத்துறேன் பேர்வழின்னு எந்த பொண்ணுகிட்டயும் போய் அடிவாங்கிடாதீங்க… பார்த்துக்கோங்க…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "நின்னை சரணடைந்தேன்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“இதோடா… நான் ஏன் அடி வாங்கணும்… அப்படியே எனக்கு வாசம் பிடிக்கணும்னு தோணினாலும் நான் ஏன் வேற ஏதோ ஒரு பொண்ணை தேடி போகணும்… அதான் என் சகி நீ இருக்குறீயே… அப்புறம் என்ன கவலை எனக்கு?...”

அவன் விளையாட்டாக சொன்னானோ, கேலியாக சொன்னானோ, அத்தருணமே அவள் மனதில் மொட்டாக இருந்த காதல் மலரென விரிந்து வாசம் பரப்பி அவளை கிறங்கடித்தது வேகமாய்…

“என்ன பதிலையேக் காணோம்.... எஸ்கேப் ஆகிடலாம்னு பார்க்குறீயா?... என்னைக்காவது ஒருநாள் நான் அப்படி செய்யத்தான் போறேன்… அப்போ என்ன செய்யுறேன்னு பார்க்கலாம்…”

“ஹ்ம்ம்… ஆசை தோசை….” என அவளின் உதடுகள் உரைத்தாலும், உள் மனமோ அதற்காக நானும் காத்திருக்கிறேனடா கண்ணா… என்றது நாணத்துடன்….

என்றோ ஒருநாள் பேசி பழகிய உரையாடல் இன்று அவளின் நினைவுக்கு வர, மொத்தமாய் செயலிழந்து போனாள் அவள்….

மல்லிகையை கையில் எடுத்தவள், தன் கண்ணீரால் அதனுடன் மானசீகமாக உரையாட,

இதழ்களோ, “மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ…..” என சொல்லி சிரித்தது மெல்ல…

பின் சற்று நேரத்திலேயே, மல்லிகையை தன் தலையில் சூடிக்கொண்டவள், கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய செயினுடன் கிளம்பி கட்டிலில் அமர்ந்தாள்…..

விரல்களைப் பிரித்து இணைத்து விளையாடிவள், பின் தன் செல்போனை எடுத்து, அதில் என்றோ அவனும் அவளும் உரையாடுகையில் அவனுக்குத் தெரியாமல் பதிந்து வைத்திருந்த ரெக்கார்டிங்கை எடுத்து ஒலிக்க விட்டு இயர் போனை காதுகளில் மாட்டிக்கொண்டாள்….

அவன் புகைப்படத்தையும் தேடி எடுத்து அதில் பார்வையை நிலைக்க விட்டவளின் செவிகளைத்தாண்டி அவன் குரல் அவள் மனதினுள் நுழைய, அவள் அருந்திய தண்ணீரும் அவளின் இதயத்தை வந்தடைந்தது விரைவாக….

உரையாடல் முடிந்த தருணம், இதழ்களில் வந்து ஒட்டிக்கொண்ட புன்னகையுடன் போனை கீழே வைத்தபோது, அவளது அம்மா வந்தார் அவளைத் தேடி….

“அவங்க வந்துட்டாங்கம்மா… வா….”

என மகளை அழைத்தவர், அவளின் அலங்காரத்தைப் பார்த்துவிட்டு,

“ஏன்ம்மா நகை எதுவும் போடாம இருக்குற?... வேற புடவை கட்டியிருக்கலாம்ல…” என்று ஆதங்கப்பட,

“இல்லம்மா.. இந்த புடவையே நல்லாதான் இருக்கு…” என தன் புடவையை ஒருமுறைப் பார்த்துக்கொண்டாள் அவள்….

“உங்களுக்கு எந்த கலர் பிடிக்கும்?...”

“ஹ்ம்ம்… பிடிச்ச கலர்ன்னு எதுவுமில்லை… எல்லா கலரும் பிடிக்கும்….”

“எதாவது ஒன்னு கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்களேன்…”

“எதுக்கு கேட்குற?...”

“சும்மாதான்ப்பா… சொல்லுங்க…. ப்ளீஸ்…”

“ம்ம்… ப்ளூ கலர்…..”

“ஓகே கார்த்தி…. தேங்க்ஸ்….”

“ஹேய்… எதுக்கு தேங்க்ஸ்…?..”

“சும்மாதான்…” என்றவள் “நான் அப்புறம் பேசுறேன்.. ஒரு சின்ன வேலை இருக்கு… சரியா?...” என கேட்டுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டு, அவன் சொன்ன கலரில் தேடி தேடி பார்த்து பார்த்து வாங்கினாள் ஒரு புடவையை….

அதை அவளும், ஒருநாள் அணிந்து அவனைப் பார்க்க செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தாள்… அதற்கு அவன் இடமே கொடுக்கவில்லை… அவர்கள் சந்தித்துக்கொண்டது இருமுறை தான்…. முதல் தடவை சரயூவின் நிச்சயதார்த்ததில்… அடுத்த சந்திப்பு அவர்கள் பேசி பழகிய ஆரம்பத்தில் எதேச்சையாக நிகழ்ந்தது ஓர் தருணத்தில்… அன்றும் பேருந்து நிலையத்திலேயே சந்திக்கும் படி நேர, ஓரிரு உபசரிப்புகளோடு கிளம்பினர் இருவரும், திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.