(Reading time: 27 - 54 minutes)

09. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்

PEMP 

ஹிந்தன் தன் காரைவிட்டு இறங்கி வீட்டினுள் நுழையும் போதே வீட்டில் நிறைய ஆட்கள் இருப்பதை கவனித்தான் .அவன் உள்lளே நுளைந்தவுடன், மஹிந்தனின் அம்மா, சுபத்திரா வா! மஹிந் ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து கல்யாணத்திற்கு பத்திரிக்கையடிக்கவும் மற்ற கல்யாண ஏற்பாட்டை பற்றியும் பேச வந்திருக்கிறார்கள்

உனக்கு போன் பேசி சீக்கிரம் வரச்சொல்லலாம் என்று பார்த்தால் உன் போன் ஸ்விட்ச்ஆப் இல் இருந்தது எதுவும் முக்கியமான மீட்டிங்கில் இருந்தாயா? என்று கேட்டாள்.

அவனுக்கு வீட்டிற்கு வரும்முன் கவிழையாவுடன் காரில் வந்த மனநிலை வீட்டின் சூழலில் மலையேறுவது போல் தெரியவும் அவன் அம்மாவிற்கு “ஆம்” என்ற பதிலைக் கூறியவன், எல்லோரையும் பார்த்து பொதுவாக ஹாய் சொல்லிவிட்டு .ஐ யாம் சாரி, நான் கொஞ்சம் ரெப்ரஸ் ஆகிவிட்டு ஒரு அரைமணிநேரம் கழித்து வந்துவிடுகிறேன். அதுவரை மாம், டாடியிடம் மற்ற விசயங்களை பேசிக்கொண்டு இருங்கள் என்று கூறியவன் தன் ரூம்மிற்குச் சென்றான்.

தன் அறைக்குள் வந்தவன், உடைகூட மாற்றாமல் தனது பெட்டில் படுத்துக்கொண்டான். .அவனுக்குத் தெரியும் எப்படியும் மீடியாவில் இவர்களின் கல்யாண ஏற்பாடுகளை மோப்பம்பிடித்து கடை பரப்புவார்கள் என்று.

அவ்வாறு அவர்கள் செய்வதற்குள் கவிழையாவை தான் மற்றவர்களின் கவனத்தில் இருந்து மறைத்து முழுவதும் தன் பொறுப்பில் தன் கண் பார்வையில் அவளை கொண்டு வரவேண்டும் என்று முடிவெடுத்தான் .

உடனே கதிரைத் தொடர்புகொண்டு அன்று இரவு பத்துமணிக்கு மேல் தாங்கள் சந்திக்கும் ரெசார்ட்டுக்கு வரச்சொல்லி மெசேஜ் அனுப்பினான்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "நின்னை சரணடைந்தேன்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

பின் சலிப்புடன் கீழேபோவதற்கு தயாராக ஆரம்பித்தான். அதற்க்குள் அவன் அறைக்கதவு தட்டப்படும் ஓசைகேட்டு யார்? என்று கேள்வியுடன் கதவைத்திறந்தவன் , அங்கே ஐஸ்வர்யா நின்றுகொண்டு இருந்தாள்

கதவை முழுவதும் திறக்காமல் வாசலை மறைத்ததுபோல் நின்று கொண்டு, இப்போ எதற்கு என் ரூம்மிர்க்கு வந்தாய்? என்று சிடுசிடுத்தான்.

உங்கள் அம்மாதான் என்னை போய் உங்களுடன் பேசிக்கொண்டு இருக்கச் சொன்னார்கள் என்றவள், அவனைத் தொட்டு வழியைவிட்டு அகற்ற எண்ணி தன் கையை கொண்டுசெல்லவும் அவள் கை தன் மீது படுவதை விரும்பாத மஹிந்தன், அன்னிச்சை செயல்போல் பின்னால் நகர்ந்தான்

அப்பொழுது கிடைத்த இடைவெளியில் அவன் அறைக்குள் நுழைந்தாள் ஐஸ்வர்யா. அவளுக்கு மஹிந்தனின் வீட்டைப்பார்த்து எப்பொழுதும் ஓர் பிரமிப்பு இருக்கும், இதற்குமுன் சம்மந்தவழி உறவு என்ற முறையில் விசேஷத்தில் கலந்துகொள்ள வரும்போது அவ்வீட்டின் பிரமாண்டத்தையும் அழகையும் செல்வச்செழிப்பையும் கண்டு பொறாமையாக இருக்கும் ஆனால் மதுரா நெருங்கிய சொந்தங்களையும் வீட்டின் கீழ்த்தளத்தில் மட்டுமே இருக்கும் படி பார்த்துக்கொள்வாள் . இதுவரை அவள் மேல் தளத்தில் உள்ள மஹிந்தனின் ரூம் அருகில் கூட வந்ததில்லை

மஹிந்தனின் அறையின் அழகையும், அளவையும் செல்வச் செளிப்பையும் பறைசாற்றும் விதத்தில் இருந்த பொருட்களும், அவை வைக்கப்பட்டிருந்த நேர்த்தியும் சுத்தமும் பார்த்தவள் பிரமித்தாள் . இனி அந்த அறை தனக்குச்சொந்தம் என்ற மனப்பான்மை அவளுக்கு வந்தது.

அவள் அங்கு இருந்த படுக்கையை நோக்க்கிச் சென்றவள் கட்டிலில் போய் தொப்பென விழுந்து புரண்டு படுத்தவள் தன் மொபைலில் அக்கட்டிலில் படுத்தபடி செல்பீ எடுத்துக்கொண்டாள்.

அவள் உடுத்திருந்த டாப் கழுத்தின் இரக்கம் அபாயகரமாக இருந்தது புரண்டு படுத்ததாளல் தொப்புளின் மேல் டாப் சுருண்டு இருந்தது . அவள் அங்கங்கள் பளிச்சிட தன் கட்டிலில் படுத்திருப்பதை பார்க்க முடியாமல் வேறுபுறம் பார்த்தபடி என்னுடைய கட்டிலில் மற்றவர்கள் அமர்வதைகூட நான் விரும்ப மாட்டேன் நீ எப்படி என் கட்டிலில் படுக்கலாம் முதலில் இங்கிருந்து வெளியில் போ. நான் கதவை பூட்டிவிட்டு கீழே போக கிளம்பனும் என்று முகத்தை கடுமையாக்கிக் கொண்டு வார்த்தைகளை கொட்டினான்.

அதற்கெல்லாம் அசைபவளாக இல்லை ஐஸ்வர்யா. என்ன மஹி, இனி மேல் இது நம்முடைய ரூம் ஆகப்போகுது. இது நம் பெட் ஆகப்போகுது . சோ! நீங்கபாட்டுக்கு கிளம்புங்கள் நான் பாட்டுக்க படுத்து சிறிது ரெஸ்ட் எடுத்துக்கொள்கிறேன் என்று கொஞ்சி பேசினாள் .

கடுப்புடன் தன் அம்மாவை போனில் அழைத்தான் .தன் மகன் போனில் தன்னை அழைத்ததுமே சுபத்ராவிர்க்கு படபடப்பு கூடிவிட்டது .அவனுடைய ரூமிற்குள் யார் வருவதையும் அவன் விரும்ப மாட்டான் யாராக இருந்தாலும் கீழே இருந்து பேசி அனுப்பிவிடுவான் .

இப்பொழுது ஆட்கள் இருக்கும் போது ஏதாவது கோபத்தில் சத்தம் போட்டுவிடுவானோ என்ற பயம் வந்தது சுபத்திராவிற்கு.

அவள் ஐஸ்வர்யாவை மேலே மஹிந்தனின் ரூமிற்கு போவதை தடுக்கத்தான் பார்த்தாள். ஆனால் ஐஸ்வர்யாவின் அம்மா கல்யாணம் ஆகப்போகும் சின்னஞ்சிறுசுகள் ஏதாவது தனியாக போச நினைப்பார்கள் சுபத்திரா நாமும் அவர்களின் வயதைக் கடந்துதானே வந்திருக்கிறோம் என்றவள், உனக்கு ஐஸ்வர்யா மஹிந்தனுடன் அவன் ரூமில் பேசுவதற்கு ஆட்சேபனை இருக்காது என்று தான் நினைக்கிறேன், என்று சிரித்தபடி கூறினார் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.